Showing posts with label மக்கள் ஜனநாயக புரட்சி. Show all posts
Showing posts with label மக்கள் ஜனநாயக புரட்சி. Show all posts

July 24, 2007

இந்திய புரட்சியும் முப்பெரும் எதிரிகளும்!

ஸ்டாலின் விடுத்த அழைப்பும் அவரது கேள்வியும் மிக முக்கியமானது என்பதால் இதனை உடனடியாக பதிவிட்டுள்ளேன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். அவரது ஒரே ஒரு கேள்வியும் எனது பதிலும்!

//மக்கள் எப்போது புரட்சிக்கு தயாராவர்கள், நீங்கள் அவர்களை தயார் செய்வீர்களா அல்லது அவர்களே தயாராகி விடுவார்களா நீங்கள்தான் தயார் செய்வீர்கள் எனில் எந்த வழியில்?//


மக்கள் எப்போது புரட்சிக்கு தயாராவர்கள்?


இனியும் நடப்பில் இருக்கும் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அமைப்பில் தங்களுடைய வாழ்க்கையை தொடர முடியாது என்ற நிலை வரும்போது மக்கள் புரட்சிக்கு தயாராவார்கள்.


நீங்கள் அவர்களை தயார் செய்வீர்களா? அல்லது அவர்களே தயாராகி விடுவார்களா? நீங்கள்தான் தயார் செய்வீர்கள் எனில் எந்த வழியில்?


நீங்கள் என்ற பொருளை தாங்கள் எந்த அர்த்த்தில் குறித்துள்ளீர்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் நீங்கள் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்ற பொருளில் நான் புரிந்து கொள்கிறேன். அதையே இங்கு உபயோகப்படுத்துகிறேன்.
சமூகத்தில் பல்வேறு முரண்பட்ட கூறுகள் மோதிக் கொண்டுள்ளன. குறிப்பாக தொழிலாளிக்கும் - முதலாளிக்குமான முரண்பாடு. விவசாய தொழிலாளிக்கும் - நிலப்பிரபுவுக்கும் உள்ள முரண்பாடு. சிறு முதலாளிகளுக்கும் - பெரும் முதலாளிகளுக்கும் இடையிலான முரண்பாடு. பெரும் முதலாளிக்கும் - அந்நிய முதலாளிக்கும் உள்ள முரண்பாடு. இப்படி இன்னும் பல்வேறு முரண்பாடுகள் சமூகத்தில் நிலவுகிறது. இந்த முரண்பாடுகளில் ஒருவருக்கு ஒருவர் எதிரியாக இருந்தாலும் - அடித்தட்டு மற்றும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும் - நடுத்தர மற்றும் சிறு - குறு முதலாளிக்கும் இடையில் முரண்பாடுகளுக்கு முதன்மையான எதிரியாக இருப்பது. அதாவது. அவர்களது தலைவிதியை தீர்மானிக்கும் பொது எதிரியாக இருப்பது அந்நிய ஏகபோக முதலாளிகளும். இந்திய பெரும் முதலாளிகளும் - நிலப்பிரபுக்களும் இந்த எதிரி வர்க்கங்களின் ஏஜண்டுகளாக - காவல் புரியும் காங்கிரசு மற்றும் பா.ஜ.க. அல்லது இன்னபிற முதலாளித்துவ கட்சிகள் ஏவல் நாய்களாக செயல்பட்டு இறுதியில் திவாலாகும் நிலைக்கு தள்ளப்படும். இத்தகைய முப்பெரும் பொது எதிரியை வீழ்த்துவதற்கு தொழிலாளிகள் - விவசாயிகள் - நடுத்தர வர்க்கம் - சிறு முதலாளிகள் என பலதரப்பட்ட வர்க்கங்களின் கூட்டு செயல்பாடுகளாலும். போராட்டங்களாலும் ஒற்றுமையாலுமே இவை சாதிக்கப்படும்.

அந்த அடிப்படையில் மக்களின் பொது எதிரியாக இருக்கும் அந்த முப்பெரும் சக்திகளை வீழ்த்துவதற்கு உறுதி கொண்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் இத்தகைய எதிரிகளை முறியடிப்பதற்கு விரிந்த அளவிலான நட்பு சக்திகளை ஒருங்கிணைத்து ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கி அந்த முப்பெரும் சக்திகளை இறுதியில் உறுதியாக வீழ்த்தும்.இத்தகைய ஐக்கிய முன்னணியை உருவாக்குவது என்பது ஜி... பூம்பா என்றால் ஒரே நாளில் உருவாகி விடாது. அது நடப்பில் உள்ள காலத்திலும் அதற்கான வேலைகளை செய்ய வேண்டும். அதனை சி.பி.ஐ.(எம்) செய்து வருகிறது.

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளிகளை தொழிற்சங்கத்திலும். விவசாயிகள் - விவசாய தொழிலாளர்களை அந்தந்த சங்கத்திலும். பெண்கள்.வாலிபர்கள். மாணவர்கள். நடுத்தர வர்க்கம். அறிவு ஜிவிகள் என சமூகத்தில் உள்ள அனைத்து மக்களையும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினையின் அடிப்படையில் கோடிக்கணக்கில் வெகுஜன இயக்கத்தில் திரட்டிட வேண்டும். இவ்வாறு திரளும் மக்களை அரசியல் ரீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி. அதிலிருந்து வரும் சக்திகளை தொழிலாளி வர்க்கத்தின; தளகர்த்தர்களாக போராட்ட தளபதிககளாக உயர்த்திட வேண்டும். இவ்வாறு ஒரு வெகுஜன பிரளயத்தையே ஏற்படுத்திட வேண்டும். அத்தோடு நட்பு சக்திகளான இடதுசாரிகளோடும். இதர ஜனநாயக சக்திகளோடும் இணைந்து இயக்கம் காண்பதும் அவர்களுக்க பின்னால் உள்ள மக்களையும் புரட்சிக்கு ஆதரவாக திரட்டுவதும் அடிப்படையானது. அந்த அடிப்படையில் சி.பி.ஐ.(எம்) தன்னுடைய பாதையில் உறுதியாக முன்னேறி வருகிறது.

முப்பெரும் எதிரி சக்திகளுக்கு வேட்டு வைத்து மக்கள் ஜனநாயக புரட்சியை நடத்தவும் உறுதி கொண்டுள்ளது.


மேலும் இந்திய ஆளும் வர்க்கம் தன்னுடைய அதிகாரத்தை தானாக விட்டுக் கொடுக்காது. எனவே தன்னுடைய அதிகாரத்தை - எமர்ஜன்சியைப் போர் சர்வாதிகாரமாக எடுத்துக் கொள்ள அனைத்து விதமான ஜனநாயக அடக்குமுறைகளையும் அது மேற்கொள்ளும். அத்தகைய அடக்குமுறைகளை ஒடுக்கி தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அதிகாரத்தை பெறுவதற்கும் அதனை முறியடிப்பதற்கும் அது எத்தகைய ஆயுதத்தை எடுக்கிறதோ அதே ஆயுதத்தை தொழிலாளி வர்க்கமும் ஏந்தும்.

இவைகள் எல்லாம் ஹாரி பாட்டர் கதை என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. உலக புரட்சிகளின் அனுபவம் மற்றும் இந்திய நிலைமைக்கு ஏற்ப இந்திய விடிவிலான மக்கள் ஜனநாயக புரட்சியை தெழிலாளி வர்க்கம் எதிர் காலத்தில் நடத்தும்.

இந்திய புரட்சிக்கான சி.பி.ஐ.(எம்) திட்டம் - ஆங்கிலத்தில்