April 08, 2006

திறமைக்கு மதிப்பு இருக்காது: IIT-IIM சர்ச்சை

சமீபத்தில் மத்திய அரசும். மனிதவள மேம்பாட்டுத்துறையும் மத்திய அரசின் நிதி உதவிப்பெற்று செயல்படும் உயர் கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIS போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது.மத்திய அரசின் இந்த முடிவு இந்திய நாட்டில் உள்ள 97 சதவீதம் மக்கள் மிகுந்த எழுச்சியோடு வரவேற்கின்றனர். மற்றொரு புறம் இந்த உயர் கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த மேல் ஆதிக்க ஜாதியினர் தற்போது குய்யோ, முய்யோ என்று கூக்கூரல் எழுப்புகின்றனர்.

அவர்கள் கூறும் வாதமென்ன? உயர் தொழில்நுட்பம், விஞ்ஞானம், ஆராய்ச்சி போன்ற அதி முக்கிய துறைகளில் படிப்பதற்கு திறமைக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும். இடஒதுக்கீடு கூடாது - எனவே மத்திய அரசின் இந்த இடஒதுக்கீட்டின் முலம் இத்துறைகளில் திறமை குறைந்தவர்கள் நுழைவதற்கு வாய்ப்பு ஏற்படும். இதன் முலம் இத்துறைகள் பின்னுக்கு தள்ளப்படும் என்று அங்கலாய்க்கின்றனர்.

திறமை என்று சொன்னாலே அதற்கு நிரந்தர குத்தகையை யார் இவர்களுக்கு அளித்தார்கள் என்று தெரியவில்லை. இவ்வளவு காலம் IIT, IIM, IIS போன்ற வளாகத்திற்கு உள்ளேயே தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களை அனுமதிக்காமல், உள்வட்டம் - வெளிவட்டம் வைத்துக் கொண்டு அனைத்து தேர்வுகளிலும் இடம் பிடித்து அதன் முலம் அந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு சமுகத்தில் சமநிலை நிலவுவதை தடுத்து வந்தவர்கள் முன்னேற்றத்தைப் பற்றியோ, திறமையைப் பற்றியோ பேசுவது அபத்தமாக உள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும், சிறுபான்மையினரையும் கல்வி கற்பதற்கே அனுமதிக்காதவர்கள் தற்போது இம்மக்கள் அனைத்து துறைகளிலும் குறிப்பாக கணிணித்துறையில் வெறும் படிப்புத் திறமை மட்டும் போதாது? அங்கே கொஞ்சும் வித்தியாசமாக - Critical-ஆக சிந்திக்க வேண்டும். இன்று இத்துறைகளில் இந்திய அளவில் பல லட்சக்கணக்கானோர் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் முன்னேறி வருகின்றனர். பல திறமைசாலிகள் உலகளவில் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஆனால் இப்போதும் கூட இந்த திறமைகளையெல்லாம் உள்வட்டத்தின் முலம் பின்னுக்குத் தள்ளிவிட்டு States-க்கு சென்று விடுவதும், அங்கும் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள முயல்வதும் உலகறிந்த விசமாக மாறிவிட்டது.

இந்த நிலையில் எப்படியாவது இந்த உயர்கல்வியில் இடஒதுக்கீட்டு விசயத்தை பின்னுக்குத் தள்ளலாம் என்று பா.ஜ.க. - சங்பரிவாரம் உட்பட உயர்ஜாதி ஆதிக்க கட்சி சார்ந்த நிறுவனங்களும், அமைப்புகளும், கட்டுரையாளர்களும் முயற்சிப்பது சமுகத்தில் மேலும் ஏற்றத் தாழ்வை உருவாக்கி, எதிர்காலத்தில் அதுவேகூட பெரும் பதட்டத்திற்கு வழிவகுப்பதாக மாறும்.
தினமும் பல கண்டுபிடிப்புகளை சாதாரண மக்கள் நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அது நீரில் செல்லும் சைக்கிள், ஆட்டோமெட்டிக் ஸ்பீடு கண்ட்ரோல் செய்யும் டு வீலர்கள்... இப்படி பல விசயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுத்தான் வருகிறது. இவர்களெல்லாம் IIT, IIMல் படிக்கவில்லை. மாறாக தங்களது சொந்த அனுபவ அறிவின் முலம் இதை நிகழ்த்துகிறார்கள். எனவே இத்தகைய மக்களுக்கு இந்த உயர்கல்வியில் வாய்ப்புக் கொடுப்பது இந்தியாவின் வெகுவிரைந்த ஐ-டெக் கனவு நினைவாவதற்கு உதவிடும்.

இந்த இடஒதுக்கீட்டினை பல பத்து வருடங்களுக்கு முன்பே அமலாக்க வேண்டும் என்று மண்டல் வலியுறுத்தியிருந்தார். அதுவே உள்வட்டம் - வெளிவட்டங்களால் பல ஆண்டுகள் து£சு படிந்து தற்போதுதான் அமலாகிறது. மண்டலுக்கு நன்றிகள் கூறுவோம்.

இதைவிட முக்கியமான விசயத்தை மண்டல் கூறியிருக்கிறார் அது என்ன தெரியுமா? உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற வேண்டுமானால் நில விநியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதையும் மத்திய அரசு ஒரு சட்டத்தின் முலம் அமலாக்கிட முன்னுக்கு வரவேண்டும். தமிழகத்தில் புதியதாக அமையவுள்ள ஆட்சியும் இதை உறுதியாக அமலாக்கிட வேண்டும் இதுவே மண்டலுக்கு செய்யும் தொண்டாகும்.

39 comments:

Muthu said...

இந்த சட்டம் அமலுக்கு வருவது காலத்தின் கட்டாயம்...ஓப்பன் காம்படிஷனுக்கும் ஓ.பி.சிக்கும் மெரிட் லிஸ்ட்டில் மார்க் வித்தியாசம் என்ன என்றும் யாராவது தரலாம்.

(அறிவை பரிசோதிக்கலாமே என்றுதான் கேட்கிறேன்.எந்த தவறான நோக்கமும் கிடையாது)

மணியன் said...

காலம் கடந்த முடிவு. மண்டலுக்கும் தேர்தல் வந்தால்தான் அமலாகிறது.

Anonymous said...

At last. Some section of the people (especially the press) will be against it.

I hope you guys would have heard about the stories in chennai IIT. It is completed ruled by one caste. Even the non-brahmin professors/lectures suffer at their hands. Hope things will change.

சந்திப்பு said...

நன்றி முத்து, மணியன்

காலம் கடந்த முடிவுதான்! இதை காலம் கடத்தாமல் மத்திய அரசு அமலாக்கிட வேண்டும். இதுவே இந்திய மக்களில் 97 சதவீதத்தினரின் எதிர்பார்ப்பு.

அனானி நீங்கள் கூறியுள்ளது சரியே! பத்திரிகையாளர்கள் இதற்கு எதிராக உள்ளார்கள் என்பது. இந்திய பத்திரிகைத்துறையில் 80 சதவீதம் உயர்ஜாதி ஆதிக்கமே நிலவுகிறது. இன்றைக்கு மக்களை ஏய்க்கும் மேலாதிக்கவாதிகளாக இந்த ஜாம்பவான்கள்தான் உலா வருகிறார்கள். எனவே அவர்கள் இத்தகைய கருத்துக்களை மக்கள் மீது திணிப்பார்கள். இதற்கு எதிராக நாமும் வலுவாக கிளர்ந்து எழவேண்டியுள்ளது. இதற்கு எதிரான பெரும் பிரச்சாரத்தை நடத்திட வேண்டியுள்ளது.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

இவ்வளவு காலம் IIT, IIM, IIS போன்ற வளாகத்திற்கு உள்ளேயே தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களை அனுமதிக்காமல், உள்வட்டம் - வெளிவட்டம் வைத்துக் கொண்டு அனைத்து தேர்வுகளிலும் இடம் பிடித்து அதன் முலம் அந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு சமுகத்தில் சமநிலை நிலவுவதை தடுத்து வந்தவர்கள் முன்னேற்றத்தைப் பற்றியோ, திறமையைப் பற்றியோ பேசுவது அபத்தமாக உள்ளது

Please know the facts before writing like this. There is
quota for SC & ST in IITs and
IIMs.The entrance exam is open
to all irrespective of caste.
These entrance tests are among
the toughest in the world. Selection is based on the performance.There is no way to
identify the caste of the person
who has taken the test during
evaluation. You bigots should atleast know the facts before shouting in favor of reservations.
Can you prove that there is
discrimination against BCs or OBCs in the admission process in IITs
and IIMs.I am against reservations
for OBCs in IIMs and IITs.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

ஆனால் இப்போதும் கூட இந்த திறமைகளையெல்லாம் உள்வட்டத்தின் முலம் பின்னுக்குத் தள்ளிவிட்டு States-க்கு சென்று விடுவதும், அங்கும் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள முயல்வதும் உலகறிந்த விசமாக மாறிவிட்டது.

What is that magic Ull vattam. The
universities in USA or Canada or Europe never bother about your caste. There is no column for caste in the applications and forms.Where as in the universities in Tamil Nadu caste matters in every stage right from admissions to appointments. The so called
forward castes are discriminated
in every stage.

சந்திப்பு said...

ரவி சீனிவாசன்

தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி.

ஐயா, உங்களுக்கு மட்டுமே எல்லா விஷயங்களும் தெரியும் என்ற நினைப்பை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். அதாவது, ளுகு,ளுகூக்கு இடஒதுக்கீடு ஏற்கெனவே இருக்கிறது என்ற விபரம் அறியாமல் இந்த பதிவைப்போடவில்லை. மேலும் இங்கே உள்ள பிரச்சினையென்ன? குறிப்பாக ஐ.ஐ.டி. - ஐ.ஐ.எம். நுழைவுத் தேர்வுக்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் மிக முக்கியமானது. இந்த வகுப்புகளில் கூட குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்தவர்களுக்கே மிக அதிக அளவில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதைத்தான் நான் உள்வட்டம் - வெளிவட்டம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

அதே போல் அமெரிக்காவில் ஜாதியை கேட்டு வேலையளிப்பதில்லை என்பது உண்மையாக இருந்தாலும், பெரும்பாலும் ஐ.டி. துறையில் ஏற்கெனவே கால் பதித்து, தங்களை நிலை நிறுத்திக் கொண்டுள்ள மேல்ஜாதியினர் மற்ற தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்டவர்களை தங்களுக்கு போட்டியாளர்களாக நுழைவதை பல்வேறு வழிகளில் தடுத்து விடுகின்றனர். அவர்களுடைய சொந்தங்களையே அதுபோன்ற வேலைகளுக்கு சிபாரிசு செய்து அழைத்துக் கொள்கின்றனர். அமெரிக்கர்களைப் பொறுத்தவரை அந்த வேலைகளை ராமகிருஷ்ணன் செய்தாலும் குப்பன் செய்தாலும் ஒன்றுதான். ஆனால் இயல்பாக ராமகிருஷ்ணன்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

மேலும், இது குறித்து பல புள்ளி விபரங்களுடைய கூடிய ஒரு பதிவை போடவுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது கூட தாங்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு இடஒதுக்கீடு அளிக்க முன்வந்ததை வரவேற்பதற்கு மனமில்லாமல் இருப்பதில் இருந்தே யார் இனஒதுக்கலை - தீண்டாமை முன்கொள்கிறார்கள் என்பதை வாசகர்கள் தீர்மானிப்பார்கள்.

Anonymous said...

//திறமை என்று சொன்னாலே அதற்கு நிரந்தர குத்தகையை யார் இவர்களுக்கு அளித்தார்கள் என்று தெரியவில்லை. இவ்வளவு காலம் ஈஈT, ஈஈM, ஈஈஸ் போன்ற வளாகத்திற்கு உள்ளேயே தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களை அனுமதிக்காமல், உள்வட்டம் - வெளிவட்டம் வைத்துக் கொண்டு அனைத்து தேர்வுகளிலும் இடம் பிடித்து அதன் முலம் அந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு....///

எது அபத்தம் என்று புரியவில்லை..

தயவு செய்து 8ஆம் 9ஆம் வகுப்பில் இருந்து தன் வாழ்க்கை முழுவதையும் அர்பணித்து, பக்கத்து ரூம்மில் TV யில் ஓடிக்கொன்டு இருக்கும் சினிமாவைக்க்கூட பர்க்காமல் 5 வருடம் 6 வருடம் என்ன கஷ்டப்படும் மாணவர்களை இழிவு படுத்தாதிர்கள்.....

தயா said...

தரம் இருக்காது என்றால் அவர்களின் தரத்தை எங்கே மேம்படுத்துவது?

வசதியில்லாமல் படிப்பை பள்ளிஅளவிலேயே நிறுத்தி விடுபவர்கள் தான் அதிகம்.
இட ஒதுக்கீட்டை கல்லூரிகளில் அறிமுகப்படுத்துவதை விட பள்ளிகளில் குழந்தைகளின் கல்வி தரத்ததை மேம்படச் செய்து கல்லூரிகளுக்கு செல்வதற்கான வசதிகளை செய்தால் உருப்படியாக இருக்கும்.

இதை செய்தால் மேற்படிப்புகளுக்கு போட்டியிடுபவர்களின் திறன் ஒரே நிலையில் இருக்கும். அவர்கள் படிப்புச் செலவை கூட ஏற்றுக்கொள்ளலாம்.

உண்மையிலேயே படிக்கும் ஆசை உள்ளவர்களும் திறமையானவர்களும் இட ஒதுக்கீட்டில நுழைவது தான் நல்லது. ஆனால் நடப்பது என்ன? வசதியான வீட்டு பிள்ளைகள் இட ஒதுக்கீட்டு முறையால் ஒரு பெருமைக்காக மருத்துவ தொழிநுட்ப கல்லூரிகளில் நுழைந்து விடுகிறார்கள். இவர்களிடம் நாம் எப்படி மருத்துவம் செய்து கொள்வது?

இங்கே நடப்பது ஓட்டுக்காக தான். அதனால் தான் நோய் நாடாமல் நோயின் அறிகுறைகளை சரிப்படுத்தத்துகிறேன் என வித்தை காட்டுகிறார்கள்.

இந்த தொலைக்காட்சிகளும் பரபரப்புக்காக விவாதாங்களை ஆரோக்கியமில்லாமல் திசை திருப்பிவிடுகின்றன. உருப்படியான யோசனைகளை சொல்லி அடிப்படை மாற்றங்களை உண்டாக்குவது தான் நல்லதாக இருக்கும்.

போதாக்குறைக்கு இதில் ஜாதியையும் இழுத்து...

//நுழைவுத் தேர்வுக்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் மிக முக்கியமானது. இந்த வகுப்புகளில் கூட குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்தவர்களுக்கே மிக அதிக அளவில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதைத்தான் நான் உள்வட்டம் - வெளிவட்டம் என்று குறிப்பிட்டிருந்தேன்//

பயிற்சி வகுப்புகளில் ஜாதி என சொல்கிறீர்களே இது உங்களுக்கே அதிகமாக படவில்லை! அங்கே பணம் தான் பிரதானம். அதற்கும் இந்த கல்லூரிகளுக்கும் என்ன சம்பந்தம்?

வேண்டுமானால் இது போன்ற தரமான பயிற்சி வகுப்புகளை இலவசமாக அரசு ஒவ்வொரு மாவட்ட அளவிலும் உருவாக்க வேண்டுமென சொல்லுங்கள்.

வஜ்ரா said...

//
உள்வட்டம் - வெளிவட்டம் வைத்துக் கொண்டு அனைத்து தேர்வுகளிலும் இடம் பிடித்து அதன் முலம் அந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு...
//

என்ன தான் சொல்ல வருகிறீர்கள். யாரும் உள் வட்டம் வெளி வட்டம் எல்லம் போட்டுகொண்டு iit iim நடத்துவது இல்லை. சட்டியில் இருந்தான் அகப்பையில் வரும், மண்டையில் மசாலா இருந்தால் சீட்டு கிடைக்கும்.

யாரும் இடத்தை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு இல்லை. நீங்கள் தான் ஜாதிக்கு முதலிடம் கொடுத்து, யார் வந்தாலும் வராமல் இருந்தாலும் சரி, அவன் வரக்கூடாதுன்னு, ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை ஒதுக்க் வேண்டும், அதை சட்டப் பூர்வமக்க வேண்டும் என்று வாதாடுகிறீர்கள்.

//
திறமை என்று சொன்னாலே அதற்கு நிரந்தர குத்தகையை யார் இவர்களுக்கு அளித்தார்கள் என்று தெரியவில்லை.
//

யாரும் அளிக்கவில்லை.

இப்படிச் சீரும் நீங்கள், உங்கள் திறமையை நம்பி ஓப்பன் காம்படீஷனில் வரவேண்டியது தானே, எதர்க்காக இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள்?

ஷங்கர்.

Anonymous said...

மேலும் இங்கே உள்ள பிரச்சினையென்ன? குறிப்பாக ஐ.ஐ.டி. - ஐ.ஐ.எம். நுழைவுத் தேர்வுக்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் மிக முக்கியமானது. இந்த வகுப்புகளில் கூட குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்தவர்களுக்கே மிக அதிக அளவில் முன்னுரிமை வழங்கப்படுகிறது

Please give evidence for this.
Have you atleast seen the ads
given by various coaching
institutes.Do you know that
many schools also have coaching
classes for IIT JEE.

சந்திப்பு said...

ரிமோ 8ஆம் வகுப்பில் இருந்து கடினமாக உழைத்துப் படிக்கும் உங்களைப் போன்ற மாணவர்களை குறை சொல்வதற்காக, கேலப்படுத்துவதற்காக இது எழுதப்பட்டதல்ல. மாறாக, சமூகத்தில் எந்த இடத்திலும் ஒரு சமத்தன்மை நிலவ வேண்டும். குறிப்பாக சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். அப்படியிருக்கையில் உயர் கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இதே அளவிற்கு அந்த மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதுதான் இங்கே கேள்வி. மாறாக வெறும் 3 சதவீதம் உள்ளவர்கள் 70 சதவீத இடத்தை நிரப்புவது சமூகத்தில் சமத்தன்மையை கொண்டு வராது. மாறாக இது சமூகத்தில் எப்போதும் ஏற்றத்தாழ்வான நிலைமைகளை உருவாக்குவதற்குத்தான் வழிவகுக்கும்.
இங்கே திறமைகளைப் பற்றி பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக சங்கர் நாராயணன் மண்டையில் மசாலா இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று காட்டமாக கேட்டுள்ளார். இது எதைக் காட்டுகிறது என்றால் எங்களுக்குத்தான் மண்டையில் மசலா உள்ளது. உங்களுக்கு களிமண்தான் இருக்கிறது என்று மறைமுகமாக கூறும் ஆணவ மனப்பாங்கைத்தான் வெளிப்படுத்துகிறது. இது சரியான அணுகுமுறைல்ல.
தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதிய கட்டுமானத்தின் - அதுவும் மனு தர்மம் என்ற பெயரால் கல்வி முற்றிலுமாக மறுத்தனர். இத்தகைய மக்கள் சுதந்திர இந்தியாவில்தான் ஓரளவு அதுவும் இப்போதுதான் தங்களது பாதத்தை கல்வி எனும் படிக்கட்டில் எடுத்து வைக்கின்றனர். இந்த ஜனநாயக நாட்டில் கூட இந்த மக்களை - மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேலே உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் உயர் ஜாதி - ஆதிக்க மனம் படைத்தவர்களிடம் ஏற்படவில்லை என்றால், இவ்வளவு ஆண்டு காலம் அவர்கள் பெற்ற கல்வியின் மூலம் உண்மையான சமூக கல்வியைப் பெறாத கல்லாதவர்களாகத்தான் (மசாலா இல்லாதவர்களாகத்தான்) பார்க்க முடியும். கருத முடியும்.
ஏன் இன்றைக்கும் இந்தியா முழுமையிலும் இருக்கும் பல லட்சக்கணக்கான கோவில்களில் கருவறை பூசாரிகளாக வீற்றிருப்பவர்கள் யார்? உயர் ஜாதி ஆதிக்கவாதிகள்தானே. இன்றைக்கும் அதே சமசுகிருத்தை நன்றாக கற்று - பக்தி மார்க்கத்தில் பயிற்சி பெற்ற தாழ்த்தப்பட்டவர்களை - பிற்படுத்தப்பட்டவர்களை கோவில் பூசாரிகளாக்குவதற்கு இந்த உயர் ஜாதி ஆதிக்க மனம் படைத்தவர்கள் விட்டு விடுவார்களா?
கோவில்களில் இருந்து - கல்வி கோவில் வரை தங்களது ஆதிக்கமே நிலை நிறுத்த வேண்டும் என்ற ஆதிக்க வெறி சமூகத்தில் பாதகமான விளைவுகளைத்தான் உண்டு பண்ணும். எனவே தற்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை உணராமல், உணர்ச்சியடிப்படையில் அணுகினால் - அது இந்த ஜாதிய பிடிமானத்தை மேலும் இறுக்குவதற்குத்தான் வழிவகுக்கும்.
எனவே, கல்வி கூடங்கள் முதல் கோவில்கள் வரை அனைத்து மக்களும் சமம் என்ற நிலையை நிலைநாட்டிட அனைவரும் ஒன்றுபட வேண்டும். இந்த கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை வலுப்படுத்திட வேண்டும். அதற்காக பிராமணர்களை பிற்படுத்தப்பட்ட மக்களின் எதிரியாகவோ, பிற்படுத்தப்பட்ட மக்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரியாகவோ மாற்றிட வேண்டும் என்று எண்ணுபவனல்ல நான். அனைத்து தரப்பு மக்களும் - சமூக நியாயத்தை நிலைநாட்டிட முன்வரவேண்டும். இதற்கு முதலில் படியேறி உயர்ந்த இடத்தை பிடித்துள்ள நீங்கள் அடுத்தவர்கள் படியேறுவதற்கு உதவிட வேண்டுமே தவிர அங்கே மீண்டும் ஒரு பெரிய பாராங்கற்களை வைத்து தடுக்கும் பணியில் ஈடுபட வேண்டாம் என இங்கே கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து ஒரு அனானி, எவிட்ன்சு கேட்டுள்ளார். கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. எவிடென்சு கட்டாயம் தேவையென்றால் கண்டிப்பாக அதையும் சேர்த்து இன்னொரு சிறப்பு பதிவை போட தயாராக உள்ளேன்.

Anonymous said...

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு யாரும் தடையாக இல்லை. அனைவருக்கும் பொதுவான தேர்வு என்று இருக்கும் போது ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதினை உயர்கல்வியில் தரத் வையில்லை.பள்ளிக்கல்வியில் தரமான கல்வியைத் தர தவறிய அரசு இப்படி ஜாதிரீதியாக இட ஒதுக்கீடு கொடுத்து திருப்திப்படுத்த நினைக்கிறது.தமிழ் நாட்டில் பிற்பட்டோருக்கு இன்று இட ஒதுக்கீடே தேவையில்லை என்ற அளவிற்கு அவர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்விலும் கூட ஜாதி ரீதியாகத்தான் மாணவர்களை தேர்ந்தெடுப்போம் என்பது சரியானது அல்ல.கோயில்களில் அர்சசகர் ஆக அனைத்து ஜாதியினருக்கும் உரிமை உண்டு. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

Voice on Wings said...

பின்னூட்டத்தில் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள், சந்திப்பு. IIT, IIM, AIIMS போன்ற கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதிலிருந்தே அவர்களுக்கு entry barrier இருப்பது உறுதியாகிறது. மற்றும் இதுபோன்ற நிறுவனங்களிலிருந்து வெளிவரும் மாணவர்களே நாளைய இந்தியாவில் / உலகில் தலைமைப் பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்களாக இருப்பார்கள் என்னும்போது, அவற்றில் எல்லா தரப்பினருக்கும் சம வாய்ப்பு இருப்பது அவசியமாகிறது. தரம் பற்றிய கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன. என்னைக் கேட்டால், homogenous / ஒரே வகையான மாணவர்கள் இருக்கும் ஒரு அமைப்பை விட, diverse / பலவகைப்பட்ட பின்புலங்கள், திறமைகள் கொண்ட மாணவர்கள் இருப்பதால் ஒட்டு மொத்த அமைப்பிற்கும் ஆதாயமே. இதை, Stephen Covey போன்ற நிர்வாகத்துறை நிபுணர்களும் வலியுறுத்தியுள்ளார்கள்.

சந்திப்பு said...

அனானி கொஞ்சம் முகமூடியை கழற்றுங்கள். சொல்வதை தைரியமாக தங்கள் முகத்தை காட்டிச் சொல்லவும். எங்கே தன்னை இனம் கன்டு கொள்வார்களோ என்பதுபோல் உள்ளது நீங்கள் அனானியாக வருவது.

நீங்கள் கூறுவது என்னவென்றால், ஒரு நல்ல பாக்சரை - நோஞ்சானோடு மோதச் சொல்வது போல் உள்ளது. ஓட்டப்பந்தயத்தில் நொண்டிகளை - ஆரோக்கியமான ஓட்டப் பந்தயக்காரர்களோடு ஓடச் சொல்வது போல் உள்ளது. இதுதான் ஆரோக்கியமான போட்டியா? நிச்சயம் இல்லை. இந்திய சமூகத்தில் ஊனமுற்று இருப்பவர்கள்தான் தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். எனவே அவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகளை வழங்கினால்தான் குறைந்தபட்சம் உங்களுக்கு இரண்டாவது, மூன்றாவது இடத்திலாவது வருவார்கள். இங்கே இன்னும் ஒரு உதாரணத்தைக்கூட கூறலாம். இன்றைக்கு பல நூற்றாண்டுகளாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கும் மீனவர்கள் கட்டுமரத்திலும், படகுகளிலும் சென்று மீன்களைப் பிடித்து வருகின்றனர். இவர்களோடு உயர் ஜாதியினரை நீங்களும் சமமாக மீன்பிடிக்க முடியுமா? என்று இங்கே நான் கேள்வி எழுப்பினால் விடை கிடைக்குமா? நிச்சயமாக அவர்களோடு போட்டியிட உயர்ஜாதியினரால் முடியாது. அவர்களது அனுபவம் - பாரம்பரியமானது. அதுபோலத்தான் கல்வித்துறையிலும் பின்தங்கியிருக்கும் மக்கள் வலுப்பெற இத்தகைய இடஒதுக்கீடு அவசியம். அவசியம்! இது காலத்தின் கட்டாயம்.

வஜ்ரா said...

//
அப்படியிருக்கையில் உயர் கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இதே அளவிற்கு அந்த மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதுதான் இங்கே கேள்வி.
//


அடிப்படைக் கல்விக்குதான் இட ஒதுக்கீடு எல்லம் சரி. ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து பின், ஒருவனுக்கு ஜாதி அடிப்படையில் சீட்டு கொடுத்தாலும், மற்றவனுக்கு அதே ஜாதி அடிப்படையில் சீட்டு மறுக்கப்படுவதும், அதை நியாயப்படுத்த 3000 ஆண்டுக்கு மேலாக கல்வி மறுக்கப் பட்டவர்கள் என்று புதிய வரலாறு எல்லாம் கண்டு பிடித்து எழுதுகிறீர்கள். SC/ST க்கு இட ஒதுக்கீடு நிச்சயமாக கொடுக்கப் படவேண்டும். ஆனால், அதே 3000 ஆண்டுகளாக, SC/STக்களை மிருகத்தைவிட கேவலமாக நடத்தியதில் சம பங்கு வகிக்கும் OBCக்கு ஏன் இட ஒதுக்கீடு?


//
குறிப்பாக சங்கர் நாராயணன் மண்டையில் மசாலா இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று காட்டமாக கேட்டுள்ளார். இது எதைக் காட்டுகிறது என்றால் எங்களுக்குத்தான் மண்டையில் மசலா உள்ளது. உங்களுக்கு களிமண்தான் இருக்கிறது என்று மறைமுகமாக கூறும் ஆணவ மனப்பாங்கைத்தான் வெளிப்படுத்துகிறது. இது சரியான அணுகுமுறைல்ல.
//

நான் கூறியதர்க்கு இப்படியும் அர்த்தம் எடுத்துக் கொள்ள முடியுமா?

நான் அப்படிக் கூறியதர்க்கு காரணம், யாரே உள் வட்டம், வெளிவட்டம் அமைத்துக் கொண்டு மற்ற்வர்களை உள்ளேயே விடுவதில்லை போல் பேசியதனால் தான். இதில் ஆணவம் இல்லை, நியாயமான கோபம்.

//
பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதிய கட்டுமானத்தின் - அதுவும் மனு தர்மம் என்ற பெயரால் கல்வி முற்றிலுமாக மறுத்தனர்.
//
அப்பட்டமான பொய் (அக்மார்க், ISI முத்திரையுடன்)
//
ஏன் இன்றைக்கும் இந்தியா முழுமையிலும் இருக்கும் பல லட்சக்கணக்கான கோவில்களில் கருவறை பூசாரிகளாக வீற்றிருப்பவர்கள் யார்? உயர் ஜாதி ஆதிக்கவாதிகள்தானே. இன்றைக்கும் அதே சமசுகிருத்தை நன்றாக கற்று - பக்தி மார்க்கத்தில் பயிற்சி பெற்ற தாழ்த்தப்பட்டவர்களை - பிற்படுத்தப்பட்டவர்களை கோவில் பூசாரிகளாக்குவதற்கு இந்த உயர் ஜாதி ஆதிக்க மனம் படைத்தவர்கள் விட்டு விடுவார்களா?
//

தெரிந்தால் மட்டுமே அதைப் பற்றி எழுதவேண்டும், மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் பூஜை செய்பவர்கள் பிராமணர்கள் இல்லை பண்டாரம் என்ற OBC யினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

OBC/BC ஜாதிச் சான்றிதள்கள், மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். ஒரு சில ஜாதியினர் தமிழ் நாட்டில் BC யாகவும், கர்னாடகத்தில் FC அதாவது General category யாகவும் வருகின்றனர். OBC/BC classification முற்றிலும் அரசியல் உள் நோக்கத்தால் மட்டுமே பிறிக்கப் பட்டுள்ளது. இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களைப் பற்றி எழுதும் போது, இதை சிந்திக்க வேண்டும்.
//

கோவில்களில் இருந்து - கல்வி கோவில் வரை தங்களது ஆதிக்கமே நிலை நிறுத்த வேண்டும் என்ற ஆதிக்க வெறி சமூகத்தில் பாதகமான விளைவுகளைத்தான் உண்டு பண்ணும். எனவே தற்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை உணராமல், உணர்ச்சியடிப்படையில் அணுகினால் - அது இந்த ஜாதிய பிடிமானத்தை மேலும் இறுக்குவதற்குத்தான் வழிவகுக்கும்.
//

பிறந்த முதல் (பிறப்புச் சான்றிதள்), படிக்கும் காலத்தில் (ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு), வெலை வாய்ப்பு (ஜாதி அடிப்படையில்), இவை எல்லாம் "ஜாதியப் பிடிமானத்தை மேலும் இறுக்காது" ஆனால், தரமான கல்வி நிறுவனங்கள் அமைத்து அனைத்து சாராருக்கும் கல்வி புகட்டினாலும், வேறுபாடின்றி நுழைவுத்தேர்வினால் மேல் படிப்பிற்க்கு தேர்ந்தெடுத்தாலும் "ஜாதியப் பிடிமானம் இறுக்கமடையும்" என்னே உங்கள் அறிவு, "மெய்சிலிற்கவக்கிறது"!!

//
IIT, IIM, AIIMS போன்ற கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதிலிருந்தே அவர்களுக்கு entry barrier இருப்பது உறுதியாகிறது.
//
voice of the wings!! எப்பேர்பட்ட கண்டுபிடிப்பு. !! ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அந்த இடத்தில் அதிகம் தென்படவில்லை என்பதற்க்காக, அவர்களுக்கு entry barrier இருப்பது உருதியாகிறது என்று "கண்டுபிடித்து" சொன்னதர்க்கு நன்றி.

ஷங்கர்.

வஜ்ரா said...

//
இன்றைக்கு பல நூற்றாண்டுகளாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கும் மீனவர்கள் கட்டுமரத்திலும், படகுகளிலும் சென்று மீன்களைப் பிடித்து வருகின்றனர். இவர்களோடு உயர் ஜாதியினரை நீங்களும் சமமாக மீன்பிடிக்க முடியுமா? என்று இங்கே நான் கேள்வி எழுப்பினால் விடை கிடைக்குமா? நிச்சயமாக அவர்களோடு போட்டியிட உயர்ஜாதியினரால் முடியாது. அவர்களது அனுபவம் - பாரம்பரியமானது. அதுபோலத்தான் கல்வித்துறையிலும் பின்தங்கியிருக்கும் மக்கள் வலுப்பெற இத்தகைய இடஒதுக்கீடு அவசியம். அவசியம்! இது காலத்தின் கட்டாயம்.
//

நல்ல கதாய இருக்குது!! நீங்கள் சொல்லும் லாஜிக்கில் பைல்வான் மகன் குஸ்தி போட்டுடே பொறக்கணும்? நடக்குமா? . முட்டாளான பார்பான்களும் இருக்கிறார்கள், அறிவாளியான மீனவர்களும் இருக்கிறார்கள். தரமான அடிப்படைக் கல்வி எல்லோருக்கும் வழங்கவேண்டும். பின்னர் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகள் தேவைப் படாது. இதற்காக பாடுபடும் அரசியல் கட்சி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் எல்லோரும் அதர்க்கு வோட்டு போடுவோம்.

ஒன்று மட்டும் உறுதி, இத்தகய இட ஒதுக்கீடு வந்தால், Brain drain அமோகமாக நடக்கும். திறமை மிக்க வர்கள் வெளி நாடு சென்று விடுவார்கள். மொத்ததில் இட ஒதுக்கீட்டுக்கு மூல காரணம் தாழ்த்தப் பட்டவர்கள்-பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தினால் இருக்க வேண்டுமே ஒழிய மேல் ஜாதியினரை விரட்டவேண்டும், அவர்களை அடிமைகள் ஆக்கவேண்டும் போன்ற எண்ணத்தினால் வரும் உந்துதலினால் இருக்கக் கூடாது. அத்தகய காரியம் "social conflict" ஐ தான் உருவாக்கும்.

//

. IIT, IIM, AIIMS போன்ற கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதிலிருந்தே அவர்களுக்கு entry barrier இருப்பது உறுதியாகிறது.
//

நான் படித்த ம்துரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எனக்கு பாடம் நடத்திய முனைவர்கள் பலர் IIScல் தான் தங்கள் முனைவர் பட்டம் பெற்றனர். அவர்கள் யாரும் பிராமணர்கள் கிடையாது. உங்களைப் போல் கலர் கண்ணாடி அணிந்துகொண்டு பார்தால் எல்லா இடத்திலும் லக்ஷ்மண் ரேகை இருப்பது போல் தான் தோன்றும்.

ஷங்கர்.

சந்திப்பு said...

நன்றி வாய்சு ஆன் விங். இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்சினைகளில் ஆதரவு குரல்கள்தான் வலுவாக ஓங்கி ஒலிக்கிறது. அது முகமூடிகளை (அனானியாக) வருகிறது. இருப்பினும் விவாதம் என்ற முறையில் ஏற்றுக் கொள்ளலாம். இந்த பிரச்சினையில் தங்கள் ஆதரவு சரியான நேரத்தில் பதியப்பட்டிருக்கிறது. இதற்கு நன்றிகளைத் தெரிவிப்பதை விட, இந்தப் பிரச்சினைகள் குறித்து நீங்களும் வேறு கோணத்தில் ஒரு பதிவு போட்டால் சிறப்பாக இருக்கும் என கருதுகிறேன்.

சந்திப்பு said...

(அதை நியாயப்படுத்த 3000 ஆண்டுக்கு மேலாக கல்வி மறுக்கப் பட்டவர்கள் என்று புதிய வரலாறு எல்லாம் கண்டு பிடித்து எழுதுகிறீர்கள். SC/ST க்கு இட ஒதுக்கீடு நிச்சயமாக கொடுக்கப் படவேண்டும். ஆனால், அதே 3000 ஆண்டுகளாக, SC/STக்களை மிருகத்தைவிட கேவலமாக நடத்தியதில் சம பங்கு வகிக்கும் OBCக்கு ஏன் இட ஒதுக்கீடு?)

சங்கர் நாராயணன் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி மறுக்கப்பட்டுள்ளது என்பது புதிய வரலாறு இல்லை. அது உண்மை வரலாறு. இன்றைக்கும் தமிழகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதோர் 35 சதவீதம் இருக்கின்றனர். (இவர்கள் எல்லாம் உயர் ஜாதியினர் இல்லை) தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். இந்த எண்ணிக்கை அகில இந்திய அளவில் 37 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறது. மேலும் எழுதப்படிக்கத் தெரிந்தோர் எல்லாம் வெறும் கையெழுத்து போட மட்டும் தெரிந்தவர்கள்தான். ஒடுக்கப்பட்ட மக்களில் உயர் கல்வி முடித்தோர் ஒரு சதவீதம் கூட தேறாது. இதுதான் உண்மையான இந்தியாவின் நிலை.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் பேசும் கல்வி சமத்துவம் ஒரு அநீதியானது. உயர் ஜாதி வகுப்பில் இருந்து ஐ.ஐ.டி.யில் படிக்க வரும் மாணவனின் ஐந்து - ஆறு தலைமுறைக்கு மேல் உயர் கல்வி படித்தவர்களாகவும், உயர் தொழில் பணிபுரிபவர்களாவும்தான் இருப்பார்கள். அதே சமயம் ஒடுக்கப்பட்ட வகுப்பில் இருந்து ஐ.ஐ.டி.யில் படிக்க ஏதாவது ஒரு மாணவன் வந்தால், அவன் தான் முதல் தலைமுறையாக இருப்பான். இதுதான் உண்மை வரலாறு.
அடுத்து, மிருகத்தை விட கேவலமாக நடத்தியதில் சம பங்கு வகிக்கும் ஓ.பி.சி.க்கு ஏன் இட ஒதுக்கீடு. ஆயா என்ன அற்புதமான கேள்வி! கீழ்மட்டத்தில் இரண்டு தரப்பில் இருக்கும் மக்களிடையே பிரிவினை உணர்வை தூண்டுவதில் உயர் ஜாதி அணுகுமுறையின் தொடர்ச்சிதான் உங்கள் பதில். இந்து ஒடுக்குதலை - ஜாதிய முறையை கொண்டு வந்ததே மனு தர்மமும், பிராமணீயமும்தான். இந்த ஜாதிய முரண்பாடுகள் தேவையில்லை என்று கூறிக் கொண்டே, அதை எப்படி தொடரச் செய்வது என்பதில் உள்ள விஷமம்தான் இன்னும் உயர் ஜாதி சித்தாந்த வாதிகளின் அணுகுமுறையாக இருக்கிறது.


(மதுரைமீனாக்ஷி அம்மன் கோயிலில் பூஜை செய்பவர்கள் பிராமணர்கள் இல்லை பண்டாரம் என்ற OBC யினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?)


வரலாற்றை திரிப்பது என்பது இதுதான். ஐயா நீங்கள் கூறுவது போல் மதுரை மீனாட்சியம்மான் கோவில் கருவறைக்குள் ஓ.பி.சி. யைச் சேர்ந்த பண்டாரங்கள் பூஜை செய்வதில்லை. அவர்களை அந்த நிழலில் கூட அண்ட விட மாட்டார்கள். அங்கும் பிராமணர்களின் ஆதிக்கம்தான். ஒன்றை ஒன்பதாக்குவது என்ற கலையில் வல்லவரோ நீர்!



ஒன்று மட்டும் உறுதி, இத்தகய இட ஒதுக்கீடு வந்தால், Brain drain அமோகமாக நடக்கும். திறமை மிக்க வர்கள் வெளி நாடு சென்று விடுவார்கள். மொத்ததில் இட ஒதுக்கீட்டுக்கு மூல காரணம் தாழ்த்தப் பட்டவர்கள்-பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தினால் இருக்க வேண்டுமே ஒழிய மேல் ஜாதியினரை விரட்டவேண்டும், அவர்களை அடிமைகள் ஆக்கவேண்டும் போன்ற எண்ணத்தினால் வரும் உந்துதலினால் இருக்கக் கூடாது. அத்தகய காரியம் "social conflict" ஐ தான் உருவாக்கும்.


பிரைன் டிரைனை இனிமேல் யாரும் புதியதாக செய்ய வேண்டியதில்லை. இந்திய மண்ணில், 90 சதவீதம் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களின் வரிப்பணத்தில் வரும் வருமானத்தில் கல்விக்கு மத்திய அரசு அளிக்கும் பணத்தில் படித்து விட்டு, பிரைன் டிரைனை மிக துரிதமாக செய்துக் கொண்டிருப்பது இன்றைக்கும் சாட்சாத் உயர் ஜாதியினர்தான். அவர்கள்தான் இதிலும் முதலிடம்! அதற்காக நீங்கள் நிச்சயம் பெருமைப்படலாம். ஒரு வேளை நீங்கள் சொல்லுவது போல் பிரைன் டிரையின் ஆனால், ஒரு புதிய சுதந்திரக் காற்றை இந்தியா உணரும் என நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள் சங்கர நாராயணன்.



நான் படித்த ம்துரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எனக்கு பாடம் நடத்திய முனைவர்கள் பலர் IIScல் தான் தங்கள் முனைவர் பட்டம் பெற்றனர். அவர்கள் யாரும் பிராமணர்கள் கிடையாது.


பாவம் அந்த ஆசிரியர்கள்! அவர்களுக்கு தங்கள் பிரைனை எப்படி டிரையின் செய்வது என்று தெரியாத அப்பாவிகள்!...
எங்களுக்கு இதுபோன்ற தங்களது பிரைனை அடகு வைக்காத ஆசிரியர்கள் இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது. அதை நாங்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்துதான் பெற முடியும்! எனவே இந்த இடஒதுக்கீடு வலுவாக - உடனடியாக மத்திய அரசு அமலாக்கிட வேண்டும்.

வஜ்ரா said...

//
நான் படித்த ம்துரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எனக்கு பாடம் நடத்திய முனைவர்கள் பலர் IIScல் தான் தங்கள் முனைவர் பட்டம் பெற்றனர். அவர்கள் யாரும் பிராமணர்கள் கிடையாது.


பாவம் அந்த ஆசிரியர்கள்! அவர்களுக்கு தங்கள் பிரைனை எப்படி டிரையின் செய்வது என்று தெரியாத அப்பாவிகள்!...
எங்களுக்கு இதுபோன்ற தங்களது பிரைனை அடகு வைக்காத ஆசிரியர்கள் இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது. அதை நாங்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்துதான் பெற முடியும்! எனவே இந்த இடஒதுக்கீடு வலுவாக - உடனடியாக மத்திய அரசு அமலாக்கிட வேண்டும்.
//


நான் அதை எதக்காக கூறினேன் என்று பார்க்காமல், personal attacks ல் இறங்கினால் எப்படி? நான் அதில் கேட்க வந்தது, அவர்கள் எல்லம் இட ஒதுக்கீடு இல்லாமல் தங்கள் சொந்தத் திறமையினால் முன்னுக்கு வந்தவர்கள். அவர்கள் மேல் எனக்கு என்றுமே பெரிய மதிப்பு இருக்கிறது.

//
(மதுரைமீனாக்ஷி அம்மன் கோயிலில் பூஜை செய்பவர்கள் பிராமணர்கள் இல்லை பண்டாரம் என்ற OBC யினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?)


வரலாற்றை திரிப்பது என்பது இதுதான். ஐயா நீங்கள் கூறுவது போல் மதுரை மீனாட்சியம்மான் கோவில் கருவறைக்குள் ஓ.பி.சி. யைச் சேர்ந்த பண்டாரங்கள் பூஜை செய்வதில்லை. அவர்களை அந்த நிழலில் கூட அண்ட விட மாட்டார்கள். அங்கும் பிராமணர்களின் ஆதிக்கம்தான். ஒன்றை ஒன்பதாக்குவது என்ற கலையில் வல்லவரோ நீர்!

//

ஐயா! நான் 25 வருடமாக மதுரையில் தான் ஐய்யா வளர்ந்தேன். வரலாற்றை எல்லாம் திரிக்க வில்லை. என் ஜாதி ஒரு OBC ஜாதி தான். எங்களையும் அவர்கள் கர்ப கிரகத்தில் விட்டதில்லை. அதனால் தான் எனக்கு அவர்கள் யார் என்று தெரியும்.

//
ஒன்றை ஒன்பதாக்குவது என்ற கலையில் வல்லவரோ நீர்!
//

thanks for the compliment! :)

//
பிரைன் டிரைனை இனிமேல் யாரும் புதியதாக செய்ய வேண்டியதில்லை. இந்திய மண்ணில், 90 சதவீதம் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களின் வரிப்பணத்தில் வரும் வருமானத்தில் கல்விக்கு மத்திய அரசு அளிக்கும் பணத்தில் படித்து விட்டு, பிரைன் டிரைனை மிக துரிதமாக செய்துக் கொண்டிருப்பது இன்றைக்கும் சாட்சாத் உயர் ஜாதியினர்தான். அவர்கள்தான் இதிலும் முதலிடம்! அதற்காக நீங்கள் நிச்சயம் பெருமைப்படலாம். ஒரு வேளை நீங்கள் சொல்லுவது போல் பிரைன் டிரையின் ஆனால், ஒரு புதிய சுதந்திரக் காற்றை இந்தியா உணரும் என நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள் சங்கர நாராயணன்.

//

எவன் வந்தாலும் சரி. அவன் வரக்கூடாது என்ற வெறுப்பு தான் தெரிகிறது. உண்மையாக தம் மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற ஆவல், கிஞ்சித்தும் இல்லை. நீங்கள் விரட்டி விட்டு, மேல் ஜாதிக் காரர்கள் காணாமல் போய்விட மாட்டார்கள், அவர்களிடம் திறமை இருக்கிறது, எங்கேயாவது போய் பிழைத்துக் கொள்வார்கள். வெளி நாடுகளில் வெகுவாக சாதிக்கும் இந்தியர்கள் யார் என்று பார்தாலே தெரியும். இப்படி இட ஒதுக்கீடு போன்ற மிட்டய்களைக் காட்டி உங்கள் வோட்டுக்களை வாங்கும் அரசியல் வாதிகள் கையில் சிக்கி, சின்னாபின்னம் ஆகிக் கொண்டிருப்பது தான் "ஒரு புதிய சுதத்ந்திரக் காற்று" என்றால் உங்கள் சுதத்ந்திரத்தை நீங்களே வைத்து பூஜை பண்ணுங்கள்.

//
இன்றைக்கும் தமிழகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதோர் 35 சதவீதம் இருக்கின்றனர். (இவர்கள் எல்லாம் உயர் ஜாதியினர் இல்லை)
//

இவர்கள் எல்லாம் பிற்படுத்தப் பட்ட- தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மட்டும் தான் என்று உங்களால் அறுதி யிட்டுச் சொல்ல முடியுமா?

//
ஜாதிய முறையை கொண்டு வந்ததே மனு தர்மமும், பிராமணீயமும்தான். இந்த ஜாதிய முரண்பாடுகள் தேவையில்லை என்று கூறிக் கொண்டே, அதை எப்படி தொடரச் செய்வது என்பதில் உள்ள விஷமம்தான் இன்னும் உயர் ஜாதி சித்தாந்த வாதிகளின் அணுகுமுறையாக இருக்கிறது.
//

இந்த கருத்து இந்தியாவில் நடக்கும் அனைத்து கெட்டவைகளுக்கும் ஆணி வேர் பிராமணர்கள் தான் என்ற பெரியாரிடமிருந்து வரும் "Revelations" ன் கண்ணோட்டத்தால் வரும் கருத்து. நாஜிக்களிடம் என்ன சொன்னாலும் அவர்களுக்கு, யூதர்கள் தான் உலகத்தில் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். உங்களைப் போன்றவரகளிடம் என்ன சொன்னாலும், உங்களுக்கு, பிராமணர்கள் தான் இந்தியாவில் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்.

தங்கள் வலைப்பதிவில் என் பின்னூட்டங்களை அனுமதித்ததற்கு நன்றி.

ஷங்கர்.

Anonymous said...

மிடில் கிளாஸ் அம்பிகளுக்கு இதையெல்லாம் விளக்கமுடியாது சந்திப்பு அவர்களே,

3000 வருட கொடுமையை 50 வருடங்களில் அழிக்க பார்க்கிறார்கள். புரியாதவனுக்கு தான் விளக்கமுடியும்.இவர்களெல்லாம் விவரம் தெரிந்தவர்கள். ஐஐடியில் படித்து ஃபாரினில் செட்டிலாகிவிட்டு வெட்கமில்லாமல் பேசுவார்கள்.

கொஞ்சம நாள் அடங்கி இருங்கப்பா.நாங்களும் முன்னே வருகிறோம்.அது வரைக்கும் ஐ.ஐ.டிக்கு பதிலாக நீ சாதா இன்சீனியரிங் படிச்சா தேஞ்சா போயிடுவ?

Anonymous said...

There is brain drain.If I am a brahmin or forward caste i wont get a job in the universities in
tamil nadu.should i starve in tamil nadu saying periyar vazhga or should i migrate to usa where
my caste is irrelevant.OBCs do
migrate to USA.Mr.Santhippu is trying to subsitute rhetoric for factual analysis.Either he does not understand the issue or is a victim of the false propaganda.

Anonymous said...

தரம் பற்றிய கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன. என்னைக் கேட்டால், homogenous / ஒரே வகையான மாணவர்கள் இருக்கும் ஒரு அமைப்பை விட, diverse / பலவகைப்பட்ட பின்புலங்கள், திறமைகள் கொண்ட மாணவர்கள் இருப்பதால் ஒட்டு மொத்த அமைப்பிற்கும் ஆதாயமே. இதை, Stephen Covey போன்ற நிர்வாகத்துறை நிபுணர்களும் வலியுறுத்தியுள்ளார்கள்.

this diversity has nothing to do with caste.it has more to diversity in terms of talents,
skills,interests and attitudes.
In USA diversity means diversity
in terms of gender, ethinicity
also.In other words it not just
african americans and whites.
Those who argue for quotas for OBCs
are the ones who are blocking reservation for women in assemblies and lok sabha. These
MC politicians are not for gender
equality.why not a quota for women
in all jobs and in admissions.why
should it be only for OBCS.
These male chauvinist politicians
e.g. Veeramani (DK), Lalu, Mulayam
and parties are scared of women
getting empowered.These hypocrites want to perpetuate the hegemony
of the OBCs.All the talk of social justice ultimately means only this.

Voice on Wings said...

சந்திப்பு, இதில் தனிப்பதிவு எழுதும் அளவுக்கு (இங்கு கூறப்படுவது போல்) எனக்கு 'மண்டையில் மசாலா' இருக்கிறதா என்று தெரியவில்லை. நீங்களே அற்புதமாக எதிர்வினைகளை வழங்கி வருவதால், ஒரு பார்வையாளனாக மட்டும் இதில் பங்கு கொள்கிறேன் :)

To the anonymous above: Stephen Covey did not write his book only in the context of US. Diversity may mean different things in different societies. But in the end the message conveyed is that an inclusive, diverse setup fares better than an exlusive, homogenous setup.

சந்திப்பு said...


(அவர்கள் எல்லம் இட ஒதுக்கீடு இல்லாமல் தங்கள் சொந்தத் திறமையினால் முன்னுக்கு வந்தவர்கள்.)

சங்கர் நாராயணன் நீங்கள் இவ்வாறு கூறுவதன் நோக்கத்தின் உள்ளடக்கமே அவர்களது திறமையைப் புகழ்வதற்காக அல்ல; மாறாக இவர்களைக் காட்டி இடஒதுக்கீடு கொள்கையை நிராகரிப்பதுதான்.



("ஒரு புதிய சுதத்ந்திரக் காற்று" என்றால் உங்கள் சுதத்ந்திரத்தை நீங்களே வைத்து பூஜை பண்ணுங்கள்.)

பிராமணர்கள் வரக்கூடாது என்ற எண்ணத்திற்கு இங்கே இடமேயில்லை. ஏனென்றால் எல்லா இடங்களில் அவர்களின் ஆதிக்கமே வியாபித்து இருக்கும் போது, அவர்கள் வருவது குறித்தே கேள்வியே இங்கு எழவில்லை. 97 சதவீதம் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் அந்த இடங்களில் வரவேண்டும் என்பதுதான் என் விவாதத்தின் மையப் புள்ளி.
இந்தியாவில் தங்களது உயர் கல்வியை முடித்து விட்டு, வேற்று நாடுகளில் சேவகம் புரியும் உங்களுக்கு இந்தியாவின் சுதந்திரக் காற்று இப்போது அசுத்தமாக தெரிவது இயல்புதான். நீங்கள் தயவு செய்து கீரின் கார்டு பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டில் ஆகி விடுங்கள்.


(இவர்கள் எல்லாம் பிற்படுத்தப் பட்ட- தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மட்டும் தான் என்று உங்களால் அறுதி யிட்டுச் சொல்ல முடியுமா?)

இப்படியொரு கேள்வியை உங்களால்தான் கேட்க முடியும். இதை அபத்தம் என்று சொல்லுவதைத் தவிர வேறு என்ன கூறமுடியும்!



(இந்த கருத்து இந்தியாவில் நடக்கும் அனைத்து கெட்டவைகளுக்கும் ஆணி வேர் பிராமணர்கள் தான் என்ற பெரியாரிடமிருந்து வரும் "Revelations" ன் கண்ணோட்டத்தால் வரும் கருத்து. நாஜிக்களிடம் என்ன சொன்னாலும் அவர்களுக்கு, யூதர்கள் தான் உலகத்தில் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். உங்களைப் போன்றவரகளிடம் என்ன சொன்னாலும், உங்களுக்கு, பிராமணர்கள் தான் இந்தியாவில் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். )

ஏறக்குறைய நீங்கள் பெரியாரை - நாஜிக்களோடு ஒப்பிட்டு விட்டீர்கள். பெரியாருக்கு பிராமணர்கள் மீது எந்தவிதமான வெறுப்பும் இல்லை. ஏன் பெரியாருடன் இணைந்து பல பிராமணர்கள் செயல்பட்டார்கள். ராஜாஜி உட்பட. அவருக்கு பிடிக்காத கொள்கையே பிராமணியம்தான். ஒரு மனிதன் என்ற அடிப்படையில் இங்கே அனைத்து மனிதனின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும். இதுதான் இன்றைய தத்துவம்! அதே சமயம் பெரும்பான்மை மக்களின் பங்கினை பிடிங்கித் தின்று விட்டு, இன்னும் வேண்டும் என்று அடம் பிடிப்பதுதான் நாஜியிச சிந்தனையின் ஆணி வேர். தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள் சங்கர்.
உங்கள் விவாதங்களுக்கு மிகுந்த நன்றி. தனிப்பட்ட முறையில் உங்களை மிகவும் விரும்புகிறேன். நாம் இங்கே நடத்துவது கருத்துப் போராட்டம்தானேயொழிய, பிராமண எதிர்ப்பு போராட்டம் அல்ல என்பதை தெளிவுபடுத்திடுகிறேன்.

Anonymous said...

//அது சரி. எல்லாரையும் நிறுத்தி வச்சுதான் முன்னேறனும்னா, சீட் எதுக்கு? ஆளுக்கு ஒரு B.E Certificate, IIT-ல இருந்து direct-ஆ குடுங்கன்னு கேளுங்க.
எதுக்கு படிச்சி,பரிட்சை எழுதி, 4 வருஷம் காத்திருந்து degree வாங்கணும்?//

எவன் எக்கேடு கெட்டு போனா என்ன? நான் முன்னேறனும்.என்ன சில்லறைத்தனம் இது?


//நாமளதான் 5000 (அட 3000, 4000 இப்ப 5000-மா? அப்படி போட்டு தாக்கு) வருஷமா அடக்கி வச்சிட்டாங்களே//

இப்படி பேச வெட்கமாயில்லை?

சந்திப்பு said...


(அட போதுங்க. அவனவன் சீட் கிடைக்கறதுக்கு உயிரக்குடுத்து படிச்சிட்டு இருக்கான். இப்பயும் படிச்சு மார்க் எடுக்காம சீட் குடு, சீட் குடுன்னு.இப்ப எந்த ஜாதியா இருந்தாலும் படிச்சா சீட் கிடைக்கிறதுல என்ன தடை இருக்கு சொல்லுங்க? சும்மா 3000 வருஷம், 4000 வருஷம்ன்னு கத பேசிக்கிட்டு. முப்பாட்டன அடக்கி வச்சிருந்ததால, இப்ப படிப்பு வர மாட்டேங்குதுன்னு என்ன லாஜிக் இது? )


அப்பாவித் தமிழன் தயவு செய்து பெயரை மாற்றிக் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அடப்பாவித் தமிழா! (சாரி கோவிச்சுக்காதீங்க) என்று தமிழர்கள் அழைக்கத் தொடங்கி விடுவார்கள். தமிழன் என்ற பொதுப் போர்வை இன்னும் உருவாகவில்லை என்றுதான் நான் சொல்லுவேன். இங்கே இருப்பது தமிழ் மொழிபேசும், வர்னாசிரம அடிமை ஜாதித் தமிழர்கள்தான் இருக்கிறார்கள். உங்களை மாதிரி பல பெரியவர்கள் இப்படிச் சொல்லி, சொல்லித்தான் குப்பனும், சுப்பனும் மேல வரத விவரமா தடுத்திட்டீங்க! ஐயா குப்பனையும், சுப்பனையும் இப்படித்தான் பிரிட்டிஷ்காரன் விவரம் இல்லாதவன், புத்தியில்லாதவன், இவனுக்கு மண்டையில மசாலா இல்லை என்று சொல்லி, ஒரு மேல்ஜாதி கட்டுமான ஹைரியார்க்கியை உண்டாக்கினான். இப்படி பிரிட்டிஷ்காரன் அந்த வேலையைச் செய்யவில்லை. அந்த இடத்தில் அப்பாவித் தமிழனான நீங்கள் செய்கிறீர்கள் அவ்வளவுத்தான்.

சந்திப்பு said...

Thanks

Voice on Wings.

I will put another article in the same subject as earlier.

Anonymous said...

Gentlemen,

Kindly read the article in hindu today.

http://www.hindu.com/2006/04/12/stories/2006041204861000.htm

I just quote the first para

"THESE LAST few days have witnessed a fascinating battle for the control of the public discourse. A handful of newspapers and a couple of English language television channels have done their best to stoke a 1990-type hysteria over the proposed new reservation regime in Central educational institutions. Television crews have been despatched to find voices of "merit" that are aghast at the very idea that institutes of management, presumed bastion of merit and competition, are now sought to be pried open to admit children of the lesser gods. Captains of industry are on record as to how a few hundred seats in management schools will erode India's competitiveness in this age of globalisation."

Thats what I am saying. The press & brahmins are making a huge noise as if the whole world is going to crash!!!.

வஜ்ரா said...

//
கொஞ்சம நாள் அடங்கி இருங்கப்பா.நாங்களும் முன்னே வருகிறோம்.அது வரைக்கும் ஐ.ஐ.டிக்கு பதிலாக நீ சாதா இன்சீனியரிங் படிச்சா தேஞ்சா போயிடுவ?
//
ஓவராத் தெரியல்ல?

school ல first rank வாங்குற பையனை மட்டும் வீட்டுக்கு அனுப்பிட்டா நான்தாம்பா first rank ன்னு மகாநதி படத்துல கமலோட மகன் பேசுர டையலாக் மாதிரி இருக்கு.

first rank வாங்குற பையன் வேறு எங்காவது போய் படிச்சிடுவான், ஆனா நம்மாளு அவங்க school ல மட்டும் தான் first rank வெளிலெ போனா தத் திங் கிண தோம்!!

iit யோட நிலமை இப்படி ஆகணுமா!! பன்னாட்டு கம்பெனிக்கள் இந்தியர்கள் காலில் விழுந்து வேலை கொடுக்கிரார்கள் என்றால், அதற்கு IITன் தரம் முக்கிய காரணம்.

ஷங்கர்.

Anonymous said...

It's an interesting & sensitive topic. Everyone placed his/her view in an appropriate manner except couple of views which went way off the base.

Though the caste based quota was introduced few decades back with good intention, in current scenario I disagree with such caste based educational admission (infact for any admission)

Reasons:

1. This caste based quote did good only for the first generation candidates. After 60 yrs of introduction, 75% of the alloted quota is not achieving its whole purpose.

2. If the parent is already a graduate, then their kids shouldn't be given any caste based quota. ( I feel it's the duty of an educated parent to excel their kids against others)

3. If they are ready to revamp the whole caste based system and introduce something which would help a student from a remote village who wants to learn and doesn't have facitlity for it, then I agree with this quota system.

Neither I'm an OC candidate nor I have taken advantage of caste based quota.

- MR - Thanks folks.

Sivabalan said...

I am bit confused about this Reservation Topic.

But, I do agree the following. And to my knowledge it is 100% True.

1. இந்திய பத்திரிகைத்துறையில் 80 சதவீதம் உயர்ஜாதி ஆதிக்கமே நிலவுகிறது.

2. ஐ.டி. துறையில் ஏற்கெனவே கால் பதித்து, தங்களை நிலை நிறுத்திக் கொண்டுள்ள மேல்ஜாதியினர் மற்ற தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்டவர்களை தங்களுக்கு போட்டியாளர்களாக நுழைவதை பல்வேறு வழிகளில் தடுத்து விடுகின்றனர். அவர்களுடைய சொந்தங்களையே அதுபோன்ற வேலைகளுக்கு சிபாரிசு செய்து அழைத்துக் கொள்கின்றனர்.

3. I hope you guys would have heard about the stories in chennai IIT. It is completed ruled by one caste. Even the non-brahmin professors/lectures suffer at their hands. Hope things will change.

Anonymous said...

//இதற்கு சரியான தீர்வு, பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடுதான்// என்னடா இன்னும் இவாள்கள் இதைச் சொல்லவில்லையேன்னு பார்த்தேன். எப்டிலாம் விவாதத்தத் தெறமயாத் திசைதிருப்பலாம்னு இவாள்களப் பாத்துக் கத்துக்கலாம்

Anonymous said...

I think that this is something that should be done, at least for the next 50 years, so that people from communities that have barriers coming up will get an opportunity to grow and prosper. Even with such laws, we know just how hard it is for students from these backgrounds to be accepted within the university community. I believe I read an article just a few months back about such a case with a female student being harassed and murdered because she was from a backward community.

Is it necessary to fight over this topic? I can't buy the argument that the quality of education will reduce. So many students are hard working and become rank holders that are from backward community. Yet, they can't get into university. They go work for daily wages somewhere. Everyone has hardships, but I think these students have more to overcome. Don't say that your parents worked hard to get you through your schooling. There is a difference between some of your parents working hard and a student who goes to school and runs home to do some of his own earning. So it's wrong to look down on these students as not capable of studying well.

-kajan

சந்திப்பு said...

Why there should be a quota for OBCs only, why not for women.In the comment posted earlier have exposed how biased are the supporters of OBC quota when it comes to quota for women.
Neither Chanthippu nor you have touched this aspect.


ஸ்ரீ நிதி தங்கள் கருத்து நியாயமானது. இது குறித்து இன்றைக்கு வேறு ஒரு பதிவினைப் போடலாம் என்று யோசித்துக் கொண்டு வந்தேன். அதே கருத்தை தாங்களும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். நிச்சயம் பெண்களுக்கு இதில் ஒதுக்கீடு தேவை. மத்திய அரசு - இந்த ஓ.பி.சி. ஒதுக்கீடோடு சேர்த்து இதையும் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தங்கள் கருத்துக்கு வாழ்த்துக்கள்!

சந்திப்பு said...

நன்றி சிவபாலன், அனானி.

சங்கர், அப்பாவி தமிழன் தங்களின் கருத்தையொற்றி இன்று மாலைக்குள் வேறு ஒரு விரிவான பதிவை போடுகிறேன். நன்றி.

Voice on Wings said...

ஸ்ரீநிதி, சந்திப்பு உங்களுக்கு அளித்த விடையுடன் முழுவதுமாக உடன்படுகிறேன். அதோடு, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு அளிப்பதற்காக வலுவான காரணங்கள் இருப்பதாகக் கருதுகிறேன்.

Anonymous said...

யாராலும் இந்த ஒதுக்கீட்டை தடுக்க முடியாது. அம்பிகள் சொத்தை காரணங்களை சொல்லி எடிட்டருக்கும், இண்டர்நெட்டிலும் எழுதிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.

Sivabalan said...

Merit, however, becomes an issue when it comes to providing access to those who have been denied education for centuries." - Polit Bureau member Sitaram Yechury

The Hindu further reports....

http://www.hinduonnet.com/thehindu/holnus/001200604131971.htm


CPI(M) favours quotas in educational institutions

New Delhi, April. 13 (PTI):

The CPI(M) today came out openly in support of the proposed reservation of seats in educational institutions saying the issue of merit stands ignored when admission to higher education can be bought.

Observing that a large number of private institutions had a system of capitation fee, party's Polit Bureau member Sitaram Yechury said "what else is this, but a reservation for the rich".

"The only merit involved in this scheme is that of having enough money to literally buy admission. In some cases (quite large in number), private institutions offer seats to NRIs through virtually an auction process. The highest bidder wins," he said in an editorial in the forthcoming issue of CPI(M) organ 'People's Democracy'.

"The complete absence of any consideration of merit in these cases is never questioned. Merit, however, becomes an issue when it comes to providing access to those who have been denied education for centuries."

Criticising the Election Commission for asking the Centre to explain how the announcement regarding reservation did not violate the code of conduct, he said "if the follow up action of a constitutional amendment is to be questioned as liable to influence voters, then do not the ongoing rath yatras of Advani and Rajnath Singh, which are rousing communal passions by stridently raising the Ram Mandir issue, also influence voters?"

"On this, however, the Election Commission chooses to remain silent," Yechury said.