Showing posts with label எல்.டி.டி.. Show all posts
Showing posts with label எல்.டி.டி.. Show all posts

January 31, 2009

அனானியின் பின்னூட்டத்திற்கு சந்திப்பின் கண்ணோட்டம்

At 2:19 PM, Anonymous said...
அதெல்லாம் கெடக்கட்டும்னா.. ..நீங்க பேப்பர் வாங்கறேளா..இந்த Srilanka issue வுக்காக ஒரு பையன் உயிர மாச்சுண்டதாதகவல் வர்றதே.. நீங்க சித்த என்னன்னு கேட்டு எழுதப்படாதா..நன்னாஇருக்கு போங்கோ..

------------------------------------------
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட முத்துக்குரனின் செயல் கடும் வருத்தத்தை உண்டாக்கக்கூடிய ஒன்றே. எனினும், தனிநபரின் இத்தகைய உணர்ச்சிவயப்பட்ட முடிவு... மேலும் சில உணர்வுகளை கிளறிவிடப் பயன்படலாம்! முற்போக்கு விதை தூவப்பட்ட மண் என்று பெருமையடித்துக் கொள்ளும் தமிழகத்தில் இவ்வாறான அரசியல் தற்கொலைகளும் மூடப்பழக்கத்தின் ஒரு வடிவமாகவே கருதுகிறேன். அரசியல் ரீதியாக - தனது கருத்துக்கு ஆதரவாக மக்கள் எழாதபோது ஏற்படும் விரக்தி கலந்த - உணர்ச்சி இதனை நோக்கி தள்ளியதோ என்றே சிந்திக்கத் தோன்றுகிறது. கொள்கை ரீதியாகவும் - அரசியல் ரீதியாகவும் - தத்துவார்த்த ரீதியாகவும் விவாதங்கள் இல்லாதபோது வெறும் இனவாத உணர்ச்சி மட்டுமே மேலிடும். இத்துடன் தனிநபர் வழிபாடும் மேலோங்கியிருப்பதைதான் அவ்வப்போது நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகின்றது. அடுத்து நம்முடைய கலர் கலரான அரசியல்வாதிகள் இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வினை ஒன்றுபட்ட குரலோடு முன்வைப்பதற்கு மாறாக, தங்களது இனவாத அடையாள அரசியலுக்கு தூபம் போடுவதைத்தான் தமிழகத்தில் பார்க்க முடிகிறது. இலங்கையில் இனவாத பிரச்சனை கொழுந்து விட்டு எரிகிறது என்றால் தமிழகத்தில் தங்களது அடையாள அரசியலின் நெருக்கடியின் மணம் வீசுவதைத்தான் பார்க்க முடிகிறது. எனவே இலங்கை தமிழ் மக்களின் அரசியல் - பொருளாதார - சமூகப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தனி ஈழம் என்று முழக்கம் வைப்பதும், அதற்கு பயங்கரவாதத்தையே தனது தொழிலாய் மாற்றிக் கொண்ட எல்.டி.டி.இ.தான் தலைமை தாங்கும் என்று அதனை ஆதரிப்பதும், மறைமுகமாக ஆதரிப்பதுமாகவும், அங்கு சிங்கள இனவாதம் பேசினால் நாங்கள் என்ன குறைந்தவர்களா? என்று தமிழ் இனவாதம் பேசுவதும்தான் நடைபெறுகிறது. ஆனால் இதே எல்.டி.டி.இ.தான் இசுலாமிய தமிழ் மக்களுக்கும், மலையக தமிழ் மக்களுக்கும் எதிராக நின்றது என்பது மட்டுமல்ல அம்மக்கைளுயம் வேட்டையாடிது. அத்துடன் சக போராளி அமைப்பின் தலைவர்களையும் வேட்டையாடி தனது பயங்கரவாத குணத்தை வெளிக்காட்டியது. இதில் ராஜுவ் படுகொலையும் - 14 பேர் உட்பட பத்மநாப கொலையையும் தமிழ் மண்ணில் அரங்கேற்றியவர்கள்தான் இந்த பயங்கரவாதிகள் என்பதையெல்லாம் மறந்து விட்டு இன்றைக்கு கரடி போல் கத்துவதால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது. சந்தடி சாக்கில் புரட்சிகர அமைப்புகள்கூட மிகவும் பக்குவமாக தமிழ் இன அடையாளத்தை முன்வைத்துக் கொள்கிறது. பார்ப்பனீயம் எல்லாம் பேசி... தனது அணிகளை புல்லரிக்க வைக்கிறது. இந்த விசயத்தில் இதற்கான தீர்வு என்பது ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிக அதிகாரங்களைக் கொண்ட தமிழ் மக்களுக்கான மாநில சுயாட்சியும் - இதில் அரசியல் - பொருளாதார - சமூக உரிமைகளை உள்ளடக்கியதாகவும் விரிவானதாகவுமான ஒரு அரசியல் தீர்வே பொருத்தமானது. இதனை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் இந்த போரில் தமிழ் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் உறுதியாக நிறைவேற்ற வேண்டும். எல்.டி.டி.இ. தொடர்ந்து தமிழ் மக்களின் ஆதரவை இழந்து... அம்மக்களை ஆயுத முனையில் கவசமாக முன்வைத்து செல்வதிலிருந்து தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும். மத்திய அரசு இவ்விசயத்தில் ராஜீய ரீதியில் தலையிட்டு - ஒரு அரசியல் தீர்விற்கான முன்முயற்சியை எடுத்திட வேண்டும். இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும் - மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே முடியும். எனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மிக அதிகமான அளவில் வெறியூட்டக்கூடிய முறையில் மிகைப்படுத்தப்படுவதும் நடைபெறுகிறது. இதனை தமிழக அரசியல் கட்சிகள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. இங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க அலறும் இந்த அரசியல் கட்சிகள்தான் இத்தகைய போதையூட்டும் வெறித்தனத்திற்கு தூபங்களைப் போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தங்களையும் இணைத்துக் கொண்டு குளிர் காய்பவர்கள் பலரும் உள்ளனர்...