January 20, 2006

எது ஏமாற்றம்! ஏமாற்ற முடியுமா!!

எங்கள் பகுதியில் 9வது ஆண்டு பொங்கல் விழா - விளையாட்டு போட்டி - கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம். இதற்காக நன்கொடை வாங்க கொடை வள்ளல்கள் சிலரிடம் சென்றோம். அதில் ஒருவர் நடந்த நிகழ்ச்சியை கூறினார். ரசிக்க முடிந்தது -
கருத்தாகவும் இருந்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இதை சிறு கதையாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.



இரண்டு நண்பர்கள் பெங்களூருக்கு சென்று சென்னை திரும்பினர். சென்ட்டிரல் இரயில்வே ஸ்டேஷனில் இறங்கி இளைப்பாற ஒரு டீ கடைக்கு சென்று டீ அருந்தினர். அதற்கான தொகையை நண்பர் ஒருவர் கொடுக்க, டீ கடைக்காரரோ ஏதோ கவனக்குறைவால் 5 ரூபாய் அதிகமாக கொடுத்து விட்டார். (நேர்மையான) நண்பர் அதிகமாக அவர்தானே கொடுத்தார். நாம் ஏன் திருப்பித் தர வேண்டும் என்று பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடையை கட்டினார்.
கொஞ்ச தூரம் சென்றவுடன் ஒரு தாய், தன் குழந்தையுடன் அந்த (நேர்மையான) நண்பரிடம் பிரச்சை கேட்டார். (எழுதுவதற்கு கேவலமாக இருக்கிறது) அவரும் இல்லம்மா... என்று எவ்வளவோ சலிப்பாக சொல்லிப் பார்த்தார்... ஆனால் பிச்சை கேட்கும் அந்த தாயும் விடுவதாக இல்லை.உடன் இருந்த நண்பர் கொடுப்பா என்று கூறிவிட, நண்பர் விழி பிதுங்கினார். அவரது பாக்கெட்டில் ரூபாய் நோட்டுக்கள் நிறைய இருந்தது. ஆனால் சில்லறை எதுவும் இல்லை. வேறு வழி என்ன? டீ கடைக்காரர் கொடுத்த ஐந்து ரூபாய் தானமாக சென்று விட்டது!

(நன்கொடை கொடுத்த நன்பர் இந்த உண்மை சம்பவத்தையும் கூறி, எங்களுக்கு நன்கொடையும் கொடுத்து அனுப்பினார். அவர் உதிர்த்த தத்துவ முத்து : நாம் இந்த உலகத்தில் யாரையும் ஏமாற்ற முடியாது! - அவருக்கு தெரியாது இந்த உலகத்தில் ஏமாற்றாமல் (மன்னிக்கவும் சுரண்டாமல்) வாழ முடியாது என்று! இது என் கருத்து!)

1 comment:

Muthu said...

பணம் கொஞ்சம் சேர்ந்து விட்டதென்றால் பல பழைய தத்துவங்களை நம் ஆட்கள் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள்...பணத்தை காக்கணுமே..இது பல பேருக்கு புரியாது.....