January 23, 2010

சந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்


சந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

விலாசம்

2/3, ஐயாபிள்ளை கார்டன் தெரு
காலடிப்பேட்டை
திருவொற்றியூர்
சென்னை

இன்று (23.1.2010) மாலை 4 மணிக்கு திருவொற்றியூரில் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெறும்

29 comments:

Anonymous said...

பெரிய அளவுக்கு அவரோடு பழகிய அனுபவம் இல்லையென்றாலும், மூன்று நாட்கள் திருவனந்தபுரத்தில் நடந்த ஊடகப் பட்டறையில் தோழர்கள் எஸ்.ஏ.பி, பேராசிரியர் சந்திரா, முருகன், எஸ்.பி.ராஜேந்திரன் ஆகியோரோடு நாங்கள் இருவரும் இருந்தோம். அப்போதுதான் வலைப்பதிவுலகத்தில் நாம் செய்ய வேண்டியவை ஏராளமான இருக்கிறது என்பதை வலியுறுத்திப் பேசினார். அதன்பிறகுதான் எனது வலைப்பூ உருவானது.

எத்தகைய தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார் என்பதற்கு "அதி தீவிரவாதிகள்" அவரைத்தாக்கி தொடர்ந்து எழுதிவந்ததே சாட்சி. மகஇகவினரைப் பார்த்து உங்கள் திட்டம் எங்கே என்று கேட்டு ஓட ஓட விரட்டினார் சந்திப்பு செல்வப்பெருமாள். அவர் எழுதுவதை நிறுத்தியபிறகுதான் மாதவராஜ் மற்றும் என்னைப் போன்றவர்களை "எங்கிருந்தாலும் மேடைக்கு அருகில் வரவும்" என்று கூப்பிட்டு வம்புக்கு இழுத்தார்கள்.

இனி நமது "சந்திப்பு" எப்படி நடக்கும், தோழர் செல்வப்பெருமாள்..?

Ganesh said...

பெரிய அளவுக்கு அவரோடு பழகிய அனுபவம் இல்லையென்றாலும், மூன்று நாட்கள் திருவனந்தபுரத்தில் நடந்த ஊடகப் பட்டறையில் தோழர்கள் எஸ்.ஏ.பி, பேராசிரியர் சந்திரா, முருகன், எஸ்.பி.ராஜேந்திரன் ஆகியோரோடு நாங்கள் இருவரும் இருந்தோம். அப்போதுதான் வலைப்பதிவுலகத்தில் நாம் செய்ய வேண்டியவை ஏராளமான இருக்கிறது என்பதை வலியுறுத்திப் பேசினார். அதன்பிறகுதான் எனது வலைப்பூ உருவானது.

எத்தகைய தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார் என்பதற்கு "அதி தீவிரவாதிகள்" அவரைத்தாக்கி தொடர்ந்து எழுதிவந்ததே சாட்சி. மகஇகவினரைப் பார்த்து உங்கள் திட்டம் எங்கே என்று கேட்டு ஓட ஓட விரட்டினார் சந்திப்பு செல்வப்பெருமாள். அவர் எழுதுவதை நிறுத்தியபிறகுதான் மாதவராஜ் மற்றும் என்னைப் போன்றவர்களை "எங்கிருந்தாலும் மேடைக்கு அருகில் வரவும்" என்று கூப்பிட்டு வம்புக்கு இழுத்தார்கள்.

இனி நமது "சந்திப்பு" எப்படி நடக்கும், தோழர் செல்வப்பெருமாள்..?

அர டிக்கெட்டு ! said...

தோழர் செல்வபெருமாள்!

தவறான ஒரு கட்சியுடன (சிபிஎம்)் அவர் இணைந்திருந்தாலும், தவறான தலைமையினால் அவர் வழிநடத்தப்பட்டிருந்தாலும். ஒரு சந்தர்ப்பவாத அரசியல் கொள்கையை பிரச்சாரம் செய்ய இவரை அவரது கட்சி பயன்படுத்தியிருந்தாலும், இணையவே முடியாத கோடுகளாக தீவிர அரசியல் முரண்பாடு கொண்டிருந்தாலும் தோழர்.செல்வபெருமாளின் மறைவு, மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. உயிர்கொல்லி நோயினால் பீடிக்கப்பட்டிருந்த இவர் எழுதுவதை நிறுத்தியபின்னர் சி.பி.எம் கட்சியில் வேறு எவருமே இவரின் செய்து வந்த வேலையை தொடராமல் போனது செல்வபெருமாள் எனும் தனிநபரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. இப்படிப்பட்ட நபரை சந்திக்க முயலாமலே இருந்த்து தவறோ என இப்போது சிந்திக்க தூண்டுகிறது. தோழருக்கு செவ்வணக்கம். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

துளசி கோபால் said...

ஐயோ.... இதென்ன சேதி?

வருத்தமாக இருக்கிறது.

சகவலைப்பதிவாளர் மரணசெய்தி மிகுந்த துன்பத்தைத் தருகிறது.

அன்னாருக்கு எங்கள் அஞ்சலிகள்.

Unknown said...

தோழர் செல்வபெருமாள் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.

யுவகிருஷ்ணா said...

தோழர் சந்திப்புக்கு வீரவணக்கம்

பகுத்தறிவு said...

தோழர் மாதவராசின் வலைப்பூ வழியே செய்தி அறிந்தேன்.. ஆழ்ந்த இரங்கல்கள்...

வினவு said...

தோழர் செல்வப்பெருமாளுக்கு எமது அஞ்சலி!

manjoorraja said...

நண்பரின் இழப்பு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.

விடுதலை said...

வலைப்பதிவுலகத்தில் தனக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கி இடதுசாரி கருத்துகளை முதலில் பரப்பிய தோழர் செல்வபெருமாள். சந்திப்பு என்ற தனது வலைப்பூ மூலம் மட்டுமே எனக்கு அறிமுகம் ஆனதோழர் இறந்த சேதி என்ணை மிகவும் பாதித்துள்ளதோடு ஒரு அகச்சிறந்த தோழர் நம்மோடு இல்லை என்று நினைப்பதே வருத்தமளிக்கிறது. சமரசமற்ற போராளியின் குணத்தோடு தொடர்ந்து தனது கட்சி பணிகளுக்கு இடையில் தொடர்ந்து அவர் ஆற்றிவந்த பணி அவரின் உடல்நிலை காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் முதல் அவர் எழுதவில்லை என்றதும் சரியான இடதுசாரி சிந்தனையை தனது எழுத்துகளால் வலைப்பூவில் பரவசெய்த தோழரின் இழப்பு இட்டுநிரப்பமுடியாத வெற்றிடமாக தொடரும். சந்திப்புக்கு எனது வீரவணக்கம்

குழலி / Kuzhali said...

மிக வருத்தமான செய்தி, தோழர் சந்திப்பு அவர்களுடன் தொடர்ந்த எமது விவாதங்கள் என்றும் நினைவில் நிற்பவைகள், அதிர்ச்சியடைய வைத்த விசயம்... அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

enRenRum-anbudan.BALA said...

நேரில் சந்தித்ததில்லை என்றாலும், எனது சில இடுகைகளில் பின்னூட்டி கண்ணியமாக விவாதித்திருக்கிறார். நானும் அவரது இடுகைகளை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன்.

அதிர்ச்சியான செய்தி! மனது பாரமாக உள்ளது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்.

யாநிலாவின் தந்தை said...

இடதுசாரி சிந்தனைகளை நேர்மையாக சொல்வதற்கும், அதிதீவிரவாதிகளின் தவறான பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்கவும் சரியான இணையதளமோ பதிவோ இல்லையே என நான் ஒரு நாள் ஒரு தோழரிடம் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்போது அவர், "தோழர் செல்வபெருமாள் சந்திப்பு என்கிற பெயரில் பதிவு எழுத துவங்கியிருக்கிறார்" என்றார். அன்று முதல் தினமும் அலுவலகம் வந்ததும், செல்வபெருமாள் ஏதேனும் புதிதாக இன்று எழுதி இருக்கிறாரா என பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். அவருடன் நிறைய விவாதித்திருக்கிறேன் (வேறு வேறு பெயர்களில்). இரண்டு அல்லது மூன்று முறை அவரை நேரில் பார்த்திருக்கிறேன், ஆனால் பேசியதில்லை. நிச்சயமாக அவரது மறைவு ஒரு பேரிழப்புதான் என்னை போன்றோர்க்கு. அவரது பதிவுகளை அச்சில் ஏற்ற முடிந்தால் அதுவே நாம் அவருக்கும் அவரது பதிவுகளுக்கும் செய்யும் அஞ்சலி.

தமிழவன் said...

கோட்பாடுகளிலும், கொள்கைகளிலும் எத்தனை மாறுபட்ட முரண்நிலைகள் இருப்பினும், சமூக பரப்பில் தன்னை இருத்தி பொருளாதார சிக்கல்களுக்கு நடுவே புரட்சிகர இயக்கங்களுக்குள்ளும், வெளியே வெகுஜன அமைப்புகளுக்குள்ளூம், செயல்படுவதும் விவாதிப்பதும் இன்றைய சூழல் சிக்காலானதெனினும் அதையெல்லாம் கடந்தும், கடமையாற்றியும், இணைய பரப்பில் ம க இ க வினரோடும், ஏனைய இடதுசாரி எதிர்ப்பாளர்களோடும், மிகக் கடுமையான கருத்துப்போரையும் தோழர்.செல்வப்பெருமாள் நடத்தி வந்தவர் என்பதை அறிவோம். அவரின் இழப்பு விவாத அரங்கில் ஓர் வெற்றிடம்தான். அவருக்கு குழந்தைகள் அனைத்தும் சிறுவயது என்று அறியும்போது மனசு வருத்தமாக உள்ளது. அவரின் இழப்புக்களால் துயருறும் அத்துனைபேருக்கும், குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அஞ்சலிகள், செவ்வணக்கம்!

Muthu said...

நண்பரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்குகிறேன்.

மிக கண்ணியமான முறையில் பல விவாதங்களில் பங்கு பெற்றுள்ளார்.

மணியன் said...

இன்றுதான் இத்துயரச்செய்தி அறிந்தேன்.அவருடன் நேரில் பழகியில்லாவிடினும் அவரது பதிவுகளை விரும்பிப் படித்து வந்து அவருடன் விவாதித்தவன் என்ற முறையில் அவரது இழப்பினால் மிகுந்த துயரம் கொண்டுள்ளேன். அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்;அவரது இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Sindhan R said...

தோழன் மறைவுக்கு .. ஆழ்ந்த அஞ்சலிகள் .. வளைதளத்தில் இவர் செய்த பணி முக்கியத்துவம் வாய்ந்தது .. எப்போதும் செல்வப்பெருமாள் எங்கள் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார்...

illakkia.blogspot.com said...

அன்புத் தோழர் செல்வபெருமாளுடன்
நேரடிப் பழக்கம் ஒருசில மணி நேரங்கள்தான்.
ஆயினும் என்னை அந்த ஒருசில மணி நேரத்திற்குள் எனக்காக ஒரு இடுகையை ஏற்படுத்தி அதைச் செயல்முறைப்படுத்திட வைத்த பெருமை தோழர் செல்வபெருமாள் அவர்களையே சாரும்,
அதுமட்டுமல்ல. இந்தச் சிறுவயதில் (உண்மையில் சிறுவயதுதான்) கணினி தொடர்பாகவும் இணையம் தொடர்பாகவும் ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்து அதனைப் பயன்பாட்டிற்கும் மாற்றிய பெருமை செல்வபெருமா-ளுக்கு உண்டு.
தோழர் செல்வபெருமாள்.
இலக்கியா இடுகை உயிருடன் இயங்கிக்கொண்டிருக்கும்வரை அது உங்களின் அன்புக் கட்டளையைச் செயற்படுத்திக் கொண்டிருக்கும்,
உங்களை என்றென்றும் நினைத்துக்கொண்டிருக்கும்
தோழமையுள்ள
ச.வீரமணி

"உழவன்" "Uzhavan" said...

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்

KANTHANAAR said...

செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்
அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

கந்தசாமி

IZZATH said...

With deep sorrow I submit my deepest condolences for COMRADE SELVA. I had a lot of discussions with him about COMMUNIST IDEOLOGY. It was a big shock to know about his sudden death.
Izzath
Izzath@hotmail.com

Unknown said...

தோழர் சந்திப்பின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.
தோழருக்கு செவ்வணக்கம்!

அவரது குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த வருத்தங்கள்..

தோழமையுடன்,
க.அருணபாரதி

கல்வெட்டு said...

.

இயற்பெயர் இபோதுதான் தெரியும்.
சந்திப்பு ஆகவே ஒவரிடம் பலமுறை உரையாடல்களில் ஈடுபட்டதுண்டு. இவரின் கட்சி சார்புக்காக பலமுறை நக்கல் பின்னூட்டங்கள் இட்டதுண்டு.

இன்று இவர் இல்லை.

தோழர் செல்வபெருமாள் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.

.

DJ said...

very sad news to hear it :-(.
My deepest condolence to his family and friends.

alagumukilan said...

I was not knowing that Sevaperumal is the author of Sadippu Blog. I came to know thru Theekkathir. Really my heartfelt condlences to him. I also read hw was surviving with three daughters. If anybody collects fund for his family, please cascade it to all.

۞உழவன்۞ said...

அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
From-Swiss

பனித்துளி சங்கர் said...

இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.

thiru said...

my hearty condolences to Selvaperumal's family :(

என். மருத்துவமணி said...

ஒடுக்கப்பட்டோர் குரலை எதிர்ரொலித்த
தோழர் செல்வ பெருமாள்...!

அனைவரும் எதிர்பார்த்திருந்த ஒரு துயரம் அரங்கேறி விட்டது.
துயரம் தொண்டையை அடைக்கிறது.
ஆனாலும் என் செய்வது!
மனம் தன்னைதானே தேற்றிக்கொள்கிறது. அவர் துயரத்தை மட்டுமா விட்டுச்சென்றார்? இல்லை!
அர்ப்பணிப்பு உணர்வின் மாண்பையும், மார்க்சிய ஒளியில் நாம் தேடிவேண்டிய அரிய மனிதத்தையும் தான். மக்களோடு இணைந்து கொள்வது எப்படி? என்ற கலைக்கு சொந்தக்காரராய் அவர் இருந்தார். அந்த அரிய பொக்கிஷத்தை_அந்த அரியகல்வியை அவர் தம்மிடம் விட்டு சென்றுள்ளார். அந்த பாடத்தை படித்து கற்க வேண்டியது நம் பொறுப்பு.
அவர் யார்?
அவர் தான் தோழர் செல்வ பெருமாள்!
அவரிடம் பன்முகத்தன்மைகள் இயல்பாகவே குடிகொண்டிருந்தது. இது அவருடன் நெருங்கிப் பழகிய தோழர்கள் அறிந்தவை_உணர்ந்தவை.
தான் கற்ற மார்க்சியக் கல்வியை களப்பணிகளில் பயன்படுத்த அவர் தவறவில்லை.
வாசிப்பும், தேடுதலும், மற்றவரை நேசிப்பதிலும் முன்னுதாரணமாய் விளங்கினார் என்பது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல!
அவர் மார்க்சிஸ்ட் மாத இதழில் எழுதிய கட்டுரைகள், மார்க்சியத் தேடலில் அவருக்கு இருந்த ஆர்வத்தை_எதையும் கசடற கற்கவேண்டும் என்ற புலமையை புலப்படுத்துவதாய் இருந்தது.
அவரைக் கவரும் கட்டுரைகள், செய்திகள், நூல்கள் ஆகியன குறித்து அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ள அவர் தவறியதே இல்லை. அதைப்போலவே பல தோழர்கள் எழுதும் அரசியல், இலக்கியம், சமூகப் பொருளாதாரக் கட்டுரைகள் குறித்த தனது கருத்தைப் பகிர்ந்து கொள்ளும் பண்பும் அவருக்கு இருந்தது.
அவர் வாழ்ந்த பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை எதிர்ரொலிப்பவராய் இருந்தார். அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு அவர்களின் ஒற்றுமையிலும், தெருவுக்கு வந்து போராடும் போர்க் குணத்தின் மூலமே தீர்க்க முடியும் என்று நம்பிகையூட்டுவதில் ஏனையத் தோழர்களோடு இணைந்து செயல்பட்டார்.
இதன் மூலம் தன்னுடன் களப்பணியாற்றிய தோழர்களுக்கு கூட்டுசெயல்பாட்டின் மகத்துவத்தை அறியச்செய்வதில் தோழர் செல்வ பெருமாள் முன்னின்றார்.
மாற்றுக்கருத்து உள்ளவர்களுடன் கருத்துப்போரை நடத்தும் பாங்கு அவருக்கே உரிய ஒன்று. எதிரில் தன்னுடன் விவாதிப்பவர் எவராய் இருப்பினும் தனது கொள்கை நிலையில் கால் பதித்து; அவர்களுடன் நளினமாக விவாதிப்பதில் கெட்டிக்காரராய் விளங்கினார். அவ்வாறு விவாதிக்கும் போது தனது கருத்தை ஏற்கவைப்பதில் சிரமம் இருப்பினும் அவர்களுடனான நட்பை தொடர்வார்_போற்றுவார். இந்த அணுகு முறை மற்றத் தோழர்களிடமிருந்து இவரை வித்தியாசப்படுத்திக் காட்டியது. இத்தகைய அணுகுமுறை மூலம் காலப்போக்கில் மாற்றாரும் தன்னையும், தான் சார்ந்த இயக்கத்தையும் மதிக்கும்படி செய்யும் ஆற்றல் இவரிடமிருந்தது.
இவ்வாறு பல நேர்த்தியான பண்புகளை தோழர். செல்வபெருமாள் என்ற கருத்துப் போராளி நமக்கு கொடையாக விட்டுச் சென்றுள்ளார். கருத்துப் போரை நடத்துவதெற்கென்று ஒரு இணைய தளத்தை நடத்தினார் என்பது விசித்திரம் அன்று. கருத்துப் போரின் முக்கியத்துவம் எத்தகையது என்பதை அவர் உணர்த்திருந்ததால், உணர்வுபூர்வமாக இப்பணியை அவர் செய்து வந்தார். இதனை களப்பணிகளோடு இணைக்கவும் அவர் தவறியதில்லை என்பதுதான் அவரின் தனிச்சிறப்பு.
வள்ளுவன் சொல்கிறான்.
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல். (233)
உலகத்திலே ஒப்பற்ற ஒரு பொருள் உயர்ந்த புகழை பெருவது. அதுவே அழிவில்லாமல் நிலைத்து நிற்கக் கூடியது. இதுவே இக் குறளின் பொருள்.
அத்தகையப் புகழருக்கு உரியவராய். அழிவில்லாமல் தோழர்களின் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கக் கூடியவராய் தோழர் செல்வபெருமாள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இதற்கு அவரது இறுதி ஊர்வலம் சாட்சியமாய் அமைந்தது.
கருத்துப் போரை உணர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியனாக - களத்தில் ஒடுக்கப்பட்டோரின் குரலுக்கு செவிசாய்த்த உன்னத தோழனாக தோழர் செல்வபெருமாள் வாழ்ந்து மறைந்துள்ளார்.
தோழர் : செல்வபெருமாள் என்ற செங்கொடிப் புதல்வனுக்கு நம் வீரவணக்கம் உரித்தாகட்டும்.

என். மருத்துவமணி