சங்பரிவாரம் தன்னை எப்போதும் கட்டுப்பாடான அமைப்பாக பெருமையடித்துக் கொள்வது வழக்கம். குருஜி வழிபாடு கொண்ட பாசிச அமைப்பல்லவா? அதன் வழிவந்த அரசியல் அமைப்பான பா.ஜ.க.வின் தொண்டர்களும் மிகவும் கட்டுப்பாடானவர்கள் போல் காட்டிக் கொள்வது வழக்கம்.
ஆனால் உண்மை என்ன? பதவிக்கும் - புகழுக்கும் கட்சி தலைமைக்குள்ளே அடிக்கடி அடிதடி நடப்பது வழக்கம். ஒருவர் காலை ஒருவர் வாரி விட்டு உள்ளூர சந்தோசப் பட்டுக் கொள்ளும் அமைப்பே பா.ஜ.க.
ஹேகேனக்கல் விசயத்தில் கர்நாடக பா.ஜ.க. (தமிழக பா.ஜ.க.) அடித்த அரசியல் ஸ்டண்ட் தமிழகத்திலும் - கர்நாடகத்திலும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இரு மாநில மக்களும் ஒருவரை ஒருவர் பகைமை உணர்வோடு பார்க்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. பா.ஜ.க.வின் இந்த சீர்குலைவை எதிர்த்து இன்று பு.தொ.வி.மு. வகையறாக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
தி.நகரில் உள்ள மாநில அலுவலகமான கமலாலயத்தில் இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் (சிலர் குண்டர்களாக இருந்தனர். அவர்களது பேச்சு கேட்பவர் காதை மூடிக் கொள்ளும் அளவிற்கு இருந்தது.) கொஞ்ச நேரத்தில் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த சிலர் பாரத மாதா கி ஜே என்று முழங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்களையெல்லாம் உள்ளே போகுமாறு அறிவுறுத்திக் கொண்டிருந்த பா.ஜ.க. தலைவர் ஒருவரை இன்னொரு ஜி தாக்க... அவ்வளவுதான் கைகலப்பு முற்றி விட்டது. கேமராக்களிலிருந்து தப்புவதற்காக மீண்டும் பாரத மாதா கி ஜே என்று உரக்க முழங்கினர். கட்டுப்பாடான கட்சின்னு சொன்னாங்களே அது இதானான்னு அங்கிருந்த மக்கள் சரியாக புரிந்து கொண்டிருந்தனர். கட்டுப்பாடான கட்சியா? கட்டிப் புரளும் கட்சியா?
வழிபோக்கர் ஒருவர் இந்த வீரத்தை கொஞ்சம் எடியூரப்பாவிடமாவது காட்டியிருக்கலாமே என்று கூறிக்கொண்டே சென்றது நல்ல காமெடியாக இருந்தது.
April 05, 2008
பாரத மாதா கி ஜே
April 01, 2008
பாசிசத்தின் இரு முகங்களே மதவெறியும், இனவெறியும்
தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் திட்டமே 'ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்' மேற்கண்ட இரண்டு மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மாசுபட்டு - ப்ளோரைடு எனும் ஆபத்தான இரசாயணம் கலந்துள்ளதால் அம்மாவட்ட மக்கள் நல்ல - தூய்மையான குடிநீரின்றி அவதிக்கு உள்ளாகி வருகின்னர்.
கிட்டத்தட்ட மாவட்டம் முழுவதும் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த குடிநீருக்காக ஏங்கி இருக்கின்றனர்.இந்த நேரத்தில் ப்ளோரைடின் ஆபத்தையும் அறிந்து கொள்வது நல்லது. ப்ளோரைடு கலந்த நீரை அருந்துவதால் கருச்சிதைவு. முட்டிகள் முடங்குதல். பற்கள் கரைபடிந்து வெளிறிப்போகுதல் உட்பட பல வித நோய்களை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் தமிழக அரசின் சீரிய முயற்சியால் ஜப்பான் வங்கியின் உதவியுடன் இந்த திட்டத்தை 1334 கோடி ரூபாயில் நிறைவேற்ற முன்வந்துள்ளது நெஞ்சில் பால்வார்த்தால் போல் இருந்தது இம்மக்களுக்கு!
தேசிய முகமூடி அணிந்து திரியும் பா.ஜ.க. தமிழகத்தில் ஏற்கனவே சேது சமுத்திர திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்டதைப் போல் இந்த திட்டத்தையும் முடக்க சதித் திட்டம் தீட்டி செயலாற்றி வருகிறது. கருநாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள பின்னணியில் பா.ஜ.க.வின் புறவழி முதல்வர் எடியூரப்பா தலைமையில் தமிழக எல்லையில் உள்ள ஓகேனக்கல்லில் நுழைந்து "நமதே நமதே ஒகேனக்கல் நமதே" என கோஷமிட்டு, இந்த திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
சங்பரிவாரம் தன்னுடைய சுயநல அரசியலுக்காக மதவெறியை மட்டுமல்ல - இனவெறியையும் கூட பயன்படுத்தும் என்பதை இதன் மூலம் வெட்கம் இல்லாமல் அறிவித்துள்ளது. வருங்கால பிரதமர் அத்வானி முதல் செயல்படாத பிரதமர் வாஜ்பாய் வரை எந்த தேசிய தலைவரும் பா.ஜ.க.வின் இந்த பித்தலாட்ட செயல்பாட்டை கண்டிக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் தமிழர்களுக்கு எதிராகவும் - தென்னிந்தியர்களுக்கு எதிராகவும் கொம்பு சீவி விட்டு வளர்ந்த சிவசேனா இன்றைக்கு இந்தி பேசும் மக்களுக்கு எதிராக முட்டிக் கொண்டிருக்கிறது. இத்தகைய கேடு கெட்ட இனவெறியர்களோடு - எப்போதும் நகையும் சதையும் போல் உறவாடும் பா.ஜ.க.விற்கு என்ன கொள்கை உண்டு? மகாராஷ்டிராவாக இருந்தாலும் - கருநாடகமாக இருந்தாலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும். அதற்காக எல்லா இழிவான செயல்களையும் செய்யத் தயங்காத பாசிச மதவெறிக் கூட்டத்தின் கையில் இன்றைக்கு பூமாலையாக கிடைத்திருப்பது ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்.
தமிழகத்திற்கு சொந்தமான - தமிழக எல்லைக்குள் இருக்கிற இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கருநாடகத்தில் உள்ள இனவெறியையே தொழிலாக கொண்டுள்ள அமைப்புகளைக் கூட முந்திக் கொண்டு சங்பரிவாரம் களத்தில் இறங்கியுள்ளது. ஓகேனக்கல்லை மீட்கப் போகிறதாம்!ஒரே மக்கள் - ஒரே தேசம் - ஒரே நாடு என்று கொள்கை பேசும் மதவெறி கும்பலின் இழிவான கொள்கைக்கு இதைவிட வேறு சாட்சியே வேண்டாம்.
இந்த விசயத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் இரண்டு மாநில மக்களின் ஒற்றுமையை பாதுகாக்கும் முகமாகவும் - மாநிலங்களின் உரிமைப் பிரச்சினைகளில் அத்துமீறித் தலையிடும் அடாவடிப் பேர்வழிகளுக்கு எதிரகாவும் கடுமையாக நடவடிக்கை எடுத்து இந்த கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றிட துரிதமாக செயலாற்றிட வேண்டும். மதவெறி கும்பலின் பசப்பு வேலைகளுக்கு இரண்டு மாநில மக்களும் இடம் கொடாமல் செயலாற்றிட வேண்டும். மதவெறியும் - இனவெறியும் மக்களை சுடுகாட்டிற்கே அழைத்துச் செல்லும்.பா.ஜ.க. துவக்கி வைத்த ஓகேனக்கல் ஆடு - புலி ஆட்டத்தில் வீழப் போவது மதவெறியாக அமையட்டும்.
இதுபோன்ற பிரச்சினைகளில் ஜனநாயக சக்திகள் - மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். அதுவே அவர்களுக்கு வைக்கும் மீள முடியாத செக்காக அமையும்.
Subscribe to:
Posts (Atom)

