February 17, 2008

கம்யூனிஸ்டுகளும், முதலாளித்துவ கட்டுமானமும்

பிரபாத் பட்நாயக்
கம்யூனிஸ்ட்டுகள் சோசலிசத்தை கைவிட்டுவிட்டதாக பத்திரிகைகள் தயக்கமற்று எழுதுகின்றன. மேற்குவங்க கம்யூனிஸ்ட் தலைவர்கள் தனியார் மூலதனத்தை ஏற்றுக்கொள்வது குறித்து பேசிய பேச்சுக்களுக்கான எதிர்வினை இது. முதலாளித்துவ அமைப்பிற்குள் செயல்படும் ஒரு மாநில அரசை தலைமை தாங்கி நடத்தும்போது இது தவிர்க்க முடியாததாகும். எனவே கம்யூனிஸ்ட்டுகள் சோசலிசத்தைக் கைவிட்டுவிட்டதாக எழுதுவதும் பேசுவதும் தவறான புரிதலிலிருந்து எழுந்த கருத்துக்களாகும். இப்பிரச்சனையை சித்தாந்த ரீதியாக ஆய்வு செய்வது பயனுள்ளதாக இருக்கும். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்திற்கான நோக்கமே சோசலிசத்திற்காக போராடத்தான். ஆனால் சோசலிசத்தை அடைய ஒரு சமூகப் புரட்சி தேவை. அப்புரட்சி தனியுடமையாக உள்ள உற்பத்திக்கருவிகளை சமூக உடைமையாக்கும். தனியுடைமையை பாதுகாத்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவ அரசை அகற்றும். அந்த இடத்தில் பாட்டாளிகளின் அரசை ஏற்படுத்தும். அந்த அரசு இதுநாள் வரை கண்ட அரசுகளிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். தான் உருவாகும் போதே குறிப்பிட்ட காலத்தில் “உலர்ந்து உதிர்ந்து” போவதற்கான தன்மையுடன் அது தோன்றும். இத்தகைய சமூகப்புரட்சிக்கான சூழல் கனிந்துவர காலமாகலாம். எனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலாளித்துவ அமைப்பிற்குள் நீண்ட காலம் பணியாற்ற வேண்டியிருக்கும். இந்தப்புரட்சிக்கு தலைமை தாங்குகிறவர்கள் பாட்டாளிகள். எனவே பாட்டாளிகளை தத்துவார்த்த ரீதியாக கம்யூனிஸ்ட்டுகள் செழுமைப்படுத்துகிறார்கள். போராட்டங்களின் ஊடாக கற்றுக் கொடுக்கிறார்கள். அதன் மூலம் புரட்சியை தலைமை தாங்கும் வர்க்கமாக தயார் செய்கிறார்கள். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் உடனடிக் கடமை சோசலிசத்திற்காக போராடுவதுதான் என்பதும் தவறு. சோசலிசத்திற்காக போராடுவதில் மட்டும் அது ஒரே கவனமாக இருக்க வேண்டும் என்பதும் தவறு. ஜனநாயகப் புரட்சி முழுமையடையாத சமூகங் களில் உடனடியாக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தை நடத்த முடியாது என்பது மட்டுமல்ல நிலச்சீர் திருத்தத்தை பின்னோக்கித் தள்ளுவது, முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்துவது, ஏகாதிபத்தியத்துடன் இன்னும் கூடுதலாக இயைந்து போவது என்பதும் நடைபெறும். சோசலிசப் புரட்சி ஒருபுறம் இருக்கட்டும் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான சூழலை கனிய வைப்பதற்காக கம்யூனிஸ்ட்டுகள் முதலாளித்துவ அமைப்பின் உள்ளிருந்து பணியாற்ற வேண் டியிருக்கும். இந்தப் பணி என்பது தொழிற்சங்கங்களில் பணியாற்றுவது, விவசாயிகளுக்கு மத்தியில் வேலை செய்வது, பல்வேறு வர்க்க வெகுஜன ஸ்தாபனங்களில் பணியாற்றுவது, சட்டமன்றம் நாடாளுமன்றங்களில் எதிர்க்கட்சியாக பணியாற்றுவது என்பது மட்டுமல்ல தாங்கள் பலமாக உள்ள மாநிலங்களில் அரசாங்கங்களை தலைமை தாங்கி நடத்துவதும் அத்தகைய பணிகளில் ஒன்றுதான். மாநில அரசாங்கங்களை தலைமை தாங்கி நடத்துவது என்பது இதர தளங்களில் பணிபுரிவதிலிருந்து வேறுபட்டதல்ல. ஆனால் இந்தத் தளம் புதியது. அரசியல் சட்டத்தின் குறிப்பானதும் வெளிப்படையானதுமான சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டியது. இதர தளங்களில் பணிபுரியும் நோக்கம் வர்க்க பலாபலங்களில் மாற்றம் கொண்டுவருவதே. மாநில அரசாங்கங்களை தலைமை தாங்கி நடத்துவதும் வர்க்க பலாபலங்களில் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவே. அதாவது, இந்த மாற்றம் என்பது மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு ஆதரவான வர்க்கங்களைத் திரட்டுவதாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாகவும், பெற்ற முன்னேற்றங்களை பின்னுக்கு இழுப்பதை முறியடிப்ப தாகவும், எதிர்ப்புரட்சி சக்திகளை முறியடிப்பதாகவும் அமைய வேண்டும். அதன்மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான சூழ்நிலைகளை உருவாக்குவதாக அமையும். கம்யூனிஸ்ட்டுகளால் தலைமை தாங்கப்படும் மாநில அரசாங்கங்களின் கொள்கைகள் கீழ்க்கண்டவற்றை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.
  1. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்க வேண்டும்.
  2. மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.
  3. வர்க்க சேர்க்கையை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
  4. வர்க்க உணர்வை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.
  5. பாட்டாளி வர்க்கத்தை ஒரு புரட்சிகர சக்தியாக வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
பொதுவான தேக்கம் என்பதல்லாமல் இந்த மாநிலங்களில் மட்டும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டால் அது வேலை வாய்ப்பைச் சுருக்கும். அதன் காரணமாக மக்களிடமிருந்து கம்யூனிஸ்டுகள் தனிமைப்பட நேரிடும். கடந்த காலத்தில் பொருளாதார தடை விதித்ததைப் போன்று முதலாளிகள் இந்த மாநிலங்களில் முதலீடு செய்யாமல் தவிர்த்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும். அதே நேரத்தில் ஒரு துறையில் ஏற்படும் வேலைவாய்ப்பு வளர்ச்சி என்பது இதர துறைகளில் வேலை வாய்ப்பை அழித்துவிடுவதாக மாறிவிடக்கூடாது. நிலப்பயன்பாட்டு முறையில் ஏற்படும் மாற்றமும் கூட வேலைவாய்ப்பை பாதிக்கும். இதுவும் கூட, நோக்கத்தை நிறைவேற்ற உதவாது. அடிப்படை வர்க்கங்களுக்கும் (தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள்) கட்சிக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்தும். அதே நேரத்தில் முதலாளிகளின் அதீதமான கோரிக்கைகளை முதலீடுகளை ஈர்க்க வேண் டும் என்பதற்காக ஏற்றுக்கொள்வதும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இத்தகைய பாதகமான விளைவுகளை தடுக்க
  1. சூழ்நிலை மைகளின் முழு பரிமாணத்தையும் கணக்கில் கொண்டு சரியான வழி முறையை தீர்மானிப்பது,
  2. முதலாளிகளுக்கிடையேயான போட்டியை பயன்படுத்திக்கொண்டு அவர்களின் அதீத கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுக்காமல் முதலீடுகளை செய்ய வைப்பது.
  3. தனியார் மூலதனத்திற்கு இணையாகவும், அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், அரசு முதலீட்டைப் பயன்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்து சூழல்களிலும் எளிதான தல்ல. எனவே எந்த ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைக்கும் குறிப்பான உத்தி கள் கடைப்பிடிக்கப்படவேண்டும். இந்த உத்தியை தீர்மானிக்கிறபோது அது ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறதா என்பதே உரைகல்லாக இருக்க வேண்டும். பலமுனைகளில் போராட்டம் இதுதான் உரைகல் என்றவுடன் தனியார் முதலீட்டை மறுதலிப்பதற்கான நியாயம் ஏதும் இருக்க முடியாது. ஏனென்றால் முதலாளித்துவ சமூக அமைப்பில் முதலீட்டிற்கான சொத்து முழுவதும் முதலாளிகளின் கையில்தான் குவிந்திருக்கிறது. அதே நேரத்தில் இத்தகைய முதலீடுகளை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். இந்த முதலீடுகள் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னேறுவதை தடுக்காத முறையில் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். அந்த நோக்கத்தோடு கம்யூனிஸ்டுகளால் தலைமை தாங்கப்படும் மாநில அரசாங்கங்கள் முதலாளிகளின் அதீத கோரிக்கைகளை சமாளிக்கும் ஏற்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும். மூலதனத்தை விரட்டிவிடுவதும் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு பாதகத்தையே விளைவிக்கும்.இந்த புரிதலானது சோசலிஸத்தை கைவிட்டு விடுவதல்ல அல்லது முதலாளித்துவத்தை ஏற்றுக்கொள்வதல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மாறாக இறுதி லட்சியமான சோசலிசத்தை அடைவதற்காக மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த போராட்டம் பல முனைகளில் நடத்தப்பட வேண்டும். சிக்கலானகள நிலைமைகளில் நடத்தப்பட வேண்டும். இப்போராட்டம் ஒருவருடைய விருப்பத்தின்பாற்பட்டதல்ல. ஆகிய யதார்த்தங்களை கவனத்தில் கொண்ட தாகும். இந்த சிக்கல்களை கவனத்தில் கொள்கிறபோது இறுதி லட்சியம் கவனத்திலிருந்து தப்பிவிடக்கூடாது என்பது முக்கியம். இந்தச் சிக்கல்களை கவனத்தில் கொள்ளவில்லை யெனில் இறுதி லட்சியத்தையடைவதென்பது நடைமுறையில் இன்னும் கடினமாகி விடும். கட்சியும் அரசாங்கமும் கம்யூனிஸ்டுகளை விமர்சனம் செய்வோர் மக்கள் ஜனநாயகப் புரட்சி குறித்த இந்தப்புரிதலை பெற்றிராததாலும் புரட்சிக்கான சூழ்நிலைகளை உருவாக்கும் பணியில் சிக்கலான தன்மையை புரிந்துகொள்ளாததாலும் தவறு செய்கிறார்கள். தவிரவும் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையி லான வேறுபாட்டை புரிந்து கொள்வதிலும் அவர்கள் தவறுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கும் அரசாங்கங்களும் கட்சியும் ஒன்றல்ல. கட்சிக்கு ஒரு கருத்திருக்கிறது. அந்தக் கட்சியால் தலைமை தாங்கப்படும் அரசாங்கத்திற்கு அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கட்சி புரட்சிக்காக பலவழிகளில், முனைகளில் உழைக்கிறது. அதில் ஒன்றுதான் மாநில அரசாங்கங்களை தலைமை தாங்குவதும், கட்சிக்கும் அதன் வெகுஜன ஸ்தாபனங்களுக்கும் வித்தியாசம் இருப்பது போலவே கட்சிக்கும் அது வழிநடத்தும் அரசாங்கங்களுக்கும் வித்தியாசம் உண்டு. இந்த அரசாங்கங்கள் அரசியலமைப்பு சட்டவிதிகளுக்கு உட்பட்டே அமைக்கப்படுகின்றன. அரசிய லமைப்பு சட்டமோ முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் அரசு அமைப்பை தாங்கிப்பிடிக்கும் தூணாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நடைமுறையில் அவர்கள் எடுக்கும் நிலைபாடுகளில் பல கட்சியின் கருத்துரீதியான புரிதலுக்கு ஒத்திசைந்ததாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அரசாங்கத்தின் நடைமுறை கொள்கைகளிலிருந்து ஒரு கட்சியின் தத்துவார்த்த நிலைபாட்டை வடித்தெடுக்க முயற்சிப்பது விஷயத்தை தலைகீழாக பார்ப்பதாகும். இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட் தலைமையிலான மாநில அரசாங்கங்கள் கடைப்பிடிக்கும் சில கொள்கை கள் குறித்து கருத்து வேறுபாடுகள் இருக்கக்கூடும். ஆனால் அவற்றை கருத்து ரீதியான புரிதலோடு குழப்பிக் கொள்ளக்கூடாது. மாறாக, இத்தகைய கருத்து வேறுபாடுகளை புரிந்து கொள்ள சித்தாந்த ரீதியான தெளிவு அவசியம்.
தமிழில் : க.கனகராஜ்
‘எக்கனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி’
பிப்.2, 2008

16 comments:

Anonymous said...

நீங்கள், தியாகு போன்றோர் கம்யூனிஸ்டுகளே இல்லையென அசுரன் போன்றோர் கூறுகிறார்களே? இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

சந்திப்பு said...

அனானி நன்பரே!

இந்த உள்ளீடு எங்கள் மீது உள்ள அக்கறையால் போடப்பட்டதா? அல்லது சிண்டு முடித்துவிட்டு வேடிக்கை பார்ப்போம் என்பதற்காக போடப்பட்டதா? என்பதை நீங்கள்தான் அறிவீர்கள். எப்படியிருந்தாலும் பரவாயில்லை. நன்பர் அசுரன் இவ்வாறு கூறியுள்ளாரா என்பதை நான் அறியேன். அவருக்கு கம்யூனிச தத்துவத்தின் மீது நம்பிக்கையுள்ளது. எனக்கும் முழுமையான நம்பிக்கையுள்ளது. தியாகுவிற்கும் கூட.

அதே சமயம் இந்தியாவில் சமூக மாற்றத்தை கொண்டுவருவதற்கான செயல்பாடு - தத்துவ சிந்தனை - நடைமுறைத் தந்திரம் இவற்றில் மூன்று பேருமே வெவ்வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள்.

நான் சி.பி.ஐ.(எம்)- திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் மக்கள் ஜனநாயக புரட்சியை ஏற்படுத்திட பாராளுமன்ற பாதை உட்பட உள்ள அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறேன்.

அசுரன் தான் செயல்படும் கட்சியின் பெயரைக்கூட சொல்லிக்கொள்வதில் தயக்கம் கொண்டவர். இருப்பினும் அவர் ம.க.இ.க. என்ற பெயரில் உள்ள வெகுஜன அமைப்பையே கட்சியாக கருதி தத்துவார்த்த மற்றும் செயல்தளத்தை ஆற்றி வருபவர். இவர்களுக்கு வெகுஜனங்களின் மீதான நம்பிக்கையை விட சாகசவாதத்தின் மீதான நம்பிக்கையே அவருக்கு அதிகம். அதனால்தான் இந்தியாவில் மிக வலுவாக செயல்படும் மதவெறி சக்திகளுக்கு எதிராக கோடிக்கணக்கான வெகுஜன மக்களை திரட்டி முறியடிப்பதற்கு மாறாக. வெறும் பிரச்சார நெடியை கிளப்பிக்கொண்டிருக்கும் இயக்கம். மேலும் இவர்கள் யாருடனும் ஐக்கிய முன்னணியை ஏற்படுத்திக் கொள்ளாதவர்கள். இந்தியாவில் உள்ள அத்தனை இயக்கங்களையும் தங்களின் வர்க்க எதிராக பார்பவர்கள். இது இவக்ரளின் தத்துவ பார்வை. ஆனால் சி.பி.ஐ.(எம்) எதிர்ப்பதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட - மமதா போன்றவர்களின் பின்னாள் ஒளிந்துக் கொள்வார்கள். இவர்கள் நக்சலிசத்தின் வாரிசுகள். ஆனால் அகில இந்திய அளவில் இவர்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. இருப்பினும் அகில இந்திய அளவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தப் போவதாக உளருவார்கள். இவர்களது கடை சரக்கை விற்பதற்கு சி.பி.எம். எதிர்ப்பு என்பது உடன் பிறந்தது. மொத்தத்தில் இவர்களின் தத்துவ முகமூடி கம்யூனிச எதிர்ப்பு சீர்குலைவே!

தியாகு கம்யூனிசத்தை பேசி வருகிறார். அவர் எந்த இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு அவர் நம்பிக்கை வைத்துள்ள கம்யூனிச சித்தாந்த்தை நடைமுறைப்படுத்தி வருகிறார் என்பது எனக்கு தெரியாது. இது குறித்து நீங்கள் அவரிடமே கேட்கலாம்.

Anonymous said...

பிரபாத் பட்நாயக்கின் இந்தக் கட்டுரைக்கு EPWவின் இன்னொரு இதழில் ஒருவர் பதில் எழுதியிருக்கிறார். அதையும்
படியுங்கள்.தீக்கதிரில் அதை மொழிபெயர்த்து வெளியிடமாட்டார்கள்.அப்படி ஒரு
பதில் வந்தது என்பதைக் கூட
குறிப்பிடமாட்டார்கள். ப்ட்நாயக் கட்சி
விசுவாச அறிவுஜீவி. கட்சி எது செய்தாலும் சரி என்று எழுதுபவர்.
அவருக்கும், ஜெ எது செய்தாலும்
சரி என்று ஜெயா டிவில் பேசும்
ஜெயா டி.வி ஊழியர்களுக்கும்
ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை.

பட்நாயக்கின் விசுவாசத்திற்காக
அவரை கேரள திட்டக்குழுவின்
தலைவராக்கிவிட்டார்கள்.
அப்புறம் என்ன கட்சி 5+9 = 23
என்றாலும் ஆமாம் என்று ஜால்ரா
போட வேண்டியதுதான். இடதுசாரிகளுக்கு குண்டர் படை
போல் அறிவுஜீவி அடியாள் படையும்
உண்டு. அந்த அடியாள் படையின்
தளபதி பிரபாத்.

சந்திப்பு said...

அனானி முகமூடி நன்பரே இ.பி.டபள்யூ.வில் வெளிவந்திருப்பதாக தாங்கள் கூறும் கட்டுரையின் பெயரையாவது வெளிப்படுத்தியிருக்கலாம். அது சரி தீக்கதிர் அதனை மொழி பெயர்த்து வெளியிடாது என்றே வைத்துக் கொள்வோம். உங்களைப் போன்ற மனப்புரட்சியாளர்கள் அதனை மொழி பெயர்த்து வெளியிடலாமே. உங்களது பணி விமர்சிப்பதோடு சரி! அது சரி உங்களைப் பொறுத்தவரை அதுவே பெரும் புரட்சிதான்!

Anonymous said...

அரசியற் களத்தில் உங்கள் கட்சி அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரசு போன்ற 'ஜனநாயக' கட்சிகளுடன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அய்க்கிய முன்னனி அமைத்து புரட்சிகர பணியாற்றி வருவது எங்களுக்கு தெரியும், இணைய தளத்தில் உங்கள் அய்க்கிய முன்னனி யாரோடு டாலர் செல்வன், அதியமான், தமிழ்மணி, அரவிந்தன் நீலகண்டன் போன்ற 'ஜனநாயக' சீல‌ர்க‌ளோடா?

Anonymous said...

ச‌ந்திப்பு அய்யா என‌க்கு என்ன‌ ஒரு ச‌ந்தேக‌ம்னா, அசுரன் போன்ற‌வ‌ர்க‌ள்ட‌ காட்ட‌ற‌ கோப‌த்தை, நீங்கள் ஏன் உங்களை கார‌ல் மார்க்ஸ்னு வ‌ர்ணித்து(?) லிங்க் கொடுத்திருக்கிற டால‌ர் செல்வ‌னிடம் காட்ட மாட்டேங்குறீங்க? அது ம‌ட்டுமா த‌மிழ்ம‌ணிங்க‌ற‌ பெய‌ர்ல எழுதுற‌ பார்ப்ப‌ன‌ கும்ப‌ல் ஒன்று க‌ம்யூனிச‌மே கவைக்குத‌வாத‌ த‌த்துவ‌ம்னு எழுதி தமிழ்மணத்துல மொக்கை விவாத‌ம் ந‌ட‌த்திகிட்டிருந்துச்சு, அசுர‌னும் அவ‌ர‌து தோழ‌ர்க‌ளும் அந்த‌ மொக்கை கும்ப‌ல்கிட்ட‌ போராடிய‌ அள‌வுக்கு கூட‌ உண்மையான புர‌ட்சிகாராராகிய‌ நீங்க‌ள் போராட‌வில்லையே அது ஏன்?

சந்திப்பு said...

அனானி நன்பரே நாங்களாவது நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல் பலரோடு ஐக்கிய முன்னணி கண்டு சில பாடத்தையாவது படித்திருக்கிறோம். ஆனால் உங்கள் நிலை அனானிமசாகவல்லவா இருக்கிறது. இணையத்தில் மட்டுமா அரசியல் களத்திலும் உங்கள் கூட்டாளி யார்? உங்களது ஐக்கிய முன்னணி நன்பர்கள் யார்? மமதாவும் - சங்பரிவாரமும்தானே. உங்கள்து வர்க்க எதிரி சி.பி.எம். என்பதை தவிர வேறு என்ன? இதுதானே உங்களது தத்துவ முதிர்ச்சி. உங்களைப் போன்றவர்களும் நீங்கள் குறிப்பிட்ட கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வரவேண்டியவர்கள் என்பதை இங்கே தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. இதுபோன்ற விவாதங்களை இத்தோடு முடித்துக் கொள்வோம். உரையாடலை தொடர்வோம் அர்த்தமுள்ளதாக... அனானிமசாக இல்லாமல்.

வாழ்த்துக்கள்
தோழமையுடன்
சந்திப்பு

Anonymous said...

அட பாவி மக்கா, கேள்வி கேட்குறவன் நியாயம் பேசுறவன் எல்லாருமே மம்தா நக்சல் கும்பலா, ஆர்.எஸ்.எஸ்காரன் தேசவிரோதி பட்டம் கொடுக்குற மாதிரியில்ல நக்சல் பட்டத்த வாரி வழங்குறீக. நீங்க ஏன் மொக்கைமணி & கோ'விடம் விவாதிக்கல, டாலர் செல்வனோடு விவாதிக்கலன்னு கேட்டதுக்கு இப்படி ஒரு பதிலா? பலரோடு அய்க்கிய முன்னனி சேர்ந்த அனுபவம் இருக்குன்னு சொல்றீங்களே, என்ன அனுபவம்? எம்.எல்.ஏ சீட்டுக்கு எப்படி பேரம் பேசனும், எம்.பி சீட்டுக்கு எப்படி பேரம் பேசனுங்கிற அனுபவமா? அந்த‌ அனுப‌வ‌த்த‌ வைச்சுக்கிட்டு அட்ரோசாட‌ இருக்க‌ற‌த‌ விட‌ அனானிம‌ஸாக‌வே இருந்துட்டு போயிடலாமுங்க‌.

சூரியன் said...

வணக்கம் சந்த்திப்பு அவர்களே
உங்களைப் பற்றி தோழர்கள் கூற கேட்டுள்ளேன்.

நலமா ?

சூரியன் said...

வணக்கம் சந்த்திப்பு அவர்களே
உங்களைப் பற்றி தோழர்கள் கூற கேட்டுள்ளேன்.

நலமா ?

Anonymous said...

பிண்ணூட்டமிட்டுக் கொண்டிருக்கும் அனைத்து தோழர்களுக்கும் வணக்கம்.

நம்ம சந்திப்பு எல்லோரையும் 'நக்சல்' என்று சொல்வதைக் கேட்டு ஆச்சரியப்பட வேண்டாம். அவரும் அவர் சார்ந்த கட்சியும் வழக்கமாக, கட்சிக்குள் எதிர் கேள்வி கேட்பவர்களுக்கே சூட்டுகின்ற பட்டம் தான் 'நக்சல்' என்பது. நாம்வேறு வெளியிலிருந்து விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் இதைவிட‌ அவ‌ரால் என்ன‌தான் சொல்லிவிட‌முடியும்.

சித்தாந்த ரீதியிலான ந‌ம‌து கேள்விக‌ளையும் விமர்ச‌ண‌ங்க‌ளையும் இவ‌ர்க‌ளால் எப்ப‌டி பொறுத்துக் கொள்ள‌ முடியும்?!.

சி.பி.எம். ஐ கிழ‌க்கிந்திய‌ க‌ம்பெனியுட‌ன் ஒப்பிட்டு பாசிச‌ ம‌த‌வெறிக்கும்ப‌ல் இவ‌ர்க‌ளை சாடும்போது ச‌ந்திப்பு 1மாத லீவில் சென்றிருந்தார். நாடாளும‌ன்ற‌த்தில் அத்வானி இவ‌ர்க‌ளைப் பார்த்து 'க‌ம்யூனிஸ‌த்தின் வீழ்ச்சி ந‌ந்திகிராமில் தொட‌ங்கிவிட்ட‌து' என்று கொக்க‌ரித்த‌போது, அங்கிருந்த‌ இவ‌ர்க‌ளுடைய MPக்க‌ள் எல்லோரும் விர‌ல்சூப்பிக் கொண்டிருந்தன‌ர்.

இவர்கள் பல கட்சிகளுடன் ஐக்கியமுன்னனி கண்டு பாட‌ம்க‌ற்றுக் கொள்கையில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌து க‌ம்யூனிசமும் மக்களும் தான். மார்க்சும், எங்கெல்சும் வடித்துத்த‌ந்த பாட்டாளிவ‌ர்க்க அடையாள‌மான 'அரிவாள் சுத்திய‌ல்'ஐ கொள்ளைக்காரி ஜெய‌ல‌லிதாவின் காலில் ச‌ம‌ர்ப்பித்ததைப் பார்த்து ம‌க்க‌ளே காரி உமிழ்ந்த‌ன‌ர்.

நண்பர் சந்திப்பு அவர்களே,
இதைவிட நீங்கள் கம்யூனிசத்தைத் துறக்கிறோம் என்று சொல்வீர்களானால் கம்யூனிசம் வாழும். தயவுசெய்து இந்த கோரிக்கையினை பரிசீலிக்கவும்.

சந்திப்பு said...

அப்படியா? என்னைப் பற்றிக்கூட நீங்கள் விவாதிக்கிறீர்களா? ரொம்ப நன்றிங்க தோழரே!

பகத் (உண்மைப் பெயரா?) கிடக்கட்டும். நக்சல் என்று விமர்சித்ததற்காக தாங்கள் வருத்தப்படுவதை உணர முடிகிறது. அதே சமயம் சி.பி.எம்.மை விமர்சனம் செய்வதன் மூலம் நீங்கள் பாசிசத்தை நோக்கி பயணிக்கிறீர்களோ என்ற அச்சமும் மனதில் எழாமல் இல்லை.

சி.பி.எம். எப்போதும் நக்சலிசத்தையும் - இதர அதிதீவிர இடதுசாரிகளையும் விமர்சித்துக் கொண்டிருப்பதை தனது வழக்கமாக கொண்டிருக்கவில்லை. அதே சமயம் கொள்கை ரீதியான பிரச்சினைகள் வரும் போது சவுக்கடி கொடுக்கத் தயங்கியதும் இல்லை. உங்கள் மீதான விமர்சனத்திற்கு நீங்கள் சுயவிமர்சன ரீதியாக பரிசீலிக்காமல் மீண்டும் மீண்டும் சி.பி.எம். யை கொட்டுவதன் மூலம் நக்சலிச சித்தாந்தம் கொடி கட்டிப் பறக்காது. ஏற்கனவே மக்களிடமிருந்து தனிமைப்பட்டுப் போயிருக்கும் உங்களது பரிதாப நிலையையை அனைவரும் அறிவர்.

உங்களது தொப்புள் கொடி உறவு நக்சலிசத்தோடு இல்லையென்றால் - அல்லது உங்களை நக்சலிசத்தோடு அடையாளப்படுத்த விரும்பவில்லையென்றால் இவ்வளவு தூரம் பி.பி. ஏறியிருக்கத் தேவையில்லை.

தயவு செய்து இனிமேலாவது கொள்கை ரீதியான விமர்சனங்களை முன்வையுங்கள். நாலாந்தர விமர்சனபாணி விமர்சனச் சுழலை அழிப்பதற்கே பயன்படும்.

வாழ்த்துக்கள்!

Anonymous said...

Comrade Santhipu,

Which one is destructing you in putting my latest comment on the prabath patnaik article. Still I am waiting for your valuable reply. because either I need to correct myself or you.

I ll be awaiting for your reply to be published ASAP.

Congrats comrade,

Bagath.

Anonymous said...

//தேர்தல் குறித்து ஏங்கெல்ஸ்:(அரசும் புரட்சியும் - அத்தியாயம் 1, 3. அரசு-ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சுரண்டுவதற்கான கருவி)

"அனைத்து மக்களின் வாக்குரிமை, "தொழிலாளி வர்க்கத்தினுடைய முதிர்ச்சியின் அளவுகோலாகும். தற்கால அரசில் அது இதற்க்கு மேல் எதுவாகவும் இருக்காது. இருக்கவும் முடியாது""


தேர்தல் குறித்து லெனின்:(மேலேயுள்ள வரிக்கு அடுத்த வரிகளில்)

"நம்முடைய சோசலிஸ்டு புரட்சியாளர் கட்சியினரையும் மென்ஸிவிக்குகளையும் போன்ற குட்டி முதலாளீத்துவ ஜனநாயகவாதிகளும், இவர்களுடைய உடன் பிறந்த சகோதரர்களான மேற்கு ஐரோப்பிய சமூக-தேசிய வெறியர்கள், சந்தர்ப்பவாதிகள் அனைவரும் அனைத்து மக்களின் வாக்குரிமையிடமிருந்து இதற்க்கு மேற்பட்ட ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். 'இன்றைய அரசில்' அனைத்து மக்களின் வாக்குரிமை உழைப்பாளி மக்களில் பெரும்பாலானோரின் சித்தத்தை மெய்யாகவே புலப்படுத்திக் காட்ட வல்லது, இந்த சித்தம் நிறைவேற வழி செய்ய வல்லது என்ற பொய்க் கருத்தை இவர்கள் கொண்டுள்ளனர்; மக்களுக்கும் இதனை ஊட்டி வருகின்றனர்"
//

read this:

http://poar-parai.blogspot.com/2008/02/cpm.html

Anonymous said...

I know you wont publish my previous comments.

please try to see com.asuran's blog immediately. there are more useful messages for you especially.

thanks.

Anonymous said...

கம்யூனிஸ்ட் என்றாலே கேவலமானவன்,அயோக்யன்,பொறிக்கி என்று அர்த்தம் என்று நிறைய படித்தவ்ர்கள் கூறுகிறார்களே.சீனா/ரஷ்யா நாடுகளில் கம்யூனிசம் பின்பற்றப்படுகிறதா என்று விளக்கமாக சொல்லுங்களேன்.