December 31, 2008

புத்தாண்டு வாழ்த்து! வீழ்த்தப்பட்டது எங்கள் வேர்கள் அல்ல



செருப்படி மூலம் ஏகாதிபத்தியத்திற்கு
பதிலுரைத்த 2008-க்கு சல்யூட்!

இந்திய வெடிகுண்டுகளுக்கு பின்னால்
பயங்கரவாதிகள் மட்டுமா
சன்னியாசிகளும் இருப்பர்
சங்பரிவாரமும் இருக்கும்
என்று கண்டுரைத்த
தியாகி கார்க்கரேவை
அடையாளம் காட்டிய 2008க்கு சல்யூட்!

அமெரிக்க சூதாட்ட பலுனை
இனியும் ஊத முடியாது என்று
வெடித்துக் காட்டி
முதலாளித்துவ நெருக்கடியை
உலகுக்கு உணர்த்திய 2008க்கு சல்யூட்!

அமெரிக்காவுடன் - காதல் புரிந்த
காங்கிரசும்
கள்ளக் காதல் புரியூம் பா.ஜ.க.வும்
அணு ஒப்பந்தத்தின் மூலம்
அரசியல் ஒப்பந்தத்தையும்
ஏற்படுத்திக் கொண்டதற்கு
பதிலுரைக்க வருகைத்தரும் 2009 வருக!

கியூபப் பாதையில்
அடியெடுத்து வைத்திருக்கும்
வெனிசுலா, பொலிவியா
பிரேசில், உருகுவே
வழியில்...
நேபாளத்திலும்
மன்னராட்சிக்கு முடிவு கட்டி
செங்கொடிகளின் கூட்டுச்
செயல்பாட்டால்
ஜனநாயகத்தை மீட்டெடுத்த
பாதையை நோக்கி
ஏகாதிபத்திய - முதலாளித்து
சீரழிந்த பாதையிலிருந்து விலகி
வழிகாட்டும் கியூப் பாதையை
நோக்கி சமூகத்தை இட்டுச் செல்ல
வருகைத் தரும் 2009 வருக!

முதலாளித்துவ சீரழிவால்
ஈபிள் கோபுரம்
அமைந்திருக்கும்
பிரான்சும்,
கலாச்சார மேம்பாட்டின்
இருப்பிடம் என்று வருணிக்கப்பட்ட
ரோமும் பற்றி எரிகிறது...
அங்கு வைக்கப்பட்டுள்ள தீ
மூலதனத்திற்கு எதிரான
முதல் பொறி...

மார்க்சின் மூலதனத்தில்
விடைகான வழிகாட்டி 2008.
அதன் வழியிலேயே விடையளிக்க
வருகை தரும் 2009-யை
வரவேற்வோம்!

2008 தமிழகத்தில்
பல்லிளித்த தீண்டாமை
உத்தப்புரம் தீண்டாமைச் சுவரும்....
சட்டக் கல்லூரியில்
அம்பேத்காரை தீண்டிய
தீண்டாமையும் தமிழகத்தில்
அணையாத கணலாய்
எரிந்து கொண்டிருக்கும்
தீண்டாமையை
சுனாமி பேரலைகளைக் கொண்டு
2009- இல் பொசுக்குவோம்!

மனிதனை குரங்கிலிருந்து மீட்ட
டார்வினின் 200வது பிறந்த தினமும்
தென்னகத்தின் முதல் கம்யூனிஸ்ட்
சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரின்
150வது பிறந்த தினத்துடன்
2009 துவங்க உள்ளது.
இரு பெரும் சிந்தனையாளர்களின்
சிந்தனையை
சிறப்பாய் விதைத்திடுவோம்
2009-இல் முன்னேற்றத்தை
ஏற்படுத்திடுவோம்!

வருக! 2009... 2009... 2009...

தமிழ் வலைப்பதிவுகள்
சிறகடித்து பறந்திட
வண்ணத்துப் பூச்சிக்கள் போல்
கண்ணுக்கு இன்மையான
வண்ணத்தை மட்டுமல்ல
கருத்துக்களையும் வழங்கிட
சந்திப்பின்
வாழ்த்துக்களுடன் புத்தாண்டை
வரவேற்கிறேன்


அன்புடன்
கே. செல்வப்பெருமாள்

December 30, 2008

பரிணாமக் கோட்பாட்டை எதிர்ப்பவர்கள்

மனித சமுதாயத்தின் மிகப்பெரிய மேதைகளுள் ஒருவரான சார்லஸ் டார்வின் - இன் இருநூறாவது பிறந்த நாளை, பிப்ரவரி 12-லும், அவருடைய மாபெரும் படைப்பான உயிரினங்களின் தோற்றம்பிரசுரிக்கப்பட்டதின் 150வது ஆண்டை நவம்பர் 2009லும் உலகம் கொண்டாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பரிணாமக் கோட்பாட்டிற்கு கடவுள் நம்பிக்கை அடிப்படையிலான எதிர்ப்பு மேற்கத்திய உலகில் இன்றளவும் வலுவாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் விநோதம் என்னவென்றால் உலகின் மிகச் சிறந்தமருத்துவ உயிரியல் ஆராய்ச்சி நிறுவனங்களைக் கொண்டதாகவும், மிகஅதிக எண்ணிக்கையில் நோபல் விருது பெற்றவர்களின் குடியிருப்பாகவும், திறனூக்கம் கொண்ட உயிரியல் தொழில்நுட்ப தொழிற்சாலைகளைத் தன்னகத்தே கொண்டதுமான அமெரிக்க நாட்டில்தான் இதுபோன்ற எதிர்ப்புணர்வு வலுவாக உள்ளது! மரபணு கட்டமைப்பை விளக்கியும், மரபணு ரகசியங்களை உடைத்தும், மரபணுக்களை வரிசைப்படுத்தியும், தொகுத்தும் வெளியிடப்பட்டுள்ள நவீனகால ஆய்வு விளக்கங்கள், பூமியின் அனைத்து உயிர் இனங்களும் ஒரு பொதுவான துவக்கத்திலிருந்தே தோன்றின என்கிற டார்வினின் கண்ணோட்டத்தை உறுதிப்படுத்துகின்றன. உயிர் வாழ்வனவற்றின் பல்வேறு வடிவங்கள், பயனுள்ள மரபணு மாற்றங்களை பரப்புதலும், கேடு பயப்பனவற்றை களை நீக்குதலும் என்கிற இயற்கைத் தேர்வு எனும் செயல்வழியில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன.

 

ஆயினும், பரிணாமக் கோட்பாட்டிற்கு ஆதரவாக மிக வலுவான விஞ்ஞான ஆதாரங்கள் இருந்தாலும் பைபிள் கூறும் படைப்புத் தத்துவத்தை ஆதரிப்பவர்களின் எதிர்ப்பு குறையவில்லை. கல்விக்கூடங்கள் நெடுங்காலமாகவே இவர்களின் போர்க்களமாக இருந்து வருகின்றன. 1925ல் டென்னஸி மாநிலத்தில் நடைபெற்ற அவப்பெயரடைந்த ஸ்கோப்ஸ் விசாரணைஅம்மாநில அரசு தடை செய்த பரிணாம கோட்பாட்டை போதித்த ஆசிரியர் ஒருவருக்கு எதிரான குற்ற விசாரணையாகவே அமைந்தது. இதன் பின்னர் அமெரிக்க உச்சநீதிமன்றம், படைப்பு தத்துவத்தை பள்ளிகளில் கற்பிப்பது அரசியல் சட்டவிதிகளுக்குப் புறம்பானது எனக்கூறி தடைவிதித்தது.

 

அண்மை ஆண்டுகளாக, அறிவார்ந்த திட்டம் (Intelligent Design) எனும் கூற்றுக்கு ஆதரவான இயக்கங்கள் மூலமாக பரிணாமக் கோட்பாட்டைப் பற்றி சந்தேகங்களைக் கிளப்பி, படைப்புத் தத்துவத்தை மீண்டும் பள்ளிகளில் போதிக்க வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய போலி விஞ்ஞான மதம் சார்ந்த நம்பிக்கைகளின் ஆதரவாளர்கள், உயிர்களின் வடிவமைப்புகள் ஒரு அறிவார்ந்த திட்டம் மட்டுமே இவற்றை படைத்திருக்க முடியும் என்கிற அளவிற்கு மிகச் சிக்கலானவை என்று வாதிடுகின்றனர். மூன்று ஆண்டுகட்கு முன்னர் பென்ஸில்வேனியா மாகாண நீதிபதி அறிவார்ந்த திட்டம் என்பது படைப்புத் தத்துவத்தின் வாரிசுதான் எனக்கூறி இதனை கற்பிக்கும் முயற்சிக்கு எதிராக தீர்ப்பளித்தார். துரதிருஷ்டவசமாக, பரிணாமக் கோட்பாட்டின் மீது அவநம்பிக்கை என்பது அமெரிக்காவோடு மட்டும் நின்றுவிடவில்லை. அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி பிரிட்டனின் அரசு பள்ளி விஞ்ஞான ஆசிரியர்களில் கால்பகுதியினர் பரிணாமக் கோட்பாடுடன், படைப்புக் கோட்பாடும் கற்றுத் தரப்பட வேண்டும் என்று எண்ணுகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர், உயிரியியலாளரும், பாதிரியாருமான மைக்கேல் ரெய்ஸ் என்பவரின் பரிணாமக் கோட்பாட்டைப் பற்றிய கருத்து ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டதால் அரசவைக் கல்விக் குழு இயக்குநர் பொறுப்பிலிருந்து பதவி துறப்பு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார். நேச்சர்(Nature) எனும் பத்திரிகை தனது தலையங்கத்தில் பேராசிரியர் ரெய்ஸ், வகுப்பறையில் படைப்பு வாதம் பற்றிய பிரச்சனை எழுப்பப்பட்டால் படைப்புக்கோட்பாடு ஏன் விஞ்ஞானப்பூர்வமற்றது எனவும், பரிணாமக் கோட்பாடுதான் விஞ்ஞான அடிப்படையிலானது என்றும் ஆசிரியர்கள் விளக்க வேண்டும் என்று தான் கூறியிருந்தார் என எழுதியுள்ளது. அவர் கூறியது சரியானது. அதுதான் விஞ்ஞானப்பூர்வமுறை- விடைகளைக் காணும் முறை, வெறும் காட்சிகளின், விதிகளின் கோட்பாடுகளின் கலவையாக மட்டும் விஞ்ஞானத்தைப் போதிக்காமல் விஞ்ஞான முறைப்படி ஆதாரங்களைச் சேகரித்து விடைகளைக் காணும் இந்த முறையைத் தான் உலகெங்கும் உள்ள வகுப்பறைகளில் அழுத்தமாக சொல்ல வேண்டும்.

(இந்து தலையங்கம்- 24.12.08)
தமிழில் : நீலகண்ட சுப்பிரமணியன், சேலம்.

 


வினவு - வினை செய்! மாமா வேலை செய்வோருக்கு எதிராய்!

ம.க.இ.க. - மக்கள் கலை இலக்கிய கழகம் கடந்த 30 ஆண்டுகளாக ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு தோல்வி கண்ட நிலையில், தற்போது கணிணித் திரையின் மூலம் மாய வலையை வீசி வருகிறது. அதாவது தற்போது இணையத்தின் மூலமே புரட்சியை நடத்தி விடலாம் என்ற கொள்கை முடிவுக்கு வந்து விட்டது. மேலும் ம.க.இ.க.-வின் உண்மை முகம் என்ன என்று நமது வாசகர்களுக்கு தெரியாதல்லவா? அதனால் அது தன் அமெரிக்க மறைமுக எசமான் இட்ட கட்டளைகளை தற்போது நன்கு நிறைவேற்றி வருகிறது. இது குறித்த விமர்சனங்களுக்கு செல்வதற்கு முன் அதன் உண்மை முகத்தை கிழித்து அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
அதாவது ம.க.இ.க. என்கிற அமைப்பு ஏதோ பெரிய புரட்சிகர அமைப்பு போல பண்ணையார் அரசியல் செய்து வருகிறது. அதாவது பண்ணையார் வைத்ததே சட்டம். அதனை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. என்கிற நிலப்பிரபுத்துவ - ஏகாதிபத்திய மனோபாவம் வெளிப்படுத்துவதை இணையவாசிகள் நன்கு உணர்ந்தே உள்ளனர்.
சரி, ஒரு புரட்சிகர அமைப்பிற்கு அடிப்படை ஒரு புரட்சிகர கட்சி! தன்னை ஒரு புரட்சிகர அமைப்பு என்று கூறிக் கொள்ளும் ம.க.இ.க. என்கிற ஒரு கலை அமைப்பு பிரதானப்படுத்தக்கூடிய அரசியல் அமைப்பு எது என்று யாராவது கேட்டால், இது உளவுத்துறை கேட்கும் கேள்வி! என்று ஒரே வரியில் முடித்துக் கொள்வார்கள்.
உண்மையில் இந்த அமைப்பின் பின் இயங்கும் அரசியல் சக்தி - ம.க.இ.க. மறைமுகத் தலைமை CPI-ML [SOC] என்பதே. இன்றைய நவீன ஜனநயாக உலகில் - தங்களை நக்சலைட்டுகள் என்று பகிரங்கமாக கூறிக் கொள்ளும் ம.க.இ.க. அதன் கட்சிப் பெயரை மட்டும் வெளியில் சொல்லவே சொல்லாதாம். உண்மை இங்குதான் இருக்கிறது. தன்னுடைய கட்சி இது என்று கூறிவிட்டால் அப்புறம் வரக்கூடிய இடிகளை யார் தாங்குவது என்கிற அவநம்பிக்கையான அரசியல்தான் காரணம்.
சரி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்கள் மார்க்சும், எங்கெல்சும் 1847 இல் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையில் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
பகிரங்கமாய் அனைத்து உலகும் அறியும் வண்ணம் கம்யூனிஸ்டுகள் தமது கருத்துக்களையும் தமது நோக்கங்களையும் தமது போக்குகளையும் வெளியிட்டு, நேரடியாய் கட்சியின் அறிக்கை மூலம் கம்யூனிசப் பூதமெனும் இந்தக் குழந்தைப் பிள்ளைக் கதையை எதிர்க்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
அதாவது கம்யூனிஸ்ட்டுகள் தங்களது நோக்கம் இதுதான் என்று உலகறிய பறைசாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், இந்த ஏகாதிபத்திய தரகர்கள் இந்தியாவில் உள்ள போலீஸ் மற்றும் உளவுத்துறை கண்களில் எல்லாம் மண்ணைத் தூவி விட்டு அரசியல் நடத்துகிறார்களாம்! இதைவிட கோமாளித்தனமானது எதாவது இருக்க முடியுமா?
சரி, ஒரு புரட்சிகர அரசியல் ஸ்தாபனத்தின் அடிப்படை அம்சைமே ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு.
அதாவது அந்த அமைப்பின் கிளைகள் முறையாக கூட வேண்டும். குறிப்பாக கட்சி மேலிருந்து கட்டப்படுவது. அந்த அமைப்புக்கான மாநாடுகள் திட்டமிட்ட கால அளவில் நடத்தப்பட வேண்டும். அதில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கூடி விவாதித்து ஆவணங்களை இறுதிப்படுத்த வேண்டும். இந்த அடிப்படைகளை மேற்கண்ட அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ்.ஓ.சி. குழு எப்படி மேற்கொள்கிறது! பரலோகத்திலா? அல்லது இணையத்தின் மூலமே ஏதாவது சாட்டிங் கான்பிரன்ஸ் மூலம் நடத்துகிறீர்களா? என்ற கேள்வி எழுவது இயல்பானதே!
நேபாளத்தில் தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள நேபாள மாவோயிஸ்ட்டுகள் கூட தங்களது கொள்கை என்ன என்பதை வெளிப்படையாக அறிவித்து விட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தினார்கள். அத்துடன் தற்போது ஜனநாயக முறையிலான தேர்தலிலும் பங்கெடுத்துக் கொண்டு ஆட்சியாளர்களாகவும் மாறியிருக்கிறார்கள்?
அது மட்டுமா? இந்தியாவில் உள்ள பல நக்சல் அமைப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகள் தங்களது கொள்கை என்ன என்பதை வெளிப்படையாக அறிவித்து விட்டு ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நடத்துகிறார்கள். (இதில் எனக்கு வித்தியாசம் உண்டு அது பற்றி இங்கே விவாதிக்கவில்லை.)
ஆனால், தங்களை பெரிய புரட்சிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதும், தாங்களே எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் என்று உளறுவதும், நக்சலைட்டுகள் என்று மார்தட்டிக் கொள்ளும் ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. கும்பல் தங்கள் கட்சியின் பெயரைக் கூட சொல்வதற்கு ஏன் தொடை நடுங்குகிறது என்றுத் தெரியவில்லை? கேட்டால் உங்களுக்கு போலீஸ் அடக்குமுறை பற்றி தெரியாது என்று வேறு அங்கலாய்ப்பார்கள்! சமூக மாற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவன் தனது உயிரை என்றைக்கும் ஒரு பொருட்டமாக மதித்தது கிடையாது! ஆனால் நீங்கள் பேசுவது நக்சலிசம் - சொகுசான நக்சலிசம். திண்ணை வேதாந்தம்.
மேலும், தற்போது ம.க.இ.க.வில் செயல்படும் யாருக்கும் சொந்தப் பெயர் கிடையாது! போலிகள்தான். அனானிகள்தான். அது மட்டுமா இணையத்தில் கூட அனானியாக பெயர் வைத்துக் கொண்டு அமெரிக்காவுக்கு புரட்சிகர மாமா வேலை பார்ப்பதுதான் இவர்கள் வேலை.
அது மட்டுமல்ல; ஒரே ஒரு ம.க.இ.க. ஆட்களாவது தாங்கள் குடி இருக்கும் இடத்தில் செயல்படுகிறார்களா? என்றால் இருக்கவே இருக்காது. அப்புறம் சாயம் வெளுத்து விடுமே! அதனால்தான் சி.பி.எம். செயல்படற இடமா பார்த்து பிரச்சாரம் செய்வது - பிரச்சனை செய்வது என்பது இவர்களின் தொடர் கதையாகிப் போயுள்ளது. வீண் வம்புக்கு இழுப்பது இவர்கள்தான் எல்லா இடத்திலும். சி.பி.எம். கூட்டம் போட்டால் அங்கே இவர்களது புத்தகத்தை தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள். அதாவது சீர்குலைவு அரசியலின் உச்சகட்ட சீரழிவே ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. கும்பலின் சீரழிந்த அரசியல்.
இவர்களது வர்க்க எதிரி யார் என்று கேட்டால் இன்று வரைக்கும் தெரியாது? ஏனென்றால் இவர்களிடம் கட்சித் திட்டமே கிடையாதே! அதனால்தான் தற்போது இவர்கள் "இந்தியா மறுகாலனியாவதை எதிர்க்கிறார்களாம்". அது சரி உங்கள் அமைப்போ எஸ்.ஓ.சி. மாநில அமைப்பு கமிட்டி. அப்படியென்றால் உங்களது அகில இந்திய தலைமை எது? இதுவரை தெரியாது? அது மட்டுமா? இவர்களது அரசியல் அபத்தம் "தமிழில் பாடு இல்லையென்றால் தமிழ்நாட்டை விட்டு ஓடு" என்று அரசியல் முழக்கம் வைத்த ஓடுகாலிகள்தான் இந்த ம.க.இ.க.-வினர் என்பதை நாம் மறக்க கூடாது.
இந்திய புரட்சி பற்றி பேசும் இந்த புரட்கிர ஓநாய் கூட்டம் தமிழில் பேசாத மக்களை எந்த நாட்டிற்கு கடத்தக் கோருகிறது என்று கேட்டால் பல்ளிளிப்பார்கள். இதுதான் கேள்வி! உங்கள் இயக்கம் புரட்சிகர இயக்கமா? அல்லது பிழைப்புவாத இயக்கமா? உங்கள் புரட்சி தமிழகத்தில் மட்டுமா? அல்லது நாடு தழுவியதா? என்றெல்லாம் நாம் கேட்கக் கூடாது. இதுவெல்லாம் உளவுத்துறை கேட்கும் கேள்வி என்று பசசப்புவார்கள்.
அடுத்து, இவர்களது முதன்மையான எதிரி யார் தெரியுமா? சி.பி.எம்.தான். அதாவது பா.ஜ.க. மற்றும் காங்கிரசை எதிர்ப்பதெல்லாம் சும்மா பெயருக்கு புரட்சி என்று காட்டிக் கொள்ளத்தான். அதாவது இந்தியாவில் தனிப்பெரும் கம்யூனிஸ்ட் கட்சியாக சி.பி.எம். வளர்வதை இந்திய முதலாளிகள் மட்டுமல்ல ஏகாதிபத்திய சக்திகளும் விரும்பவில்லை. அதனால்தான் அவர்கள் புரட்சியைப் பேசிக் கொண்டே சி.பி.எம்.யை எதிர்க்க வேண்டும் என்ற மறைமுகத் திட்டத்தோடு செயலாற்றுகிறார்கள். இதுதான் ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. கும்பலின் உண்மையான அரசியல்.
அது மட்டுமா? ஊருக்குதான் உபதேசம் என்பது இவர்கள் பழிமொழி இவர்களது அமைப்பு நடத்தும் கீழைக் காற்று புத்தக நிலையத்திற்கு செல்லுங்கள். அங்கே சோம வள்ளியப்பனின் பங்கு மார்க்கெட் புத்தகம் கொடிகட்டி செம ஜோராக விற்பதை பார்க்கலாம். அதாவது இவர்களது தொண்டர்களுக்கு புரட்சியை சொல்லிக் கொடுக்கிறார்களாம். அதாவது பங்கு மார்க்கெட்டில் எப்படி சூதாடலாம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம்.
மேலும் இந்த அமைப்பில் சேர்ந்து செயலாற்றிய பல தொண்டர்கள் 3 ஆண்டுகளுக்கு கூட இந்த அமைப்பpல் நீடிப்பதில்லை என்பது உண்மையானது. அந்த அளவிற்கு இவர்களது அரசியல் சாக்கடை வீசும். தற்போது இவர்களது உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு என்று சொன்னால் அதைவிட இரண்டு மடங்கு தொண்டர்கள் இவர்கள் அரசியல் சாக்கடையைப் பார்த்து ஓடி விட்டார்கள். மேலும் தற்போது இவர்கள் வினவு - வினை செய் என்று இணையத்தில் தூண்டில் வீசுகிறார்கள். உன்னுடைய உண்மையான முகம் என்ன என்று வினவுங்கள் நன்பர்களே. இன்னே வினை செய்யுங்கள். இந்த ஏகாதிபத்திய தாசர்களுக்கு எதிராக.
இவர்களது நிஜ முகத்தை அறிந்து கொள்ள இதையும் படிக்கவும்.

அழுகி வரும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை!
பயங்கரவாதிகள் கொடுக்கும் பயங்கரவாத பட்டம்!
அடிமைக்கு மகாராஜா பட்டம் சூட்டும் ம.க.இ.க.!
தலித்துகளை குட்டிபூர்ஷ்வாவாக்கிய ம.க.இ.க.!
ம.க.இ.க. தத்துவக் குருடர்களும் புரட்சிகர அரசியலும்...

கூரையேறி கோழி பிடிக்காதவர்கள்!

கற்பனாவாதத்தை புரட்சியாக கொண்டதே ம.க.இ.க.!

தோலுரிக்கபட்ட ம.க.இ.க.

December 29, 2008

காவியம் படைத்த அரசியல் கவிஞன்!

மில்டன் அரசவைக் கவிஞர் அல்ல; அரசியல் கவிஞர்! ஆங்கிலக் கவிகளில் தன்னிகரில்லா இடத்தைப் பெற்றிருப்பவர் ஜான் மில்டன். தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்கு துணை புரிந்தவர் மில்டன். டிசம்பர் 9, 2008 மில்டனின் 400வது பிறந்த தினம். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது.

மில்டனின் இலக்கிய சுவை மட்டுமல்ல; அவரது எழுத்து நடையும் உலக மக்களிடம் பிரசித்தி பெற்றது. மில்டனைப் போல் எழுதுகிறாயே!என்று பிற எழுத்தாளர்களை பாராட்டும் அளவிற்கு அவரது எழுத்தாற்றல் புலமை வாய்ந்தது.

மதவாதிகளும், பழமைவாதிகளும், கொடுங்கோல் ஆட்சியாளர்களும் மனித சமூகம் முன்னேறும் போதெல்லாம், அந்த வரலாற்று சக்கரத்தை பின்னுக்கு இழுத்தவர்கள். மில்டனின் எழுத்து மக்களை கவ்வியபோது, அவரது எழுத்துக்களை தீநாக்குகளுக்கு உணவாக்கி மகிழ்ந்தனர் ஆட்சியாளர்களும், பிற்போக்கு கிருத்துவ மதவாதிகளும்.

இவர்கள் மட்டுமா? கல்வியாளர்களும் கூடத்தான்; அவர் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் கூட முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் பட்டியலில் இருந்த ஜான் மில்டனின்பெயரை 300 ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பு மையிட்டு மறைத்தது. மில்டன் மட்டுமல்ல; ‘குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவனே மனிதன்என்று உண்மையை கண்டுரைத்த சார்லஸ் டார்வினையும் மறைத்தார்கள் என்பதையும் இந்நேரத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சீப்சைட், பிரட் ஸ்ட்ரீட்டில் டிசம்பர் 9, 1608 இல் வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஜான் மில்டன். அவரது தந்தை அன்றைக்கு தோன்றிய தூய்மைவாத (Puritanism) இயக்க ஆதரவாளராக இருந்ததோடு, கலை - இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்; இது மில்டனின் இளம் வயதில் தாக்கத்தை உண்டாக்கியது என்பதை சொல்லத் தேவையில்லை. செயின்ட் பால் பள்ளியில் படிப்பைத் துவங்கி, கிருத்துவ கல்லூரியில் பயின்று, 1632 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார் மில்டன். அத்துடன் லத்தீன், எபிரேயம், இத்தாலிய மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார் மில்டன்.

உலக மகாகவி என்று போற்றப்படும் சேக்ஸ்பியரின் மீது மில்டன் அளவற்ற காதல் கொண்டிருந்தாலும், அவரது எண்ணமெல்லாம் பாதிரியாராக மாற வேண்டும் என்றே இருந்தது. அந்த அளவிற்கு கிறித்துவத்தையும் - பைபிளையும் நன்கு பயின்றிருந்தார். இந்த பயிற்சிதான் பின்னாளில் அவரது உலப் புகழ் பெற்ற படைப்புகளான இழந்த சொர்க்கத்தையும்’, ‘மீண்ட சொர்க்கத்தையும்எழுதுவதற்கு கருவானது.

கல்வி பயணத்தை மில்டன் முடித்துக் கொண்டாலும், உடனடியாக வேலை எதற்கும் செல்லவில்லை. மாறாக, வீட்டிலிருந்த படியே பல்வேறு அரும்பெரும் நூல்களை கற்றுத் தேர்ந்தார். இந்தக் காலத்திலேயே அவர் ஒரு சில புகழ் பெற்ற கவிதைகளை எழுதியிருந்தார். அதில் குறிக்கத்தக்கது லூசிடாஸ் (Lycidas), கோமாஸ் (Comus)..

அறிவுத் தாகமெடுத்த மில்டன் 1633-ஆம் ஆண்டு வெளியுலக பயணத்தை துவக்கினார். பிரான்ஸ், இத்தாலி உட்பட பல்வேறு நகரங்களுக்கு இக்காலத்தில் பயணம் செய்தார். அவர் இத்தாலிக்கு சென்றிருந்த போது, டெலஸ்கோப் வழியாக உண்மையை கண்டறிந்து, ‘உலகம் உருண்டையானது - சூரியனைச் சுற்றிதான் இந்த புவிக் கோளம் இயங்குகிறதுஎன்ற பேரூண்மையை சொன்ன உலகமகா அறிவியல் விஞ்ஞானி கலிலியோவை கண்டு அவருடன் உரையாடினார். இந்த சந்திப்பை தனது வாழ்நாளில் முக்கியமான ஒன்றாக கருதினார் மில்டன். இந்த சந்திப்பை தனது இழந்த சொர்க்கம்என்ற காவியத்திலும் ஓரிடத்தில் கீழ்க்கண்டவாறு வர்ணித்திருப்பார்.

The broad circumference

Hung on his shoulders like the moon, whose orb

Trhough optic glass the Tuscan artist views

At evening, from the top of Fesole,... (Book 1, 286-290

ஸ்கன் கலைஞனால் தொலை நோக்கி வழியே முன்னிரவில் துழாவப்பெறும் சந்திரன் போல், சாத்தான் கேடயத்தின் அகன்றவட்டம் அவன் தோளில் தொங்கியது.” - (கம்பனும் மில்ட்டனும், ஸ். ராமகிருஷ்ணன், பக்.54)

கலிலியோ கண்ட உண்மை கடவுளுக்கு எதிரானது என்றுக் கூறி அவரை வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் அடைத்தனர் ஆட்சியாளர்கள். ஆனால், அவர் கண்ட உண்மையை தனது படைப்பிலும் கொண்டு வந்ததன் மூலம் மில்டன் மக்களை மாயையிலிருந்து விடுவிப்பதில் எந்த அளவிற்கு பங்காற்றினார் என்பதை உணர முடியும்.

இதே காலகட்டத்தில் இங்கிலாந்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் அரங்கேறுகின்றன. குறிப்பாக ரோமன் கத்தோலிக்க மதத்தை முன்னிறுத்தி, கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த முதலாம் சார்லஸ் மன்னராட்சியில் சர்வாதிகாரமும், அடக்குமுறையும் தலைவிரித்து ஆடின. இப்பின்னணியில் 1639 இல் இலண்டன் திரும்பும் மில்டன் ஒரு பள்ளிக்கூடத்தை துவக்குகிறார். குறிப்பாக அக்காலக் கல்வி மதத்தை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தன. இது குறித்து தனது அதிருப்தி தெரிவித்த மில்டன் 1944 இல் கல்வி (Of Education) குறித்து சிறந்த கட்டுரையொன்றை வெளியிடுகிறார். கல்வியின் பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கட்டுரையில் விளக்கப்படுகிறது.

சார்லஸ் மன்னராட்சியின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக நாட்டு மக்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாற வேண்டும் என்று சட்டம் இயற்றப்படுகிறது. இதை எதிர்த்து தூய்மைவாதிகளும் - புரோட்டஸ்டான்ட் கிருத்துவர்களும் தங்களது எதிர்ப்புணர்வை காட்டுகின்றனர். மதம் தங்களது தனிப்பட்ட விருப்புரிமைக்கு உட்பட்டது அதனை ஆட்சியாளர்கள் தீர்மானிக்க முடியாது என்று பல இடங்களில் கலகம் எழுந்தது. ஆனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பின்னணியுடன், ஆட்சி அதிகார எந்திரத்தை கையில் வைத்திருந்த கொடுங்கோலன் சார்லஸ் மன்னன் புரோட்டஸ்டான்ட் மக்களை வேட்டையாடினான். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடுமைகளை கண்ட மில்டன் மக்களுக்கான அரசியல் களத்தில் இறங்கி, தொடர்ச்சியாக அரசுக்கு எதிராக பல அரசியல் பிரசுரங்களை எழுதி குவித்தான். இது ஆட்சியாளர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஊட்டியது. அந்த நேரத்தில்தான் சார்லஸ் மன்னன் பத்திரிகை உரிமைக்கு வேட்டு வைக்கும் புதிய சட்டத்தை கொண்டு வந்தான். பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் அனைத்தும் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டன. ஆட்சியாளர்களின் அனுமதியில்லாமல் எந்த துண்டுப் பிரசுரமும் வெளிவராது என்ற நிலையே நிலவியது.

மன்னராட்சியின் இந்த பத்திரிகை தடைச் சட்டத்தை எதிர்த்து ஏரோபிஜிடிகா(Areopagitica) என்ற தலைப்பில் பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தி ஒரு பிரசுரத்தை வெளியிட்டார் மில்டன். ஒரு நல்ல புத்தகத்தை தடை செய்வது ஒரு மனிதனை கொல்லுவதற்கு ஒப்பாகும்என்று அதில் வலியுறுத்தியிருந்தார். நவீன காலத்தில் பத்திரிகை ஒடுக்குமுறைச் சட்டத்திற்கு எதிராக கொடுக்கப்பட்ட முதல் குரல் மில்டனின் குரல் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் ஆலிவர் கிராம்வெல் தலைமையில் படைகள் திரட்டப்பட்டு மன்னராட்சிக்கு எதிராக ஒரு உள்நாட்டு யுத்தம் தொடுக்கப்பட்டது. இதற்கு மில்டனும் தனது எழுத்தாற்றல் மூலமாக துணை நின்றார். 1644இல் சார்லஸ் மன்னனின் ஆட்சி முடிவுக்கு வந்து கொல்லப்பட்டான். பின்னர் ஆலிவர் கிராம்வெல் தலைமையில் முதல் ஜனநாயக அரசு இங்கிலாந்தில் அரியணை ஏறியது. இவரது அமைச்சரவையில் லத்தீன் மொழிக்கான செயலாளராக மில்டன் நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் மில்டன், ‘கொடுங்கோல் மன்னர்களும் அவரது நீதிபதிகளும் கொல்லப்பட வேண்டியவர்களேஎன்ற தலைப்பில் எழுதிய அரசியல் பிரசுரம் மிகவும் புகழ்பெற்றது.

ஆலிவர் கிராம்வெல்லின் ஆட்சி குறுகிய காலமே இருந்தது. அவரது மறைவுக்குப் பின், 1658-இல் 2-ஆம் சார்லஸ் மன்னன் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து பழமைவாதத்தின் பிடிக்குள் சென்றது. குடியரசு ஆட்சிக்கு முழுக்கு ஏற்பட்டது. இந்நிலையிலும் தொடர்ந்து அரசியல் விழிப்புணர்வு பிரசுரங்களை வெளியிட்ட மில்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டாம் சார்லஸ் மன்னன் ஆட்சியில் மில்டன் சிரச்சேதம் செய்யப்பட்டு கொல்லப்படுவார் என மக்கள் அஞ்சினர். மில்டன், ‘தான் இனிமேல் கவிதைகள் படைக்க விரும்புவதாககூறியதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். இவ்வாறு அவர் விடுதலையாகி இருக்காவிட்டால் மில்டன் என்ற மகா கவியை இந்த உலகம் இழந்திருக்கும்.

1667 ஆம் ஆண்டு வாக்கில் இரண்டு கண் பார்வையையும் இழந்து விட்டார் மில்டன். இதனால் மிகவும் மனம் வருத்தமுற்ற மில்டன் தனது உலகம் இருண்டு விட்டதை உணர்த்தும் வகையில் ஆன் ஹிஸ் பிலைன்ட் லெஸ்(On His Blindness) என்ற கவிதை மூலம் வருந்துகிறார். கண்ணிருக்கும் போது செய்ய வேண்டிய பல கடமைகள் செய்ய முடியாமல் போனதே என்பதற்காக!

இருப்பினும், இதில் மனம் தளராத மில்டன், தனது உதவியாளர் மூலம் தான் சொல்லச் சொல்ல பல்வேறு கவிதைகளை படைக்கிறார். இந்தக் காலத்தில்தான் இழந்த சொர்க்கம் (Paradise Lost) என்ற புகழ்மிக்க காவியத்தை 1667-இல் படைத்தார் மில்டன். 12 காண்டங்கள் என்று சொல்லத்தக்க வகையில், 12 புத்தகங்களாக 10,565 வரிகளைக் கொண்ட ஆங்கில மொழி நடையில் - கவிதை உலகில் ஒரு புது நடையை வழங்கி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தார் மில்டன்.

குறிப்பாக இழந்த சொர்க்கம் காவியம் - பைபிள் கருவை பின்னணியாக கொண்டு எழுதப்பட்டிருந்தாலும், அதில் அவரது புனைவு என்பது கடவுளை வென்ற சாத்தான்என்ற பொருளுடக்கத்தை கொண்டு எழுதப்பட்டது. குறிப்பாக சாத்தானை ஒரு ஹீரோவாக மையப்படுத்தி புகழ்ந்துரைத்த முதல் இலக்கியம்தான் மில்டனின் இழந்த சொர்க்கம். இதற்காகவே இந்த புத்தகத்தை அன்றைக்கு மக்கள் தொடுவதற்கே அஞ்சினர். இதுவும் சாத்தானின் வடிவமே என்று அவதூறு கிளப்பினர் பழமைவாதிகள்.

விண்ணுலகில் சாத்தானுக்கும் - கடவுளுக்கும் சண்டை மூளுகிறது. கடவுளின் சேவர்களில் ஒரு பகுதி தேவர்கள் கூட சாத்தான் பக்கம் சாய்ந்து கடவுளுக்கு எதிராக போரிடுகின்றனர். இந்நிலையில் தோல்வியுள்ள சாத்தான் கூட்டத்தினர் மீளாக உறக்கத்தில் இருக்கையில், புதிய உலகை படைக்கிறார் கடவுள். அதில் ஈடன் தோட்டத்தில் ஆதாமையும் - ஏவாளையும் படைக்கிறார். இந்த தோட்டத்தில் உள்ள அறிவுக் கனியை உண்ணக்கூடாது என்று கடவுள் அவர்களுக்கு கட்டளையிடுகிறார். இதை அறிந்து கொண்ட சாத்தான் விண்ணுலகிலிருந்து கடவுளால் படைக்கப்பட்ட புதிய உலகிற்கு வந்து ஈடன் தோட்டத்தில் உள்ள ஏவாளை மயக்கி அந்த அறிவுக் கனியை உண்பதற்கு தூண்டுகிறார். ஒரு கட்டத்தில் சாத்தான் ஒரு பாம்பின் உடலுக்குள் புகுந்து கொண்டு, ஏவாளிடம் சென்று மனிதனைப் போல் மிக அழகாக பேசுகிறது. பாம்புக்கு எப்படி பேச்சு வந்தது என்று ஆச்சரியப்பட்டு கேள்வி எழுப்பிய ஏவாளிடம் தான் அந்த அறிவுக் கனியை உண்டதாக கூறியதோடு, ஆதாம் அதை உண்பதற்கு தூண்டுகிறது. அது பாவம் என்று ஏவாள் மறுக்க, இல்லை; ‘பாம்பான நான் இந்தக் கனியை உண்டதால் மனிதனிப் பேச்சு திறமை கிடைக்கப்பெற்றேன். அதையே நீங்கள் சாப்பிட்டால் தேர்வர்களின் நிலைக்கு உயரலாம்என்று நயமாக பேசி தன்னுடைய வாதத் திறமையால் ஏவாளை அந்த அறிவுக் கனியை (ஆப்பிள்) சாப்பிட வைக்கிறார். அவ்வளவுதான்; இந்த கனியை சாப்பிட்ட பின் தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை ஏவாள், ஆதமிடம் சொல்ல அவனும் ஏன் இதைச் சாப்பிட்டாய் என்று கேள்வி எழுப்பினாலும், மனைவியின் அன்புக்கு கட்டுப்பட்ட ஆதாமும் அந்த கனியை சாப்பிடுகிறான். இந்த செயலின் மூலம் கடவுளின் திட்டத்தை முறியடிக்கிறான் சாத்தான். கனியை சாப்பிட்டதால் நிரந்தரமாக மனித குலம் பாவத்திற்கு உள்ளாகிறது. இதனால் அவர்கள் சொர்க்கத்தை நிரந்தரமாக இழக்கிறார்கள்; பாவத்திற்கு ஆளாகிறார்கள். பின்னர் ஆதாமும் - ஏவாளும் கடவுளிடம் இறைஞ்சுவதால் கடவுளின் குமாரன் மனித குலத்தில் பிறந்து அந்த பாவத்திலிருந்து விடுதலை பெறுவதாக கதை முடிகிறது. இதுதான் இழந்த சொர்க்கத்தின் மிகச் சுருக்கமான கதையம்சம்.

இந்த காவியத்தில் பல இடங்களில் சாத்தான் தனது அணிக்கு நம்பிக்கை ஊட்டுவதாக கூறப்படும் கவியம்சங்கள் மிக அற்புதமானவை.

What though the field be lots? All is not lost.

(களத்தை இழந்தோமல்லது; அனைத்தையும் இழந்தோமன்று) என்று கூறி நம்பிக்கை யூட்டுவதையும்,

Better to reign in Hell then serve in Heaven

(பொன்னுலகத்தில் தொண்டு புரிவதைக் காட்டிலும், நரகத்தில் ஆட்சி புரிவதே மேல்) என்று நயமாக எடுத்துரைத்து தனது அணிக்கு பலம் சேர்க்கிறார் மில்டன்.

400 வருடத்திற்கு முன் மதவாதிகளின் அரியாசனங்கள் கோலோச்சிய நேரத்தில், ‘சாத்தான் கடவுளை வென்றதாககாவியம் இயற்ற வேண்டும் என்றால் எவ்வளவு துணிச்சல் இருந்திருக்க வேண்டும் மில்டனுக்கு. அது மட்டுமல்ல; இந்த கதை குறித்து விமர்சகர்கள் கூறும்போது, ‘இதன் மூலம் சாத்தான் கடவுளை எதிர்த்து போராரிடுவது போல் மக்கள் மன்னர்களை எதிர்த்து போரிட வேண்டும்என்று தூண்டுவதாக வர்ணிப்பர்.

மில்டனின் இழந்த சொர்க்கம்ஆங்கில கவிதை உலகில் முடி சூட முடியாத உயர்த்தில் இருக்கிறது என்றால் மிகையாகாது. மேலும் மில்டன் பார்வைகளை இழந்திருந்தாலும், தனது அறிவுக் கூர்மையால் தொடர்ந்து பல்வேறு படைப்புகளை கொண்டு வந்தார். இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு காவியம் மீண்ட சொர்க்கம் (Paradise Regained).

இது தவிர ஆங்கிலத்தில் சொனாட்டோ என்று சொல்லக் கூடிய 14 வரிகளைக் கொண்ட கவிதைகள் பலவற்றை எழுதி அதில் தனக்கென தனியிடைத்தை பிடித்துக் கொண்டவர் மில்டன்.

தனது இறுதி நாட்களில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மில்டன் என்ற மகத்தான கவி நவம்பர் 8, 1674 இல் மரனமடைந்தார்.

400 ஆண்டுகள் கடந்த பின்பும் மில்டனின் படைப்புகள் மனித குலத்திற்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஊட்டுவதாக உள்ளது. குறிப்பாக கலை கலைக்காகவே என்று இயங்குபவர்கள் மத்தியல் கலை மனிதனுக்காக என்றும் அது மாற்றத்திற்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கோடு படைப்புகளை வழங்கியவர் மில்டன் என்பதில் மனித குலம் பெருமைப்படத்தக்கது. இதில் இறுதியாக குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் எஸ். ராமகிருஷ்ணனின் கம்பனும் - மில்டனும், தொ.மு.சி.யின் வள்ளுவனும் - மில்டனும் போன்ற படைப்புகள் தவிர, தமிழில் மில்டன் குறித்து போதுமான அளவிற்கு அவரது படைப்புகள் தமிழாக்கம் செய்யப்படவில்லை என்பது தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு குறையாகவே உள்ளது. அவரது 400வது ஆண்டில் இதில் ஒரு சில படைப்புகள் வெளிவந்தால் அது அவருக்கு செய்யும் சிறப்பாகும்.

கே. செல்வப்பெருமாள்

December 15, 2008

செருப்படி வாங்கிய ஜார்ஜ் புஷ்!

இன்று காலை 07.20 மணி இருக்கும் நான் என்னுடைய குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக பேருந்தில் ஏறிவிட்டேன். அப்போது என்னுடைய நண்பர் அதிர்ச்சியாக டி.வி.யைப் பார்த்தாயா? என்று கேட்டார்? நான் என்னமோ? ஏதோ என்று பயந்து விட்டேன். ஏதாவது பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு குண்டு வைத்து விட்டார்களோ என்ற அச்சம்தான் முதலில் எனக்குத் தோன்றியது. நான் பார்க்கவில்லை என்ன விசயம் என்று கேட்டேன். புஷ்சை செருப்பால் அடித்து விட்டார்கள் என்று கூறினார். ஆச்சரியமாக இருந்தது! உடனே என்னுடைய குழந்தைகளை பேருந்தில் இருந்த மற்றொரு நன்பரிடம் அழைத்துச் செல்லச் சொல்லி விட்டு. தொலைபேசியில் அழைத்த நன்பர் வீட்டுக்குச் சென்றால், அந்த வீடே ஒரே குதுகலமாக இருந்தது. அப்போதுதான் மீண்டும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஜார்ஜ் புஷ் செருப்படி பட்ட காட்சியை மீண்டும், மீண்டும் காட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த காட்சி குறித்து எனக்கு மட்டுமல்ல! உலகம் முழுவதற்கும் சில மணித்துளிகளில் எஸ்.எம்.எஸ். - செல்பேசி என்று பரஸ்பரம் பரிமாறிக் கொண்டதைத்தான் காண முடிந்தது! ஏகாதிபத்திய எதிர்ப்பின் - யுத்த வெறியன் மீதிருந்த எதிர்ப்புணர்வு எப்படியெல்லாம் வெளிப்படும் என்பதை இந்த காட்சி நன்கு புலப்படுத்தியது.!

உலகிலேயே செருப்படி வாங்கிய முதல் அமெரிக்க ஜனாதிபதி என்கிற சிறப்புக்குரிய தகுதியை பெற்றிருக்கிறார் ஜார்ஜ் புஷ். வெள்ளை மாளிகையில் இருந்து இன்னும் ஒரு மாதத்தில் வெளியேறப் போகும் இந்த பிணம் திண்ணி கழுகிற்கு இந்த செருப்படி வழியனுப்பு நிகழ்ச்சியை ஈராக் இளம் பத்திரிகையாளர் வழங்கி கெளரவித்திருக்கிறார்.

நேற்யை தினம் திடீரென்று - முன்னறிவிப்பு ஏதுமின்றி ஈராக்கிற்கு இறுதி யாத்திரை செய்திருக்கிறார் புஷ். ஈராக்கில் அமைதியை நிலைநாட்டுவதற்காகத்தான் தான் அந்த நாட்டின் மீது போர் தொடுத்ததாக கூறிய புஷ், ஈராக்கில் அமெரிக்க சேவகம் புரியும் அமெரிக்க போர் வீரர்களிடம் (வெறியர்களிடம்) அவர்களது வீரப்பிரதாபங்களை - தியாகங்களை! புகழ்ந்த புஷ் பின்னர். அந்நாட்டு பொம்மை பிரதமர் நூரி அல் மலிக்கியுடன் (Nuri al-Maடமைi) ஒரு சிறிய அறையில் மிகுந்த பாதுகாப்புக்கிடையே பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போதுதான் இந்த வரலாற்று புகழ் மிக்க செருப்படியை ஈராக்கின் பாக்தாத்திய தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் முன்டாசிர் அல்-சைடி (Muntazir al-Zaidi) புஷ் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென எழுந்து தனது காலனிகளை (shoes) கழற்றி ஜார்ஜ் புஷ்யை நோக்கி வீசினார். அந்த தாக்குதலில் தமிழ் வில்லன் நடிகர் நம்பியார் போல டபாய்ந்து (சுதாரித்து) விட்டார் புஷ். அடுத்த சில மணித்துளிகளில் மீண்டும் இன்னொரு காலனியையும் தூக்கி வீசி அந்த இளம் (புரட்சிகர) பத்திரிகையாளர், "இதுதான் உனக்கு வழியனுப்பு முத்தம், நாய்! நாய்!" என்று கம்பீரமாக முழக்கமிட்டார். அந்த இரண்டு செருப்படிகலும் ஜார்ஜ் புஷ் மீது படாவிட்டாலும் அது அமெரிக்க மற்றும் ஈராக் கொடிகளை முத்தமிட்டுச் சென்றது.





உடனடியாக அந்த வாலிபரை நாயின் காவற்படைகள் அப்படியே அமுக்கி அலாக்காக தூக்கிச் சென்றன.

இருப்பினும் இந்த செருப்படிபட்ட மானங்கெட்ட புஷ், தொடர்ந்து உரையாற்றுகையில் அது மக்களை திசை திருப்பும் செயல் என்று கூறிவிட்டு, இதற்கெல்லாம் தான் அசரப்போவதில்லை என்று உரையாற்றினார்.

இந்த காட்சியைப் பார்த்த உலக மக்கள் ஆனந்த பெரு வெள்ளத்தில் மிதந்த காட்சியைப் பார்க்க முடிந்தது. இருக்காதா? இந்த குட்டி நாய் (ஜார்ஜ் புஷ்) தன் வீட்டில் உள்ள நாய்க்கு இந்தியா என்று செல்லமாக பெயர் வைத்ததாம்!

அது மட்டுமா? இந்த ரத்தம் குடிக்கும் ஓநாய் ஆப்கானிஸ்தானையும், ஈராக்கையும், பாலஸ்தீனத்தையும் எப்படியெல்லாம் வேட்டையாடியது? ஈராக்கில் மட்டும் 30 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து அண்டை நாடுகளில் குடிபெயர்ந்துள்ளனர். ஐந்த லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிர்களை பலிகொண்டதோடு 15 லட்சம் ஈராக் மக்களின் உயிர்களை பறித்ததோடு ஒரு நாட்டின் தாய் மக்களை சியா, ஷன்னி, குர்து என்று பிரிவினையை தூண்டி அம்மகளுக்குள்ளேயே மோதலை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் சர்வதேச கிரிமினல் ஜார்ஜ் புஷ்ஷுக்கு செருப்படி கொடுத்து வழியனுப்பாமல் வேறு எதைக் கொடுத்து வழியனுப்புவார்கள்?

உலக நாடுகளை தனது அரசியல் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தற்போது பயங்கரவாதத்திற்கு எதிரான உலகலாவிய போர் என்ற பெயரில் தற்போது ஈராக்கிற்கு அடுத்து ஈரானையும், அடுத்து சிறியாவையும், பாகிஸ்தான் மீதும் இலக்கு வைத்து செயல்படும் அமெரிக்கா, கியூபா, வடகொரியா, சிறியா போன்ற நாடுகளை முரட்டு நாடுகள் என்று பெயரிட்டு உலக மக்களின் எதிரிகயாக சித்தரிப்பதோடு, சீனாவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று பொய்யை - அவதூறை பரப்பி அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறது.

இவர்களது ஏகாதிபத்திய நாடு பிடிக்கும் கொள்கைககளால் ஒரு புறம் மன நிறைவு கொள்ளும் இந்த போர் வெறியர்களின் நாடு தற்போது பொருளாதார திவால் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. அந்நாட்டு மக்கள் தற்போது வீடிழந்து கடுங்குளிரில் வாடி வதங்கிக் கொண்டிருப்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உலக நாடுகளை நாகரீக நாடகளாக மாற்றும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டால் செருப்படிதான் அதற்கு பரிசாக கிடைக்கும்!

December 08, 2008

ராஜஸ்தானில் சரிந்தது இந்துத்துவ சாம்ராஜ்யம்!


2009 பாராளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகவும், சோதனைக் களமாகவும் விவரிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் இந்தி பேசக் கூடிய மாநிலங்களில் உள்ள மக்களின் மனநிலையை நன்றாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பா.ஜ.க. டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் வெற்றி பெறும் என்று கனவுக் கொண்டிருந்தது. ஆனால் மக்கள் தீர்ப்பு எதிர்கால பிரதமர் வேட்பாளர் அத்வானிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

இந்துத்துவாவின் சோதனைக் களங்களில் ஒன்றான ராஜஸ்தானில் 2003-இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பி.எஸ்.பி. (பிஜீலி - அதிகாரம், சடாக் - சாலை, பாணி - தண்ணீர்) என்று வருணிக்கப்பட்ட கவர்ச்சிகரமான கோஷத்தை முன்வைத்தது. தனது வழக்கமான இந்துத்துவா கோஷத்தோடு மக்கள் பிரச்சனைகளையும் தெரிவு செய்து வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு அதிகார வெறிபிடித்த, ஊழல் மற்றும் ஊதாரித்தனமான, தண்ணீர் கேட்ட மக்களுக்கு தண்ணீ காட்டிய அரசாக செயல்பட்டது.

அதாவது, கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் மக்கள் பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்வைத்து செயலாற்றியது வசுந்தரா ராஜ சிந்தியே அரசு. குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையான தண்ணீர் பிரச்சனைக்கு எந்தவிதமான தீர்வையும் கொண்டு வருவதற்கு லாயக்கற்றதாக இருந்தது. மேலும், குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் நாள்தோறும் தண்ணீருக்காக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர். அது மட்டுமா? மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகமான குஜ்ஜாருக்கு ஆட்சிக்கு வந்தால் பழங்குடி அந்தஸ்து தருவதாக கூறி ஏமாற்றியது. இதனால் பல மாதங்கள் ராஜஸ்தானம் அமைதியை இழந்தது. இவையெல்லாம் பா.ஜ.க.வின் தெளிவற்ற வாக்கு வங்கி அரசியலால் ஏற்பட்ட அரசியல் - சமூக குழப்பங்கள்.

அதேபோல், கடந்த ஐந்து ஆண்டுகளில் 45க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கி சூட்டினை நடத்தி 100க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களைப் பறித்து ஓர் அரச பயங்கரவாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டது. குறிப்பாக இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை - எளிய விவசாயிகள்தான். அதுவும் குறிப்பாக தண்ணீருக்காக போராடிய விவசாயிகளை குறி வைத்து தாக்கியது. ராஜஸ்தானத்து மக்களின் தண்ணீர் பிரச்சனைக்காக தொடர்ச்சியாக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கடும் தாக்குதலைத் தொடர்ந்தது.

அது மட்டுமா? தனத இந்துத்துவா கொள்கைகளை கல்லூரிகளிலும், கல்விச் சாலைகளிலும் கொண்டுச் சென்றது. இதற்காக ஜந்தோலியில் 2500 ஏக்கரில் கேசவ் வித்தியாபீத் விஸ்வ வித்யாலாயா என்ற சுயஉதவி பல்கலைக் கழகத்தை ஏற்படுத்தியது. இதில் முழுக்க முழுக்க இந்துத்துவா சித்தாந்தவாதிகளை உருவாக்குவதற்காகவே பாடத் திட்டங்களை வடிவமைத்தது. இதற்காக கல்வி மந்திரி முழுக்க முழுக்க தனது அதிகார எல்லைகளை எல்லாம் மீறி செயலாற்றியது கடும் விமர்சனம் எழுந்தது.

குறிப்பாக மேற்கண்ட பல்கலைக் கழகத்தில் சங்பரிவாரின் கோஷமான, "அறிவியலும் கலாச்சார தேசியமும்" என்ற பாடத் திட்டம் உருவாக்கப்பட்டது. அதேபோல், ஆயூர்வேதா, வேதகால அறிவியல், யோகவூம் - மருத்துவமும் போன்ற தலைப்புகளில் புதிய இந்துத்துவ பாடத் திட்டங்களை ஏற்படுத்தியது. அதாவது ராஜஸ்தான் மக்களின் மதச்சார்பற்ற கலாச்சாரத்திற்கு தத்துவார்த்த ரீதியாகவே வேட்டு வைத்தது.

மேலும், அந்த மாநிலத்தில் தலை தூக்கிய பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தத் தவறியது. குறிப்பாக சாமுண்டி தேவி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் மட்டும் 140 பேர் பலியாகினர். மொத்தத்தில் ராஜஸ்தான் மாநில அரசு அனைத்து முனைகளிலும் தோல்வியைத் தழுவியது. இதன் எதிரொலிதான் இந்துத்துவா என்பது மக்களுக்கு உதாவாத பிரிவினைவாத தத்துவம் என்பதை உணர்ந்துக் கொண்ட ராஜஸ்தான் மக்கள் அதனை ஆட்சியிலிருந்து விரட்டியுள்ளனர். குறிப்பாக 2003 ஆம் ஆண்டு 121 இடங்களை வென்ற பா.ஜ.க. தற்போது வெறும் 74 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களைப் பெற்று முதல் இடத்திற்கு வந்துள்ளது.

அத்துடன் ராஜஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று இடங்களை தன்னந்தனியாக நின்று வென்றுள்ளது. அதாவது ராஸ்தானத்து காவிக் கோட்டை இன்றைக்கு செங்கோட்டையாக - மாறுவதற்காக முதல் துவக்கமாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. இதன் மூலம் எதிர் வரும் காலத்தில் இடதுசாரிகளின் அரசியல் எழுச்சி இந்தி பேசக் கூடிய மாநிலங்களில் வலுவாக கால் ஊன்றுவதற்கான எதிர்பார்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர்.

குறிப்பாக தண்டா ராம்கார்க் தொகுதியிலிருந்து தோழர் அமரா ராம் நான்காவது முறையாக தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பிரேமா ராம் - தூத் (எஸ்.சி.) தொகுதியிலிருந்தும், பவன் குமார் துகால் - அனுப்கார்க் (எஸ்.சி.) தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தானில் உள்ள விவசாயிகள் - தொழிலாளிகள் பிரச்சனைகள் எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும். இந்த தேசத்தில் மக்களை பிளவுபடுத்தி - கொலைவெறித் தாண்டவமாடும் அஜண்டாவை மட்டும் முன்னிறுத்தும் பா.ஜ.க.வின் மதவாத அரசியலை வீழ்த்திட வேண்டும் என்றால் மதச்சார்பற்ற கட்சிகள் கொள்கை ரீதியில் ஓரணியில் திரள வேண்டும். மதச்சார்பற்ற அரசியலை - ஜனநாயக அரசியலை முன்னெடுக்க முன்வரவேண்டும். அதுதான் இந்த தேசத்தை கரை சேர்க்கும் பாதுகாப்பான படகாகும்.

December 04, 2008

பயங்கரவாதத்தின் முகங்கள்!


21ஆம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் அஜண்டாக்களில் ஒன்றாக பயங்கரவாதம் முன்னுக்கு வந்துள்ளது. ஏற்கனவே 2001ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது மும்பையில் நடைபெற்றுள்ள பயங்கரவாதத் தாக்குதலால் உலக மக்கள் பயங்கரவாதத்தின் கோரப் பிடியில் - அதன் சிக்கலான வலையில் சிக்கிக் கொண்டுள்ளதை காட்டுகிறது.

பயங்கரவாதத்திற்கு நாடுகளோ - எல்லைகளோ கிடையாது. அது எல்லைத் தாண்டும் கொடூர நோயாக வளர்ந்துள்ளது. மொத்தத்தில் பயங்கரவாதிகள் தங்களுக்கான நிகழ்ச்சி நிரலை உலகு தழுவியதாக அமைத்துக் கொண்டுள்ளதைத்தான் 21ஆம் நூற்றாண்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிரூபிக்கின்றன.

இதில் ஒன்றிரண்டு தாக்குதல்களை இந்த நேரத்தில் நினைவு கூர்வதும் பொருத்தமாக இருக்கும். இதில் 9/11 என்ற அடையாளமே பயங்கரவாதத்தின் குறியீடாக மாறியுள்ளதிலிருந்தே, பயங்கரவாதத்தின் ஒட்டுமொத்த குரூரத்தை - அவர்கள் எப்படியெல்லாம் ஊடுருவ முடியும் என்பதை காட்டுவதாக அமைந்தது.

2002ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் - பாலியில் வெளிநாட்டு பயணிகள் மீது நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் செயலுக்கு பின் அல்கய்தாவின் கையிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், அதே ஆண்டு ரஷ்யாவில் - மாஸ்கோவில் உள்ள தியேட்டரை கைப்பற்றிக் கொண்ட செச்சென்ய பயங்கரவாதிகள் மக்களை பணய கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர். இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.

2002ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் அல்கயிதா தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 60க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.

2004ஆம் ஆண்டு ஸ்பெய்னில் - மாட்ரிடில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 191 பேர் உயிரிழந்ததோடு 2000க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இடா என்ற அமைப்பு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இவை அத்தனையையும் விட உலக மக்களின் இதயத்தை உலுக்கிய தாக்குதல் ரஷ்யாவில் - பெஸ்லேனில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் மிகக் கொடூரமானது. குறிப்பாக இந்த பயங்கரவாதிகள் பள்ளி ஒன்றினை கைப்பற்றிக் கொண்டு - மாணவர்களை பிணைய கைதிகளாக வைத்துக் கொண்டு கொலை வெறித்தாண்டவத்தை நடத்தினர். இதில் மட்டும் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகினர்.

இந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பது மும்பை தாக்குதல். இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

மேற்கண்ட ஒரு சில பயங்கரவாதத் தாக்குதல்களை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் இன்றைக்கு பயங்கரவாதிகள் எந்த அளவிற்கு நாடுகளைக் கடந்து தங்களது கொலைவெறி நிகழ்ச்சி நிரலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்க முடியும்.

குறிப்பாக, அல்கயிதா பயங்கரவாதம், சங்பரிவார பயங்கரவாதம், இடா பயங்கரவாதம், செச்சென்ய பயங்கரவாதம், எல்.டி.டி.ஈ, பயங்கரவாதம் என எதை எடுத்துக் கொண்டாலும் - அவர்களது நோக்கமும், குறிக்கோளும் வேறு வேறாக இருந்தாலும், பல்வேறு மதம் மற்றும் இனங்களைச் சார்ந்த அமைப்புகளாக இருந்தாலும் இவர்கள் அனைவரும் பின்பற்றும் வழிமுறை ஒரே வகையானது. அதாவது இவர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்துவது அப்பாவி பொதுமக்களைத்தான். ஆயுத பாணிகளான இவர்கள் தங்களது குறிக்கோளை அடைவதற்கு நிராயுத பாணிகளான அப்பாவி பொதுமக்களை, ஏதும் அறியாத பச்சிளம் குழந்தைகளை தங்களது இலக்காக வைத்து செயலாற்றுவதுதான். உண்மையில் இந்த பயங்கரவாதிகளை பெரும் கோழைகள் என்றே அழைக்க முடியும். அதாவது இவர்களது எதிரிகளாக கருதும் ஆட்சியாளர்களின் படைகளை நேரடியாக எதிர்த்து நிற்க முடியாத கோழைகள். பொது மக்கள் மீது தாக்குதல் தொடுத்து தங்களது கோரிக்கைகளையும், எண்ணங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று துடிக்கும் பாசிச எண்ணம் கொண்டோராகவே இருக்கின்றனர்.

இந்த மாதிரியான பயங்கரவாதச் செயல்களை செய்வதற்கு பல ஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டு - திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபடும் வாலிபர்களின் மூளைகளை நன்றாக மூளைச் சலகை செய்து, இவர்களது செயல்களுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் ஒரு தத்துவார்த்த முலாமை பூசுகின்றனர். பொதுவாக இசுலாமிய பயங்கரவாதத்திற்கு (உண்மையான இசுலாமியர்கள் இதனை விரும்புவதில்லை) ஜீகாத்திற்கு - புனித போர் என்ற பெயர் சூட்டி, அது அல்லாவின் பெயரால் - கடவுளின் பெயரால் நடத்தப்படுவதாகவும், அது கடவுளின் பணி என்று அதற்கு உயர்ந்த அந்தஸ்தைக் கொடுத்து அதன் பெயரால் அப்பாவி பொது மக்களை கொல்லும் நாசகரச் செயலில் ஈடுபடுத்துகின்றனர்.

இதேபோல்தான் இந்துத்துவாவாதிகளும் ராமரின் பெயராலும், மதத்தின் பெயராலும், இந்து மதத்தின் புனிதத்தை காக்கப்போவதாகவும் கூறிக்கொண்டு தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக இன்னொரு மதத்தை எதிரியாக கற்பித்து - மதவெறியைத் தூண்டி கூட்டுப் படுகொலைகளை நடத்துகின்றனர். குறிப்பாக இந்தியாவில் தற்போது எழுந்துள்ள இந்துத்துவா பயங்கரவாதம் என்பது அரசியல் ரீதியாகவும், சதிச் செயல்களின் வாயிலாகவும் நிறைவேற்ற முயலும் அபாயத்தை இந்திய மக்கள் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

இப்படித்தான் எல்.டி.டி.ஈ.யினர் இனத்தின் அடிப்படையிலும், தமிழினத்திற்காக சிங்கள இனத்திற்கு எதிராக மட்டுமின்றி, அந்த அமைப்பை யார் எதிர்த்தாலும் அவர்களை அழித்து விட வேண்டும் என்ற வெறியோடு செயல்பட்டு இந்தியாவில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட, பல தமிழ் அமைப்புகளின் முன்னணித் தலைவர்களையும் தனது பயங்கரவாதச் செயலால் படுகொலை செய்ததையும், தனது பகுதியில் உள்ள இசுலாமியத் தமிழர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வெளியேற்றிதையும் காண முடியும்.

அதேபோல் பயங்கரவாதிகளின் முகங்கள் பல்வேறு முகங்களைக் கொண்டிருந்தாலும், ஒரு பயங்கரவாதத்திற்கு இன்னொரு பயங்கரவாதம் நடைமுறையில் உதவுவதை காண முடியும். அதாவது இந்துத்துவா பயங்கரவாததிற்கு எதிராக தோன்றியதே இசுலாமிய பயங்கரவாதம், அல்கயிதா பயங்கரவாத்திற்கு எதிராக தற்போது தோன்றியுள்ளதோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாதம்... என ஒரு தொடர் சங்கிலி இணைப்பு உள்ளது. மொத்தத்தில் இந்த பயங்கரவாதிகளுக்கு ஒரு எதிரி தேவைப்படுகிறது. அல்லது எதிரிகளை இவர்களே திட்டமிட்டு உருவாக்குகிறார்கள் என்பது இதற்குள் ஒளிந்துக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த பயங்கரவாதிகள் அனைவரும் நவீன அரசியல் தத்துவமான ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம், பெண்ணுரிமை, மண்ணுரிமை போன்றவற்றிற்கு தத்துவார்த்த ரீதியாகவே எதிரானவர்களாக செயல்படுவதை காண முடியும். தாலிபானிய அடிப்படைவாதமும், அல்காயிதா அடிப்படைவாதமும் இசுலாமிய பெண்களை ஒட்டுமொத்தமாக மூடி பர்தா அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதோடு, அவர்கள் டி.வி. உட்பட நவீன சாதனங்கள் எதனையும் பார்க்கக் கூடாது என்று நிர்ப்பந்திக்கின்றனர். அதாவது 2000 வருடத்திற்கு முன்னால் தோன்றிய குரானிய வழிமுறையிலான வாழ்க்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்த நவீன காலத்திலும் நிர்ப்பந்திப்பதை காண முடியும். இதேபோல்தான் இந்துத்துவாவும் செயலாற்றுவதை நாம் நன்கு உணர்வோம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பெண்களை சேர்த்துக் கொள்வதில்லை என்பதோடு, மனுதர்ம கால பெண்ணடிமைத்தனத்தை போற்றக்கூடிய பிற்போக்குவாதிகளாகவும் இந்த மத அடிப்படைவாதிகள் இருப்பதை காண முடியும்.
எனவேதான் இந்த பயங்கரவாதிகள் அனைவரும் அந்த மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வெகுஜன போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மாறாக, அரசியல் ரீதியாக அந்த மக்களை அணி திரட்டுவதற்கு மாறாக, சதிச் செயல்களின் மூலம் உருவாகும் பயங்கரவாதத் தத்துவத்தை தனது கவசமாக பயன்படுத்துகின்றனர். அடிப்படையில் இவர்களுக்கு மக்கள் மீது நம்பிக்கை இல்லாத தத்துவார்த்த பலகீனம்தான் இவர்களை பயங்கரவாதம் எனும் கோழைத்தனத்தின் மீது நம்பிக்கைக் கொள்ளச் செய்கிறது.

பயங்கரவாத அமைப்புகள் வலுப்பெறுவதற்கும், தோன்றுவதற்கும் அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருப்பது ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அரசியல் அடிப்படைகளே! அதாவது முதலாளித்துவத்தால் ஏற்படும் சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடிகளில் இருந்து மக்களை மீட்பதற்கு ஜனநாயக இயக்கங்கள் உரிய முறையில் முகம் கொடுக்காத போதும், வெகுஜனங்கள் இவர்கள் அரசியல் மீது நம்பிக்கை இழக்கும் போதும் ஏற்படும் வெற்றிடங்களைத்தான் இந்த பிற்போக்குவாத சக்திகள் தங்களுக்கான களமாக பயன்படுத்துகின்றனர். அதேபோல் அமெரிக்க ஏகாதிபத்தியம் சோலிச ரஷ்யாவிற்கு எதிராக ஆப்கானிஸ்தானிலிருந்து தாலிபான்களை உருவாக்கி மறைமுக போரை தொடர்ச்சியாக நடத்தியதும், அவர்களுக்கு ஆயுதம் உட்பட, பொருளாதர உதவிகளையும் வழங்கி தொடர்ச்சியாக ஊக்குவித்ததும் பின்னர் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து உலகளவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ஏகாதிபத்திய கரங்களால் முற்றிலுமாக ஆக்கிரமிக்க முயலும் போது, வளர்த்த கடா மார்பில் பாயும் என்ற முதுமொழிக்கேற்ப இன்றைக்கு அது அல்கய்தாவாக உருவெடுத்து அமெரிக்க ஆட்சியாளர்களை மட்டுமல்ல அமெரிக்க குடிமக்களையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
ஏகாதிபத்தியம் தொடர்ச்சியாக தனது நலனை முன்னிறுத்தி நாடுபிடிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதையும், அதற்கு ஈராக்கிற்கு சொல்லப்பட்டதுபோன்று - பேரழிவுமிக்க ஆயுதங்கள் உள்ள நாடு என்ற பொய்யைச் சுமத்தி அதனை முற்றிலுமாக ஆக்கிரமித்து - அந்நாட்டின் ஜனாதிபதி சதாம் உசைனை போலி விசாரணைகளின் மூலம் எதிர்கொண்டு தூக்கில் ஏற்றியதுமான நிகழ்வுகள் இசுலாமிய மதத்தில் நம்பிக்கை கொண்ட மக்களை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திருப்பிட பிற்போக்கு சக்திகள் - இதனை புனிதப் போர் என்று அறிவித்து பல பின்லேடன்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உருவாக்கியுள்ளது.

தற்போது ஏகாதிபத்தியம், பயங்கரவாதத்திற்கு எதிராக வேறு ஒரு மொழியில் புனிதப் போரைத் துவங்கியிருப்பதாக - பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய போர் என்ற முறையில் மேலும் தனது ஆக்கிரமிப்பிற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டது. இந்த முதலாளித்துவமும் - ஏகாதிபத்தியமும் பெற்றெடுத்துள்ள முரட்டுக் குழந்தைதான் பயங்கரவாதம் என்ற உண்மையை நாம் உலகுக்கு எடுத்துரைக்க வேண்டியுள்ளது.தற்போது இந்த முரட்டுக் குழந்தைகள் உலகையே தங்களது விளையாட்டுக் களமாக மாற்றத் துடித்துக் கொண்டுள்ளன.

எனவே, நம்மைப் பொறுத்தவரையில் - உலக மக்களைப் பொறுத்த அளவில் இந்த பயங்கரவாதம் என்ற முரட்டு குழந்தையை வீழ்த்துவதற்கு அது எப்படி செயல்படுகிறதோ அதேபோன்று அந்த கருத்தாக்கத்திற்கு எதிராக உலகளவில் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியுள்ளது. நவீன சமூகத்தின் வளர்ச்சிக்கு ஒத்து வராத இந்த பயங்கரவாதத்தை தத்துவார்த்த ரீதியாக முறியடிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக இதனை எதிர் கொள்வதற்கு ஒரு வெகுஜன எழுச்சியை உருவாக்க வேண்டியுள்ளது. இவ்வாறான வெகுஜன எழுச்சி என்பது வெறுமனே முரட்டுக் குழந்தைகளை எதிர்ப்பதாக - பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக மட்டும் அமைந்து விடக் கூடாது.

அதன் பெற்றோர்களான முதலாளித்துவ - ஏகாதிபத்திய சக்திகளின் பிற்போக்கு கொள்கைகளுக்கு எதிராகவும், இனவாதம், மதவாதம் போன்ற தத்துவார்த்த பிரிவினைகளுக்கு எதிராகவும், மதப்பிற்போக்கு சக்திகளுக்கு எதிராகவும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட, ஏகாதிபத்திய எதிர்ப்பில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மேலும் இது ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், அவர்களது வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையில் கல்வி, வேலை, வீடு, சுகாதாரம், ஜனநாயக உரிமைகள், அரசியல் உரிமைகள், பாலின வேறுபாடு இல்லாமை போன்றவற்றை உத்திரவாதப்படுத்தும் வகையில் விரிவடைந்த வகையில் இந்த சிந்தனைகளை முன்னிறுத்தும் போராட்டங்களை கட்டியெழுப்புவதும்தான் இந்த பயங்கரவாததிற்கு எதிரான சரியான நடவடிக்கையாக அமையும்.

இதனை விட்டு, விட்டு இந்தியாவில் - மும்பையில் பயங்கரவாதச் செயல்கள் அரங்கேறினால் அதற்கு பாகிஸ்தான் தான் அடிப்படைக் காரணம் என்று திசை திருச்சி உணர்ச்சி வயப்பட்ட அரசியலுக்கு இந்திய மக்களை இரையாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்திற்கும், மதவாத சக்திகளுக்கும் எதிராக நாம் போராட வேண்டியுள்ளது.
பயங்கரவாதம் என்பது இந்தியாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன், ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி போன்ற தலைவர்களின் உயிர்களையும் பறித்துள்ளது. இதேபோல்தான் பாகிஸ்தானிலும் பெனாசிர் பூட்டோ உட்பட, பல்லாயிரக்கணக்கான பொது மக்களின் உயர்கள் இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரையாகியுள்ளது. இந்த இடத்தில் ஒரு விசத்தை நாம் கவனப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். அதாவது பாகிஸ்தானில் யார் பயங்கரவாதச் செயலில் ஈடுபடுகிறார்கள், அங்கும் இசுலாமிய பிற்போக்கு சக்திகள்தான் அது லஷ்கர் - இ தொய்பாவாக இருக்கலாம் - அல் கய்தாவாக இருக்கலாம் யார் மீது இந்த அடிப்படைவாதிகள் தாக்குதல் தொடுக்கின்றனர் இசுலாமை பின்பற்றும் சொந்த மக்கள் மீதுதான். எனவே பயங்கரவாதிகளின் தத்துவத்திற்கு இரு பக்கமும் கூர்மை கொண்ட வாள் உள்ளது. அது சொந்த நாட்டு மக்களையும் - வேற்று நாட்டு மக்களையும் இரையாக்கும் என்பதுதான். எனவே, பயங்கரவாதத்திற்கு மதமோ, இனமோ, மொழியோ அடையாளப்படுத்த முடியாது. அது இவைகளைத்தாண்டிய மனிதவிரோத சிந்தனையைக் கொண்டது என்பதுதான்.

குறிப்பாக இந்தியாவில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கக்கூடிய காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வினை வழங்கிட மத்திய அரசு முன்வரவேண்டும். அந்த மக்களுக்கு நமது அரசின் மீதான நம்பிக்கையை உண்மையிலேயே ஏற்படுத்த வேண்டும். காஷ்மீரில் இருப்பவர்கள் இசுலாமியர்கள் என்பதாலேயே அதற்கு உள்ள விசேச உரிமைகளான 370வது பிரிவு உட்பட பல உரிமைகளை மறுக்கும் பா.ஜ.க. - சங்பரிவார பாணிகளுக்கு அடிபணியாமல் இதற்கு தீர்வு காண வேண்டும்.

அடுத்து பெரும்பான்மை மக்களாக உள்ள இந்துக்களை தாஜா செய்வதற்காக சங்பரிவார அரசியலைப் போன்று சாப்ட் இந்துத்துவா பாணியை காங்கிரஸ் கைவிட வேண்டும். அது மட்டுமல்ல இந்தியாவில் இந்துத்துவ பாசிசமாக உருவெடுத்துள்ள பா.ஜ.க.வுடன் அரசியல் ரீதியாக உறவு வைத்துக் கொள்ள - திராவிட இயக்கங்கள் உட்பட முற்படும் போது எப்படி ஒரு மதச்சார்பற்ற அரசியல் வலுப்படும் என்ற கேள்வி அடிப்படையிலேயே எழுகிறது. எனவே மதவாதத்தை உறுதியாக முறியடித்திட காங்கிரசும் - மற்ற ஜனநாயக அமைப்புகளும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதே பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான முதல் அடிப்படையாக அமையும். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல - உலக நாடுகள் அனைத்திற்கும் அடிப்படை!

December 02, 2008

த சண்டே இந்தியன் தலையங்கம் மீதான என் விமர்சனம்!


திரு. அரிந்தம் சவுத்ரியின் 26/11... குறித்த தலையங்கம் படித்தபோது, "த சன்டே இந்தியனனில் நாங்கள் யதார்த்தமாகவும், நேர்மையாகவும் இருப்பதை நம்புகிறோம்" என்ற வாதம் அந்த தலையங்கத்திற்குள்ளேயே நகைப்புக் கிடமாக கிடந்ததை கண்டு நான் வருத்தமுற்றேன்.

ஆசிரியர் அரிந்தம் சவுத்ரி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதைக் கூட மறந்து மெய்மறந்த நிலையிலேயே இந்த தலையங்கத்தை தீட்டியிருக்கிறாரோ என்ற சந்தேகத்தைத்தான் எழுப்பியது. அதாவது, "மும்பையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களையொட்டி மீடியாக்களில் எழுந்த விவாதங்கள் அனைத்தும் இந்துக்களுக்கு எதிராக இருந்ததாகவும், இந்து வெடிகுண்டுகளைப் பற்றி பேசியதாகவும், இந்து பயங்கரவாதம்" என்று திசை திருப்பியதாகவும் கண்ணீர் வடித்துள்ளார்.

மறுபுறத்தில், "இந்தியாவில் எந்த ஊடகமும் இதுவரை முஸ்லீம் பயங்கரவாதி என்றோ அல்லது முஸ்லீம் வெடிகுண்டு என்றோ அழைத்ததாக நினைவுக்கு இல்லை" என்று பச்சையாக ஒரு பொய்யை - அணு குண்டாக தூக்கி வீசி பத்திரிகை தர்மத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளார்.

திரு. அரிந்தம் சவுத்திரி தன்னை இந்தியாவில் உள்ள பெரும்பான்மை சமூகமான இந்துக்களுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும் அரசியலை மிக லாவகமாக செய்வதோடு, இதுபோல் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் நடைபெறுமா? என்று பா.ஜ.க.வின் ஸ்போக்ஸ் பர்சன் போல கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் "இந்துக்கள் நிஜத்தில் பயங்கரவாதி அல்ல" என்று ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் வழங்குவதன் மூலம் மறைமுகமாக இசுலாமிய சமூகத்தின் மீது அந்த பழியை அற்புதமாக சுமத்துகிறார். அத்துடன் "இந்துக்கள் வெடிகுண்டு தயாரிப்பவர்கள் அல்ல" என்று கூறுவதன் மூலம் மறைமுகமாக இசுலாமியர்கள் வெடிகுண்டு தயாரிப்பவர்கள் என்று பழியை சுமத்த முற்படுகிறார் அரிந்தம் சவுத்திரி.

அது, இந்த விவரம் அறிந்த பத்திரிகையாளர் இந்தியாவில்தான் உள்ளாரா? அல்லது 10க்கு 10க்கு ஏ.சி. அறைக்குள் உட்கார்ந்துக் கொண்டு லாப்-டாப்பின் வழியாக இந்தியாவை தரிசிக்கிறாரா? என்றுத் தெரியவில்லை. சமீபத்தில் மும்பயையில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் பலியான ஹேமந்த் கார்க்கரே தலைமையிலான ஏ.டி.எஸ். குழுவினர் மகாராஷ்டிராவில் நடைபெற்ற மலேகான் குண்டு வெடிப்பில் சாத்வி பிராக்யாவுக்கும், இராணுவ அதிகாரி புரோகித்துக்கும் தொடர்பிருப்பதையும் இவர்கள் அனைவரும் இந்துத்துவ அமைப்புகளான வி.எச்.பி. - ஆர்.எஸ்.எஸ். - பஜ்ரங் தள் வகையறாக்கள் என்பதையும் நிரூபித்ததையெல்லாம் இவர் மறந்து விட்டாரா?

வேண்டும் என்றால் இங்கே என்னுடைய வாதத்தை இப்படி பதிய விரும்புகிறேன். இந்துக்களுக்கு ஒரு போதும் பயங்கரவாத சிந்தனை வராது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் இந்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொள்ளும் இந்துத்துவாவாதிகள் இந்த தேசத்தின் பயங்கரவாதிகள் என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இருப்பதற்கில்லை. இறுதியாக இந்த தலையங்கத்தின் மூலம் அரிந்தம் சவுத்திரி த சன்டே இந்தியன் பத்திரிகை மறைமுகமாகக் கூட அல்ல நேரடியாகவே இந்துத்துவாவுக்கு ஆதரவானதுதான் என்பதை காட்டி விட்டார்.

December 01, 2008

ஹேமந்த் கார்க்கரேவுக்கு வீரவணக்கம்!



தேசத்தை உலுக்கிய மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து தாஜ் ஓட்டல், நரிமன் இல்லம், ஓபராய் போன்றவற்றில் பிணைய கைதிகளாக வைத்திருந்த அப்பாவி மக்களையும், வெளிநாட்டு பயணிகளையும் மீட்பதற்காக 60 மணி நேர ஓய்வு ஒலிச்சலில்லாத கடுமையான போராட்டத்திற்கு பின் நமது வீரர்களின் அளப்பரிய உயிர்களை தியாகம் செய்து அந்த பயங்கரவாத மிருகங்களை முறியடித்து மீட்டுள்ளனர்.

இந்த பணியில் ஈடுபட்ட நமது தேசிய பாதுகாப்பு படையினரின் சாதனையும், தியாகமும் போற்றப்பட வேண்டியது. மெச்சத் தகுந்தது. இந்த தேசம் காக்கும் பணியில் முதல் பலியானவர் மகாராஷ்டிர மாநில பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் தலைவர் ஹேமந்த் கார்க்கரே! இவரது இழப்பு மகாராஷ்டிரத்திற்கு மட்டுமின்றி தேசத்திற்கே பெரும் இழப்பாகும்.

இந்த ஒப்பற்ற மாவீரரின் தியாகத்திற்கு தலை வணங்கி வீரவணக்கம் செலுத்துவோம்.

குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் மலேகானில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் பல வருடங்களாக துப்பு துலங்காத நிலையில் ஹேமந்த் கார்க்கரே பொறுப்பேற்ற பின்னர் அதன் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு, அந்த சம்பவத்தில் காவியுடை பயங்கரவாதிகளின் இருண்ட முகங்கள் - காவியுடையால் மறைக்கப்பட்டிருந்ததை அம்பலப்படுத்தினார். இந்தியா கடந்த 10 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து வட மாநிலங்களில் அதுவும் குறிப்பாக மகாராஷ்டிராவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பொதுவாக இதுபோன்ற பயங்கரவாத நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம் மதிப்பிற்குரிய வாஜ்பாய் அவர்களும் அத்வானி அவர்களும் இசுலாமிய பயங்கரவாத அமைப்பின் கையிருப்பதாகவும், இதில் ஐ.எஸ்.ஐ. பங்கு இருப்பதாகவும் உடனடியாக கதை கட்டி விடுவார்கள். நாடும் இதை நம்பித்தான் வந்தது. இப்படியான பயங்கரவாத நடவடிக்கையின் வாயிலாக குறிப்பாக இசுலாமிய சமீபத்தின் மீதே ஒரு பயங்கரவாத முத்திரையை திணிப்பதற்கு இந்துத்துவவாதிகளும், இந்துத்துவ ஆதரவு மீடியாக்கவும் கடுமையான முயற்சிகளை - கோயபல்சு பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தது.

இந்த சூழ்நிலையில்தான் முதல் முறையாக சாத்வி பிரக்யா என்ற இந்து துறவி இந்த பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை அம்பலப்படுத்தியதோடு, சங்பரிவாரம் நடத்தும் இராணுவ பள்ளியின் மூலமாகத்தான் இதுபோனற் சதிச் செயல்கள் அரங்கேற்றப்பட்டது என்பதையும் நாட்டிற்கு அம்பலப்படுத்தினார் ஹேமந்த் கார்க்கரே! அது மட்டுமா? இன்றைக்கு தேசத்தை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்பதற்காக தமது விலை மதிக்க முடியாத உயிரை பணயம் வைத்து போராடிய இராணுவ வீரர்களை நாடே புகழ்ந்து கொண்டிருக்கையில் - அத்தகைய மதிப்புமிக்க இராணுவத்திற்குள்ளேயே இந்துத்துவ ஓநாய்கள் இராணுவத்தின் உயர்மட்டம் வரைச் சென்று நமது தேசத்திற்கு எதிராகவே, நமது இந்திய மக்களுக்கு எதிராகவே பயங்கரவாத வன்முறைச் செயல்களை நிகழ்த்தியதை நினைக்கும் போது, இந்த சங்வரிவார பயங்கரவாதிகளுக்கு நாட்டையும், நாட்டு மக்களையும் விட அவர்களது வெறி பிடித்த பாசிச தத்துவம் எந்த அளவிற்கு அவர்களது மூளையை ஆட்டு வித்துள்ளது - ஆக்கிரமித்துள்ளது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.

பாசிச சிந்தனை எப்படி செயல்படும் என்பதற்கு அடையாம்தான் - முன்னாள் இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா என்பவரும் முன்னாள் இராணுவ மேஜர் பிரபாகர் குல்கர்னி என்பவரும் கைது செய்யப் பட்டுள்ளனர். இருவரும் நாசிக் அருகே, 'இந்து ராணுவப் பயிற்சிக் கழகம்' என்ற பயிற்சிப் பள்ளியை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள். மேஜர் குல்கர்னி, 'ஹிந்து சைனிகி சன்ஸ்த்தா' என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆயுதப் பிரிவில் செயலாளராகத் தொண்டு(!) ஆற்றி வருபவராவார்.

இந்த வழக்கில் இன்னும் தோண்டத் தோண்ட பல புதைகள் கிடைக்கவுள்ளன. இந்த நிலையில்தான் இந்த வழக்கின் கதாநாயகனாக செயல்பட்டு எந்த விதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் தேசத்தின் முன் மேற்கண்ட பயங்கரவாதிகளை அம்பலப்படுத்தினார் ஹேமந்த் கார்க்கரே!

ஆனால், மேற்கண்ட பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டனர் அத்வானியும் - ராஜ்நாத் சிங்கும். அதாவது மேற்கண்ட நேர்மையான அதிகாரிகள் மீது காழ்ப்புணர்ச்சியோடு பொய்களை வாரியிறைத்தனர். அவதூறுகளை அள்ளி வீசினர். சாத்வீ துன்புறுத்தப்படுவதாக கூக்குரல்களை எழுப்பினர். இந்த தேச மக்களுக்கு வேட்டு வைத்த ஒரு குற்றவாளியை துன்புறுத்தாமல் எப்படி விசாரிக்க முடியும் என்ற கலையை அத்வானிதான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டில் சிறுபான்மை மதத்தைச் சார்ந்த அமைப்புகளோ, நபர்களோ ஈடுபட்டிருந்தால் இந்நேரத்தில் அவர்களை உடனே தூக்கிலிடு என்று பெருத்த குரலெழுப்பியிருப்பார்கள் இந்த போலி பயங்கரவாத எதிர்ப்பு பாசாங்குவாதிகள்.

பயங்கரவாதம் என்பது வெளியிலிருந்து மட்டும் வருவதல்ல அது உள்ளிருந்தும் வரும் என்பதை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்திச் சென்றிருக்கும் ஹேமந்த் கார்க்கரே, தனது இறுதி சில மணி நேரங்களில் தனது நன்பரும் - துறைச் சார்ந்தவருமான கோவர்த்தனுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது. மும்பையில் தேசத்தையே உலுக்கிய பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடச் செல்லும் நேரத்தில் கூட, தனக்கு என்ன நேர்ந்தாலும் இந்த தேசம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தை மிகத் தெளிவாக தனது இறுதி சில மணி நேரத்தில் கூட கடமையாற்றியிருக்கும் இந்த மகத்தான வீரரின் வீரம் போற்றப்பட வேண்டியது. இது தேசத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்.

அதேபோல் பயங்கரவாத எதிர்ப்பு போரில் ஹேமந்த் கார்க்கரே மறைந்து விட்டார் என்ற உடன் குஜராத் முதல்வர் மோடி அந்த குடும்பத்திற்கு ஒரு கோடி தருவதாக கூறினார். ஆனால் அந்த குடும்பத்தினர் மோடியின் நிவாரணத்தை வாங்க மறுத்து விட்டனர்.

மோடி யார்? என்பது உலகிற்கே தெரியும் போது? அந்த தாய்குத் தெரியாமலே போகும்! எனது கணவர் இந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளார். அதற்கு மோடியின் ஒரு கோடி ஈடேறுமா? இந்த தியாகம் ஈடு இணையற்ற தியாகம் என்றே அவர் நினைத்திருக்கலாம்!

அது மட்டுமா? தேசமே இந்த சோகத்தை எப்படி எதிர் கொள்ளுவது என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூட்டப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அத்வானியும் - ராஜ்நாத் சிங்கும் பங்கேற்க மாட்டோம் என்று கூறியுள்ளதன் மூலம் இவர்களது அரசியல் சதிராட்டம் மீண்டும் அம்பலத்திற்கு வந்துள்ளது. பயங்கரவாதத்தை எப்படி எதிர்கொள்வது என்று பொறுப்புள்ள எதிர் கட்சி வெளியில்தான் பேசுவோம்! ஆனால் உள்ளரங்கில் ஜனநாயக ரீதியாக விவாதிக்கும் கூட்டத்தில் விவாதிக்க மாட்டோம் என்று சண்டித்தனம் செய்வதுதான் தேச பக்தியா? என்ற கேள்வி எழுகிறது.

அத்வானியும் - ராஜ்நாத் சிங்கும் இவ்வாறு கலந்து கொள்ளாதது யாரை காப்பாற்றுவதற்காக? என்ற கேள்வி இந்திய மக்கள் மனதில் எழுகிறது.

மொத்தத்தில் காவி பயங்கரவாதமும் இந்தியாவில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே என்பதை தனது நியாயமான புலன் விசாரணை மூலம் அம்பலப்படுத்தி - மும்பை பயங்கரவாதிகளையும் எதிர்த்து தனது உயிரை தியாகம் செய்துள்ள ஹேமந்த் கார்க்கரேவுக்கு எனது வீர வணக்கங்கள்.