February 28, 2008

படைப்பாளியை இழந்த தமிழுலகம்!

எழுத்தாளர் சுஜாதா மறைவு தமிழக எழுத்துலகிற்கு ஒரு இழப்பே. தமிழ் எழுத்துலகில் மிக முக்கியமான இடத்தை வகித்தவர் சுஜாதா. தன்னுடைய இறுதிக்காலம் வரை தன்னுடைய எழுத்தை தமிழ் மக்களிடையே கொண்டுச் சென்றவர்.
குறிப்பாக அறிவியல் கருத்துக்களை - சுடச் சுட பரவலான தமிழ் வாசகர்களிடையே கொண்டுச் சென்ற பெருமை சுஜாதாவை சேரும். இவரது அறிவியல் கருத்துக்களின் பால் மாணவர்கள் - இளைஞர்கள் வெகுவாக ஈர்க்கப்பட்டனர். அதேபோல் இவரது சிறுகதை - நாவல் - தமிழிலக்கியம் போன்ற அம்சங்கள் வெகுஜனங்களை ஈர்க்கக்கூடியதாக இருந்தது.
இவரது எழுத்துக்கள் மற்றும் கருத்துக்கள் குறித்து அவரது காலத்திலேயே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும் இவையனைத்தையும் தாண்டிச் சென்று பார்க்கும் போது ஒரு படைப்பாளியை தமிழகம் இழந்து விட்டது.
இவரது புத்தகமான "கடவுள் இருக்கிறாரா?" புத்தகத்தை கடைசியாக நான் வாசித்தேன். அது ஒரு தொகுப்புதான். அந்த புத்தகத்தை படித்து முடித்தபோது எந்த முடிவுக்கும் வரமுடியாமல் முடித்திருப்பார். அதற்குள் ஒளிந்துக் கொண்டிருப்பது அனைத்தையும் கடந்து கடவுள் இருக்கிறார் என்பதையே மறைமுகமாக நிறுவியிருப்பார். விஞ்ஞான கருத்துக்களை மக்களிடம் கொண்டுச் செல்லும் அதே நேரத்தில் - ஒரு கருத்து முதல்வாதியாகவே இவரது சிந்தனைகள் இருந்ததை பார்க்க முடியும். இந்த விமர்சனத்தை இந்த நேரத்தில் வைப்பது சரியா? என்று பலரும் கேள்வி எழுப்பலாம். இந்த நேரத்தில் நினைவு கூறும் போது அவரது பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் இரண்டையும் சமமாக பார்க்க வேண்டியுள்ளது.
மொத்தத்தில் ஒரு நல்ல படைப்பாளியான சுஜாதாவிற்கு தமிழகம் அஞ்சலி செலுத்த கடமைப்பட்டுள்ளது. சந்திப்பு தன்னுடைய அஞ்சலியை இங்கே பதிவு செய்கிறது.
அவரது படைப்புகளில் சிறந்தவற்றை அடையாளம் காணுவோம். அந்த வழியில் இளம் படைப்பாளர்களை பயணிக்கச் செய்வோம்.!


அவரது படைப்புகள்

சுஜாதாவின் முதல் கதை:1953ம் ஆண்டு சிவாஜி என்ற வார இதழில் சுஜாதாவின் முதல் கதை வெளியானது. அதன் பின்னர் அவரது கதைகள் பெரிய அளவில் வரவில்லை. ஆனால் 1962ம் ஆண்டு முதல் அவரது கதைகளும், படைப்புகளும் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன. அன்று முதல்அவரது இறுதி மூச்சு வரை எழுதிக் கொண்டே இருந்தார் சுஜாதா.சுஜாதாவின் படைப்புகளில் 10 அறிவியல் நூல்களும், 10 நாடகங்களும் அடங்கும்.கனையாழியில் இடம் பெற்ற சுஜாதாவின் கடைசிப் பக்கம், மிகவும் பிரபலமானது. இதைத் தொடர்ந்து பல்வேறு இதழ்களிலும் சுஜாதாவின் பக்கங்கள் இடம் பெற்றன.அறிவியலை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அழகாக விளக்கி பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் சுஜாதா. அவரது அறிவியல் கேள்வி-பதில் பகுதிகள் ரொம்பப் பிரசித்தமானவை.கம்ப்யூட்டர்கள் குறித்தும், மனித மூளை குறித்தும் அவர் பல நூல்களை எழுதியுள்ளார். தகவல் தொழில்நுட்பம், தமிழ் எழுத்துருக்கள் உள்ளிட்டவை குறித்தும் அவர் ஏராளமாக எழுதியுள்ளார். இவரது ஆலோசனையைக் கேட்டு பயன் அடைந்த தகவல் தொழில்நுட்பத் துறையினர் பலர். இவரது ஆலோசனையின் பேரில் உருவான எழுத்துருக்களும் கணிசமானவை.ஆங்கில கம்ப்யூட்டர் வார்த்தைகளுக்குப் பதிலாக, அவற்றுக்கு இணையான தமிழ் வார்த்தைகள் ஏராளமானவற்றை தொகுத்து வைத்துள்ளார் சுஜாதா.எழுத்துத் துறையில் சகலகலா வல்லவனாக, சகல பிரிவினருக்கும் தோழமையாக திகழ்ந்த சூப்பர் எழுத்தாளர்தான் சுஜாதா.கட் அவுட்:எழுத்தாளர் ஒருவருக்கு முதன் முதலாக கட் அவுட் வைக்கப்பட்டது சுஜாதாவுக்குத்தான். ஆனந்த விகடனில் வெளியான அவரது நாவல்களான கனவு தொழிற்சாலை மற்றும் பிரிவோம் சந்திப்போம் பாகம்1, 2 ஆகியவற்றுக்காக விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன், சுஜாதாவுக்கு அண்ணா சாலையில் கட் அவுட் வைத்துப் பெருமைப்படுத்தினார்.

நன்றி : தட்ஸ் தமிழ்

February 27, 2008

அசுரனும் - பகத்தும் ஒரே நாணயத்தின் இரண்டு முகங்கள்!


இணையத்தில் பல நேரங்களில் சுடான விவாதங்கள் ஆரோக்கியமாக நடைபெறுவதுண்டு. இதைவிட கூடுதலாக தனிநபர் தாக்குதல் - ஜாதி அடிப்படையிலான இழி தாக்குதல் வெகுஜோராக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். அந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் அசுரனும் பகத்தும்.
முதலில் ஒரு விசயத்தை தெளிவுபடுத்திட வேண்டியுள்ளது. அசுரனும் அவரது தோழர்களும் யாரும் ஒரிஜினல் பெயரைப் பயன்படுத்துவதில்லை. எல்லாம் அனானி முகமூடிகளே... சொல்லப்போனால் ஒருவரே பல முகமூடிகளை அணிந்துக் கொண்டு வேட்டையாடும் நரித்தனமே இவர்களிடம் மிஞ்சுகிறது.
இவர்களது கடைச் சரக்கு மார்க்கெட்டில் வியாபாரமாகவில்லை என்ற (மக்களுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை) ஒரே நோக்கத்திற்காக எப்போதும் சி.பி.எம். வாலைச் சுற்றி வருவதுதான் இவர்களது வழக்கம். (ஒரு சி.பி.எம். தோழர் இவர்களிடம் மாட்டினால் போதும் அதுவே இவர்களின் மகத்தான புரட்சி என்று மனதிற்குள் கொக்கரித்துக் கொள்வார்கள்.)
தொடர்ந்து நான் முன்வைக்கும் விமர்சனங்களில் ஒன்று: இவர்களது கட்சியின் பெயரை எங்கும் இவர்கள் பயன்படுத்துவதில்லை. இவர்களது கொள்கை இதுதான் என்று வெளிப்படையாக அறிவிப்பதில்லை. இவர்கள் பேசும் மார்க்சியம் என்பது நாட்டில் உழைக்கும் மக்களின் காவலனாக குரல் கொடுத்து வரும் - போராடி வரும் சி.பி.எம். மற்றும் இதர இடதுசாரிகளைத் தாக்குவதுதான் இவர்களது முதன்மையான நோக்கம். இன்னும் சொல்லப்போனால் இவர்கள் பாசையில் முதல் வர்க்க எதிரி சி.பி.எம். (இதனால்தான் இவர்கள் பச்சையாக ஏகாதிபத்தியத்திற்கு கூலியாளாக செயல்பட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.)
இவர்கள் முன்வைக்கும் விமர்சனம் என்பது ஆரோக்கியமான சுழலை கெடுப்பதாகவே அனைத்து இடத்திலும் காண முடிகிறது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இழிவுபடுத்திப் பேசுவது. நாகரிகமற்றுப் பேசுவது என்பது இவர்களத வாடிக்கை. இவர்களைப் பொறுத்தவரை எப்போதும் விவாதம் இணையத்தில் நடைபெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் இவர்களை புரட்சிகரமானவர்கள் - இவர்களே மக்களைக் காக்க வந்த கையாலாகத - நடைமுறையற்ற அசுரர்கள் என்பதை அறிந்துக் கொள்வதற்காக.
அடுத்து இவர்கள் தங்களை மார்க்சிய மேதைகளாக காட்டிக் கொள்வதற்கு - லெனின் - மார்க்சு - எங்கெல்ஸ் - மாவோ... என்று மேற்கோள் காட்டி அனைவரையும் திக்குமுக்காடச் செய்வார்கள். ஆனால் மருந்திற்கு கூட மார்க்சியத்தை நடைமுறையில் பரிட்சித்துப் பார்கக் மாட்டர்கள். அனுபவத்தில் இருந்தும் எதையும் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். குருட்டு மார்க்சியர்கள்.
உதாரணமாக ரஷ்ய சமூக நிலைமையும் - சீன சமூக நிலைமையையும் அப்படியே இந்தியாவில் நிலவுவதாக கருதுவார்கள். அதனாலேயே லெனின் - மாவோ அந்தந்த நாடுகளின் நிலைமைக்கேற்ப கூறப்பட்ட தத்துவங்களை இந்தியாவிற்கும் அப்படியே பொருத்துப் பார்ப்பார்கள். அந்த பொருத்துதலில் யாரும் பிட்டாக வில்லையென்றால் அவர்கள் முதலாளித்துவவாதிகளாக இவர்கள் கண்ணில் தெரிவார்கள்!
ரஷ்ய டூமா என்பதே ஜாரின் வெறும் கைப்பொன்மையாக இருந்த ஒன்று. இந்த டூமா என்ற ஏற்பாட்டை கொண்டுவதற்கே நீண்ட நெடிய போராட்டம் அங்கே நடைபெற்றது. இந்த டூமாவையும் இந்திய பாராளுமன்றத்தையேயும் ஒன்றுபோல் சித்தரிப்பார்கள்.
ரஷ்யாவில் சமூக ஜனநாயக கட்சி பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த சமயத்தில் - வலுக்குறைந்து இருந்த சமயத்தில் லெனின் வழிகாட்டுதலில் அங்கு நடைபெற்ற தேர்தலில் ரஷ்ய சமூக ஜனநாயக கட்சி பங்கெடுத்தது. வேறொரு சமயத்தில் இயக்கமும் - சமூகமும் எழுச்சிக் கொண்டிருந்த சமயத்தில் தேர்தல் நடைபெற்றபோது அதனை லெனின் புறக்கணித்தார். அவரைப் பொறுத்தவரை பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதும் - பங்கெடுக்காததும் தொழிலாளி வர்க்கத்தின் நன்மையின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும். நமது மஞ்சள் காமாலை கண்ணர்களுக்கு இந்த நடைமுறை எப்பவும் புரியவே புரியாது. மேலும் பாராளுமன்றத்தில் பங்கெடுப்பது என்பது ஜர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்க்ம மேற்கொண்ட ஒரு நடவடிக்கை என்பதை மறைப்பதுதான் இவர்களது தந்திரம்.
அடுத்து 1917 - 1940 காலகட்டங்களில் நிலவிய சமூக அமைப்பு - நிலவிய ஜனநாயகத் தன்மை இவைகள் குறித்தெல்லாம் வறட்டுத்தனமான பார்வையை செலுத்துவதால் இப்போதும் கூட அதையே அமலாக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றனர் நமது துடியாடிகள்.
மொத்தத்தில் இவர்களது நடவடிக்கை புரட்சிகர சீர்குலைவுவாதமே இவர்களது மார்க்சியம். அதன் இணைய வாயாடிகளே அசுரனும்.....