Showing posts with label சி.பி.எம். Show all posts
Showing posts with label சி.பி.எம். Show all posts

May 24, 2007

பாமரனும் பல்லக்கு தூக்கிகளும்!


கோவை வலைப்பதிவர் கூட்டத்தை கலக்கியவர் - கலகலப்பாக்கியவர் பாமரன் என்று நமது பதிவர்கள் குறிப்பிடும்போது, அவரது சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது!
அதே சமயம், விழிப்புணர்வு பத்திரிகையில் வெளி வந்திருக்கும் பாமரனின் கட்டுரை ‘சி.பி.எம்.-எப்.எம், பேசுங்க... பேசுங்க... பேசிக்கிட்டே இருங்க...’ படிக்க நேர்ந்தபோது, பதவி சுகம் காணும் பல்லக்கு தூக்கிகள் மீது வீச வேண்டிய சாட்டைகளை சி.பி.எம். மீது வீசியிருப்பதன் மூலம் பாமரத் தத்துவத்தின் முகமூடி கழன்று விடுவதை பார்க்க முடிகிறது.
கேளுங்க... கேளுங்க... கேட்டுக்கிட்டே இருங்க.... என எங்களாலும் ஊதவும் முடியும், ஓதவும் முடியும்!
முல்லைப்பெரியாறு பிரச்சினை
காவிரி நீர் பிரச்சினை
கடல் சார் பல்கலைக்கழக பிரச்சினை
சி.பி.எம்-இன் மறைந்த தலைவர் பி. ராமமூர்த்தியின் ‘ஆரிய மாயையா? திராவிட மாயையா?’ புத்தகம் குறித்த விமர்சனம், துவங்கி நந்திகிராமம் வரையில்... போகிற போக்கில் சி.பி.எம். மீது கொட்டித் தீர்த்துள்ளார் பாமரன்.
பாமரனுக்கென்று இருக்கும் மூடர் கூட்டம் மட்டுமே இதை கை கொட்டி ரசிக்கும்.... இ... ஹி... என்று இளிக்கும்.
சரி, விஷயத்துக்கு வருவோம்!
சி.பி.எம். தலைவர் பி. ராமமூர்த்தியின் புத்தகத்தில் ஏகப்பட்ட தவறுகள் இருப்பதாகவும், இதையெல்லாம் கண்டு பிடித்தற்காக இவருக்கு குரோர்பதி அவார்டு கிடைக்கப்போவதாகவும் குதுகலித்துள்ளார். 1990களில் தி.க. வீரமணி உட்பட பலபேர் எடுத்த வாந்தியைத்தான் இவரும் எடுத்துள்ளார் புதிதாக எதையாவது எடுத்திருந்தால் பாமரனுக்கு ஆ°கர் அவார்டு கொடுக்க பரிந்துரைத்திருக்கலாம்.
பி. ராமமூர்த்தி திராவிட இயக்கத்தின் தவறான அரசியல் நிலைபாடு குறித்து எழுப்பிய பிரச்சினைகளையெல்லாம் ஒதுக்கி விட்டு தப்பிக்க பார்க்கிறார்!
திராவிட மாயை! ஆம், இன்றைக்கும் திராவிட மாயையில்தான் பலரும் பதவி என்ற பல்லக்கு தூக்கிக் கொண்டிருக்கின்றனர். ‘அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு’ என்ற திராவிட இயக்கத்தின் அரசியல் கோஷத்தை குப்பைத் தொட்டியில் வீசியது யார்? ஏன் இந்த கோஷம் எடுபடவில்லை! உண்மையில் திராவிட மாயை கலைந்து விட்டதுதானே!
முல்லை பெரியாறு விஷயத்தில் மலையாளிகளுக்கு ஆதரவாக சி.பி.எம். செயல்படுகிறதாம்! ஏன், மலையாளிகள் இப்போது திராவிடர்கள் இல்லையா? கன்னடர்கள் என்ன ஆரியத்துக்காக மாறி விட்டார்கள்!
கடவுள் மறுப்பு இயக்கமாக தோன்றி தி.க.வின் கடவுள் மறுப்பு கொள்கை கிண்டல் செய்தது சி.பி.எம். ராமமூர்த்தியா? இல்லையே! உங்களது திராவிட கொழுந்து - அறிவு ஜீவி அண்ணாதுரைதானே ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கூறி பெரியாருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
திராவிட இயக்கத்தின் மூடநம்பிக்கை எதிர்ப்பு, சுயமரியாதை!, கடவுள் மறுப்பு கொள்கையெல்லாம் இப்போது என்னவாயிற்று! அம்மாவின் காலடியிலும், ஐயாவின் காலடியிலும் சரணாகதி அடைந்து விட்டது பாமரனின் கண்ணுக்கும், புத்திக்கும் எப்படி தெரியாமல் போய் விட்டதோ! கடவுள் மறுப்பாளர்கள் இன்றைக்கு காவடியல்லவா தூக்கிக் கொண்டிருக்கின்றனர் அந்தக் கூட்டத்தோடு பாமரனும் சேர்ந்து விட்டாரா?
பிராமணர் எதிர்ப்பு, பிராமணீய எதிர்ப்பு! திராவிட இயக்கத் தலைவர்கள் பலரும் பிராமணாளைப் பார்த்து கல்லாணம் கட்டிக் கொண்டதெல்லாம் பாமரர்களுக்கு புரியாத விஷயம்தான்!வைக்கம் போராட்டத்தை யாராவது கொச்சைப் படுத்தினார்களா? ராஜ மரியாதையோடு உள்ளவர் நடத்திய எதிர்ப்பு போராட்டம் என்றாலும் அதனை வரவேற்கிறோம்! அதே சமயம் பெரியாரின் சமகாலத்தில் தஞ்சையில் நேரடி களத்தில் நின்று ‘தலித் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து சாணிப்பால் குடிக்காதே! சாட்டையடி அடிக்காதே! அடித்தால் திருப்பியடி, செருப்பை போட்டு நட! என நிலப்பிரபுக்களின் மிரட்டலுக்கும், கொலை வெறிக்கும் அஞ்சாமல் எதிர்த்து நின்றவர்கள் கம்யூனி°ட்டுகள் பி. சீனிவாசராவ் அதன் தளகர்த்தர் - இவரும் ஒரு கர்நாடக பிராமணர்தான். ஆனால் எந்தக் கட்டத்திலும் நிலப்பிரக்களோடு சமரசம் செய்துக் கொண்டவர் இல்லை!ஏன்? பெரியார் உட்பட, திராவிட இயக்கத்தவர்கள் இதுபோன்ற நேரடி களப்போராட்டத்தில் ஈடுபட்டு அடி உதை பட்டதுண்டா? வரலாறு இருக்கிறதா?
அண்ணாதுரை ஆட்சியின்போதுதானே கீழ்வெண்மணியில் 48 தலித் மக்கள் உயிர் பறிக்கப்பட்டது! ஏன்? சமீபத்தில் திருநெல்வேலியில் மாஞ்சோலை தலித் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி 18 பேரை கொலை செய்தது யாருடைய ஆட்சி! திராவிடத் தலைவர்களின் ஆட்சியில் தலித்துக்கள் தலை நிமர்ந்து விட்டனரா?
இடஒதுக்கீடு அரசியலை செய்யும் திராவிட அரசியல்வாதிகள், மண்டல் கமிஷன் முழங்கிய நில ஒதுக்கீடு குறித்து வாயே திறப்பதில்லையே ஏன் பாமரா எந்த மூடனுமா உனக்குத் இதைச் சொல்லவில்லை! சி.பி.எம். ஆட்சியில் உள்ள மேற்குவங்கம், திரிபுரா, கேரளத்தில் நிலச்சீர்திருத்ததை வெற்றிகரமாக முடித்து ஏழை விவசாயிகளை பாதுகாத்த வரலாறெல்லாம் மறக்கடிக்கப்பட்டதா?
1857 முதல் சுதந்திரப்போhர் வரலாற்றோடு தங்களை இணைத்துக் கொள்ளும் பாரம்பரியம் திராவிட இயக்கத்திற்கு உண்டா? இந்தியாவே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தபோது, திராவிட இயக்கம் பிரிட்டிஷாரின் வாலாக பிராமணீம் பேசிக்கொண்டு தமிழர்களை ஏமாற்றி, வசதி படைத்த உயர்ஜாதி வணிக வர்க்கத்திற்கு பல்லக்கு தூக்கியதெல்லாம் வரலாறக உள்ளது பாமரனுக்கு தெரியாதோ!
ஈரோட்டுத் திட்டம் என்ற பெயரில் சிங்காரவேலர் - ஜீவானந்தம் போன்றோடு இணைந்து சுயமரியாதை - சமதர்ம இயக்கத்தை ஆரம்பித்த பெரியார், சோவியத் யூனியனுக்கு சென்று வந்த பிறகு செய்த கம்யூனிச பிரச்சாரம் இதையெல்லாம் பாதியிலேயே விட்டு, விட்டு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடியது ஏன்? இது எந்த வர்க்கத்துக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட முடிவு?பேரனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வாங்குவதற்காக ஆரம்பத்திலேயே அரசை மிரட்டிய திமுக காவிரி பிரச்சினைக்காகவும், முல்லை பெரியாறு பிரச்சினைக்காகவும் அரசை மிரட்டலாமா? கடந்த 40 ஆண்டுகளாக திராவிட இயக்கம்தானே தமிழகத்தில் இருக்கிறது? மத்தியிலும் அவர்கள்தானே ஆட்சி புரிந்தார்கள்! கொஞ்சினார்கள், குலவினார்கள்! ஏன் காவிரியையும், முல்லை பெரியாரையும் தீர்க்க முடியவில்லை. வாழப்பாடி ராமமூர்த்தி பதவி விலகினாரே! அதுபோல ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யலாமே! இது பாமரத்தனமாக கேள்வியாக இருக்கலாம்! ஆனால் உண்மை இல்லாமல் இல்லை!
கோம்புத்தூரில் சிறுவாணித் தண்ணீரை குடிக்கும் பாமரா, மலையாளிகளின் அந்த தண்ணியை குடித்து விட்டு பாமரத்தனமாக கேள்வி எழுப்புவது என்ன கலாச்சாரம்!...
இப்போதும், கேரள அரசு ஒன்றும் தமிழகத்துக்கு தண்ணிர் தரமாட்டேன் என்று எங்குமே கூறவில்லையே! தமிழகத்துக்கு தண்ணீர், கேரளத்துக்கு பாதுகாப்பு என்றுதானே அவர்கள் முழக்கம் வைக்கின்றனர். தமிழகத்துக்கு இது பிரச்சினை என்றால், அவர்களுக்கு அணை பாதுகாப்பு பிரச்சினை!
எந்த மாநிலமாக இருந்தாலும் இருதரப்பு மக்களின் உணர்வுக்கு மாறாக எந்த நிலையெடுத்தாலும் அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அரசியல் அரிச்சுவடி கூடவா பாரனுக்கு தெரியாது!மதவெறிக்கு எதிராக திராவிட இயக்கம் போராடுகிறதா? பார்த்து பாமர, பாமரர்கள் நகைக்கப்போகிறார்கள் பதவி எனும் சுகத்திற்காக ராமருக்கு காவடி தூக்கியதை - சங்பரிவாரத்துக்கு ஒத்து ஊதியதை, மோடிக்கு மாலையிடுவதை தமிழகம் கண்டு விட்டது! இனியும் பலிக்காது உங்கள் பசப்பு பாட்சா....
குஷ்புவுக்கு கூட்டம், ஈழத் தமிழனுக்கு கூட்டம் இல்லையா? நல்ல கவலைப்பா! தமிழ்நாட்டில் உள்ள தமிழனை புலிகள் கடத்தியது தொடர்பாக கூட்டம் கூட்டயது நினைவுக்கு வரவில்லையா பாமரா?இறுதியாக உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் திராவிட இயக்கத்தின் பொன்விழா கண்ட கஞைர் எழுதிய தொல்காப்பியத்தில் உள்ள பிழைகள் (மூலத்தை கையாண்ட பிழை, பொருள் பிழை, எழுத்துப் பிழை, பொருத்தமான படம் பிழை, இலக்கணப் பிழை....) குறித்து நக்கீரனார் எழுதியுள்ள களைகளை முதலில் எடுக்க பாமரர்கள் முயற்சித்தால் அது அவர் சாந்திருக்கும் வர்க்கத்திற்கு செய்யும் புன்னியமாகும்!....
கேளுங்க... கேளுங்க... கேட்டுக்கொண்டே இருங்க...