October 28, 2008

மராட்டியம், குஜராத் குண்டு வெடிப்பு பெண் சாமியார் கைது



மராட்டிய மாநிலம் மலே கானில் கடந்த மாதம் 29-ந் தேதி சிமி அலுவலகம் முன்பு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
இதில் 5 பேர் பலியா னார்கள். 90 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாசிக் போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை கட்டி எடுத்து வந்து வெடிக்க வைத்திருப்பது தெரிந்தது. "டைமர்'' கருவி பொருத் தப்பட்டிருந்த அந்த வெடி குண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப் பட்டிருந்தது. வெடி குண்டு தயாரிப்பு மற்றும் வைக் கப்பட்ட ஸ்டைல் எல்லாம் இதுவரை இல்லாத அள வுக்கு புதுசாக இருந்தது.
தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள். மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்த போது, அது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டிருப்பது தெரிந்தது. இது தொடர் பாக போலீசார் சியாம் சாகு, திலீப்நாசர், சிவநாரா யண்சிங் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் பிரபல பெண் சாமியார் சத்வி பிரக்யா தாகூருக்கு நெருக்கமான வர்கள் என்று தெரிந்தது. மேலும் குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பெண் சாமி யார் சத்வி பிரக்யா பெய ரில் வாங்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. இதனால் பெண் சாமியார் பிரக்யா பற்றிய தகவல்களைத் திரட்டி போலீ சார் விசாரித்தனர்.
பெண் சாமியார் பிரக் யாவின் சொந்த ஊர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் கிராமம். ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே ராமஜென்ம பூமி போராட்டங்களில் ஈடுபட் டார். பிறகு இந்து ஜக்ரான் மஞ்ச் எனும் அமைப்பில் தீவிர உறுப்பினராக இருந் தார். அப்போது சாமியார் ஆனார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு "வந்தே மாதரம்'' எனும் அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்புக்கு குஜராத் மாநில அரசு நிதி உதவி செய்து ஆதரித்தது. இதனால் பிரக்யா குஜராத் மாநிலம் சூரத் நகரில் குடியேறினார்.
இந்துக்கள் பற்றியும் இந்து அமைப்புகள் பற்றி யும் சாமியார் பிரக்யா ஆவேச மாகப் பேசக் கூடியவர். வட மாநிலங்களில் இந்து அமைப்பு தொண்டர்களுக்கு இவர் பாடம் நடத்தி வந்தார். இதன் காரணமாக பாரதீய ஜனதா, விசுவ இந்து பரிஷத் தலைவர்களுடன் இவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது.
பா.ஜ.க. தலைவர் ராஜ் நாத்சிங், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், மற்றும் உமா பார திக்கு இவர் வலது கரம் போல செயல்பட்டவர். வெடி குண்டு மோட்டார் சைக்கிள் இவர் பெயரில் பதிவாகி இருந்ததை போலீசார் ரகசிய மாக ஆய்வு செய்தனர். பிறகு குண்டு வெடிப்புக்கு பெண் சாமியாருக்கும் ரகசிய தொடர்பு இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டு, பெண் சாமி யார் பிரக்யாவுக்கும் குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருப்பதற்கான கூடுதல் ஆதா ரங்கள் திரட்டப்பட்டன. குறிப்பாக மலேகானில் குண்டு வெடித்த தினத்தன்று குஜராத் மாநிலத்தில் நடந்த குண்டு வெடிப்பும் ஒரே மாதிரி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
சிமி இயக்கத்தினரை பழிக்குப் பழி வாங்க இந்த குண்டு வெடிப்புகளை பெண் சாமியார் உள்ளிட்ட குழு நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதை தொர்ந்து பெண்சாமியார் பிரக்யாவை போலீசார் இன்று கைது செய்தனர். இது இந்து பரிவார் அமைப்பு நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.
குண்டு வெடிப்புக்கு பயன் படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து மற்றும் டைமர் கருவியை இந்து அமைப்பினர் எங்கிருந்து, எப்படி பெற்றனர் என்று தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் விசா ரணை நடத்தினார்கள். அப்போது பெண் சாமியார் பிரக்யாவுடன் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 2 வீரர்கள் நெருக்கமாக இருப்பது தெரிந்தது. அவர் கள் இருவரும் ராணுவ பயிற்சிப்பள்ளி நடத்தி வருகிறார்கள்.
இந்த பயிற்சிப் பள்ளியில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று வகுப்புகள் நடத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
கைதான ராணுவ வீரர்கள் ஒருவர் பெயர் பிரபாகர் குல்கர்னி மற்றொருவர் பெயர் உபாத்யா. இவர் ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் பணியாற்றியவர். 2 ராணுவ வீரர்களும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் என்று தெரிய வந்துள்ளது. வெடிகுண்டு தயாரிக்க இவர்கள் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தை சேகரித்து அனுப்பி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்து அமைப்பு ஒன்று வெடி குண்டுகள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதை ஏற்கனவே போலீசார் கண் டறிந்து இருந்தனர். அவர் களுக்கும் ராணுவ வீரர் களுக்கும் இடையே இருந்த தொடர்பு பற்றி விசாரணை நடந்து வருகிறது.
தற்போது கைதான பெண் சாமியார் உள்பட 2ராணுவ அதிகாரிகளையும் போலீசார் விசாரணைக்காக மும்பை கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவர்களிடம் தீவிர விசாரணையில் நடத்தியதில் குண்டு வெடிப்பில் இந்து அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தக வல்கள் வெளியானது.
ராணுவ அதிகாரிகள் குல்கர்னியும், உபாத்யேயும் நாசிக் அருகே ராணுவ பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்தனர். இந்த பயிற்சி மையத்தை இந்து ராணுவ கல்வி கழகம் நடத்தி வந்தது.
அதில் வெடிகுண்டுகள் தயாரித்தல், வெடிகுண்டு களை கையாள்வது குறித்து இரு அதிகாரிகளும் பயிற்சி அளித்து வந்துள்ளனர். மற் றும் ஆயுதப் பயிற்சியும் கொடுத்தனர்.
மலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக பெண் சாமியாரும், 2 ராணுவ வீரர்களும் கைதாகி இருப்பது வட மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கூறுகையில், பஜ்ரங்தளம் மற்றும் சில இந்து அமைப்புகள் குண்டு வெடிப்புடன் தொடர்பு டையதாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஏன் மத்திய அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வில்லை'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு பா.ஜ.க. தலை வர்கள் கண்டனம் தெரி வித்துள்ளனர். வெங்கையா நாயுடு, உமாப Öரதி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், "பெண் சாமியார் பிரக்யா அப்பாவி சாது. குண்டு வெடிப்பு தொடர்பாக அவரை கைது செய்து இந்து அமைப்புகள் மீது கெட்ட பெயர் ஏற்படுத்த சதி நடக்கிறது'' என்று கூறி உள்ளனர்.
இதற்கிடையே மலேகா னில் 2006-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பிலும் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று மராட் டிய மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அதை கண்டு பிடிக்கவும் விசா ரணை நடந்து வருவதாக கூறினார்கள்.

குண்டு வெடிப்பு சதி; கைதான பெண் சாமியாருக்கு உண்மை கண்டறியும் சோதனை

மராட்டிய மாநிலம் மலேகானில் கடந்த மாதம் சிமி அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலி யானார்கள்.
இந்த குண்டு வெடிப்பில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சாமியார் சத்வி பிரக்யா தாகூருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரை மும்பை தீவிர வாத தடுப்புப் பிரிவு போலீ சார் கைது செய்தனர். குண்டு வெடிப்புக்கு பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சத்வி மூலம் வாங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
பெண் சாமியாரின் உதவியாளர்கள் சம்லா சாகு, சிவநாராயண் சிங் இருவரும் குண்டுகளை தயாரித்துள்ளனர். அதன் பிறகு அந்த வெடிகுண்டை மலேகானில் கொண்டு போய் சாகு வைத்துள்ளார்.
இந்த வெடிகுண்டை எப்படி கையாள வேண்டும் என்று புனேயைச் சேர்ந்த ஓய்வு பெற்ற 2 ராணுவ வீரர்கள் பயிற்சி அளித் திருந்தனர். அந்த 2 ராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைதான 5 பேர் வீட்டிலும் சோதனை நடந்தது. ஆனால் குற்றச்சாட்டை நிரூபிக்கும் அளவுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து பெண் சாமியார் பிரஜ்யா, அவரது உதவியாளர்கள் சம்லால் சாகு, சிவநாராயண்சிங் ஆகிய 3 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்த சோதனை மூலம் பெண் சாமியார் மறைக்கும் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்று போலீசார் நம்புகிறார்கள்.
இதற்காக கைது செய் யப்பட்ட அனைவரும் மும்பை கொண்டு செல்லப் பட்டுள்ளனர். இன்று (செவ்வாய்) அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடக்கிறது.
இதற்கிடையே மலேகான் குண்டு வெடிப்பு சதியில் மேலும் ஒரு ராணுவ வீர ருக்கு தொடர்பு இருப்பதை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கண்டு பிடித் துள்ளனர். தற்போது அவர் மத்திய பிரதேச மாநிலம் பஞ்சமடி பகுதியில் பணியாற்றி வருகிறார்.
அவரை கைது செய்து விசாரிக்க ராணுவ உயர் அதிகாரிகளிடம் விண்ணப் பிக்கப்பட்டுள்ளது. இந்த ராணுவ வீரர் மூலம் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
thanks:www.maalaimalar.com
October 26 & 28 - 2008

5 comments:

Asalamsmt said...

சண்டாளர்கள், சதிகாரர்கள். குற்றம் செய்ய வேண்டியது பின் அதை ஒத்துக்கொள்ள மறுப்பது. இவர்களுக்கு உண்மை அறியும் சோதனை தேவைதான்.

அல்கய்தா தீவிரவாதம் என்று ஊடகம் சொல்லி கொண்டு இருக்கிறது. ஆனால் அவர்களாக குண்டு வைத்து விட்டு, இன்னோருவரின் தலையில் பழியை சுமத்தியது இல்லை.
ஆனால் இந்த கயவர் (கயவரி)தீவிரவாதி, சுவாமி வேடத்தில் இருந்துக்கொண்டு உலகத்தையே ஏமாற்றி விட்டாரே.

இஸ்மாயில் என்று பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டு, காந்தியை கொன்ற கோட்சே அன்று முஸ்லிம் களின் தலையில் போடலாம் என்று முடிவு செய்த அந்த காந்தியை கொன்ற தீவிரவாதி, இன்று பெண் வடிவத்தில் வந்து நம் இந்திய மக்களை ஒரேடியாக ஏமாற்றி விட்டாளே!
ம். பார்க்கலாம் நமது விசாரணை எல்லாம் எப்படி போகிறது என்று.

எல்லாம் அந்த பரம ஈஸ்வரன் தான் பார்த்துக்கொண்டு இருக்கிறான்

Anonymous said...

இதயும் போடுவேளா செமி அய்யங்கார் சந்திப்பு கம்யூனிஸ்டு மாமா?

India’s action on Sri Lanka not satisfactory, says CPI

Special Correspondence

New Delhi cannot wash its hands of Tamils issue: D. Pandian

Tamil Nadu people ready to donate food and medicine to Sri Lankan Tamils: CPI

“Appoint Tamils as High Commissioners to

Sri Lanka, Singapore and Malaysia”


-----------------------------------


CHENNAI: The action taken by the Central government in response to the demand of the people of Tamil Nadu to stop the war in Sri Lanka was neither satisfactory nor promising, Communist Party of India State secretary D. Pandian said on Saturday.

Talking to journalists here, he said India could not wash its hands of the Sri Lankan Tamils issue on the pretext that it was an internal matter of another country.

“When human rights are violated, borders of a country cannot be a stumbling block. In the case of Sri Lanka we have a close relationship with the Tamils.”

Stating that people of Tamil Nadu were ready to donate food and medicine to the Sri Lankan Tamils, Mr. Pandian requested N. Ram, Editor-in-Chief of The Hindu, to get permission from Sri Lankan President Mahinda Rajapaksa to distribute the same.

“He is the only person who can pick up the phone and talk to Mr Rajapaksa. He should get permission from him to send food, medicine and other relief materials,” Mr. Pandian said
, but made it clear that the materials should not be distributed through the Sri Lankan government.

“A committee comprising doctors who are not affiliated to any political party, retired judges, Buddhist monks, heads of Hindu mutts, Christian priests and Moulvis from Tamil Nadu should be formed for the purpose,” he said. The Centre should also offer help in this regard.

Mr. Pandian said National Security Adviser M.K. Narayanan and Foreign Secretary Shiv Shankar Menon should not advise the government on the Tamils issue. “If possible, the government should appoint Tamils as High Commissioners to Sri Lanka, Singapore and Malaysia.”

Another demand of Mr. Pandian was to send two Union Ministers from Tamil Nadu along with External Affairs Minister Pranab Mukherjee to Sri Lanka to hold talks. “If Ministers are not allowed, MPs from Tamil Nadu can be sent.”

The next course of the CPI’s action on the issue, he said, would be decided in consultation with other parties.

On the arrest of film directors Seeman and Ameer, Mr. Pandian said the government should be lenient towards them as theirs was only “an emotional outburst and not a political statement.”

Robin said...

தொடர்ந்து காவி தீவிரவாதத்தை அம்பலபடுத்துங்கள். நன்றி.

சந்திப்பு said...

அனைவருக்கும் நன்றி

Anonymous said...

இஸ்லாமிய தீவிரவாதிகள் குறித்து காவல்துறை சொன்னால் அதை சந்தேகி, கேள்வி கேள், முத்திரை
குத்து, நம்பாதே, எதிர்த்து பிரச்சாரம்
செய்.
இந்துக்கள் தீவிரவாதச் செயல்களில்
ஈடுபட்டதாக காவல்துறை சொன்னால்
ஏற்றுக்கொள்,பரப்பு,கேள்விக்கேட்காதே,ஆதரித்து எழுதி பிரச்சாரம் செய்.

இதுதானே உங்களின் (லாஜிக் இல்லாத) மதச்சார்பின்மை.